சங்கராபுரம் அருகே - அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள்

சங்கராபுரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.கல்வீசி பேருந்து கண்ணாடியை உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 கல்வீசி உடைக்கப்பட்ட அரசு பஸ்சை படத்தில் காணலாம். 
 கல்வீசி உடைக்கப்பட்ட அரசு பஸ்சை படத்தில் காணலாம். 
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை வேலு என்பவர் ஓட்டினார். நடத்துநராக பாலகிருஷ்ணன் என்பவர் பணியில் இருந்தார்.

இந்த பஸ் கிடங்கல் பாண்டலம் வழியாக சென்றபோது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி உடைத்தனர்.

தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு, தொடர்ந்து கல்வீசி பேருந்து கண்ணாடியை உடைத்தவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com