என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு  நகர்மன்ற தலைவர் வழங்கினார்
  X

  கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார்.

  கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு நகர்மன்ற தலைவர் வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு நகர்மன்ற தலைவரால் வழங்கப்பட்டது.
  • நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகதலைவருமான சுப்ராயலுதலைமை தாங்கினார்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகதலைவருமான சுப்ராயலுதலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் அபுபக்கர், துணை தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 12-ஆ ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் சாய்பிரசன்னா 516 மதிப்பெண்களும், 2-வது இடம் ஹரீஷ் ராகவேந்திரா 515 மதிப்பெண்களும், 3-வது இடம் பிடித்த மூவேந்திரன் 506 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

  மேலும் 10- ஆம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பெற்ற சமீர் 466 மதிப்பெண்களும், 2வது இடம் பிடித்த பூவரசன் 433 மதிப்பெண்களும், மூன்றாவது இடம் பெற்ற அதியமான் 426 மதிப்பெண்ணும்பெ ற்றுள்ளனர். இவ்வாறு பள்ளியளவில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்3 இடங்களை பிடித்த மாணவர்களை நகர மன்ற தலைவர் சுப்ராயலு பாராட்டி ரொக்க பரிசு மற்றும் நினைவு பரிசு வழங்கினார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ராமசந்திரனுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது தி.மு.க. நகர துணை செயலாளர்அப்துல்ரசாக், இயக்குனர் அருண்கென்னடி, நகராட்சி கவுன்சிலர்கள் செல்வம்மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×