search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில்  வாலிபர் கைது
    X

    ராமு.

    தியாகதுருகம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

    • தியாகதுருகம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ராமுவின் செயலானது புது உச்சிமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதுடன் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 26), இவர் தனது உறவினருடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரை முன்விரோதத்தின் காரணமாக கடந்த மாதம் கொலை செய்தார். இந்த வழக்கில் காவல்துறையினரால் ராமு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் இந்நிலையில் ராமுவின் செயலானது புது உச்சிமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதுடன் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதாலும், இவர் வெளியே இருந்தால் வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவரது நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்கண்ட ராமுவை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் நேற்று ராமுவை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×