search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதிகளில் தங்கி கல்வி பயில  விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    X

    விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டகலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்நல அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் 23 பள்ளி விடுதிகள், 2 தொழில்நுட்ப கல்வி விடுதிகள் மற்றும் 1 கல்லூரி விடுதி ஆகிய விடுதிகளுக்கான புதிய மாணவ, மாணவியர்சேர்க்கை தேர்வுக்குழு மூலம் நடைபெற உள்ளது. மேலும் பள்ளி விடுதிகளில் 4- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பாலிடெக்னிக் மாணவர், மாணவிகளும் விடுதிகளில் தங்கி பயில எவ்வித செலவினமும் இல்லாமல், அனைத்து விடுதி மாணவ,மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும்சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதிமாணவிகளுக்கு பொருந்தாது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத்தமிழர்களின்குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை க்எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கலாம்.

    எனவே விடுதியில் தங்கி பயில விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் தங்கள்பயிலும் கல்வி நிலையங்களின் அருகில் உள்ள விடுதி காப்பாளரிடம்வி ண்ணப்பங்களை பெற்று தங்களின் உறுதிமொழி படிவம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அளிக்கும் உறுதிமொழி படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து தங்கள் பயிலும் கல்வி நிலைய தலைவரிடம் கையொப்பம் பெற்று பள்ளி விடுதி மாணவர்கள் வருகின்ற 06.07.2022-க்குள்மற்றும் கல்லூரி விடுதி மாணவர்கள் 31.08.2022- க்குள் விடுதி காப்பாளரிடம்அல்லது மாவட்டகலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சி றுபான்மையினர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×