என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சங்கராபுரம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி பலி
  X

  சங்கராபுரம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கராபுரம் அருகே விவசாயி பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.
  • பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  கள்ளக்குறிச்சி:

  சங்கராபுரம் அருகே உள்ள பொய்க்குணம் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (52), விவசாய கூலி தொழிலாளி. இவர் அதே ஊரில் உள்ள ஒரு தரைபாலத்தின் தடுப்புச்சுவரில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராமல் பாலத்தில் இருந்து தவறி கீழே பள்ளத்தில் விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×