என் மலர்
காஞ்சிபுரம்
சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால் கால்வாய் பணி நடந்து வருகிறது. இதில் டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் 15-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.
இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் போலீசில் புகார் செய்தார். அதில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இருந்தார்.
இதையடுத்து சமூக ஆர்வலர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் கைதை கண்டித்தும், சிட்லப்பாக்கம் பேரூராட்சியை கண்டித்தும் இன்று தி.மு.க.வினர் சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதற்கு புனித தோமையார் மலை ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி நிர்வாகத்தையும், போலீசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் தேவேந்திரன், லோகநாதன், அமுதா குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
மடிப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும்படி வடமாநில வாலிபர் ஒருவர் அலைந்து திரிவதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மடிப்பாக்கம் பஸ்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த மடிப்பாக்கம் போலீசார், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் திருடுவதற்காக வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.
உடனே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவருடைய பெயர் தேவேந்திர பியான் (21). ஒரிசா மாநிலம் பலேசோர் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
தொடர்ந்து விசாரித்த போது ஒரு போன் நம்பரை சொன்னார். அதன்மூலம் அந்த வாலிபரின் ‘பேஸ்புக்’ தொடர்பை போலீசார் கண்டுபிடித்தனர். ஐ.டி.ஐ. படித்த இவர் 20-நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு பிட்டர் வேலைக்காக சென்றதும், அங்கு ஏமாற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்தநிலையில் கேரளாவில் ரெயில் ஏறி சென்னை வந்த அவர் மடிப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த தேவேந்திரபியான் உறவினரும், நண்பர்களும் ஒரிசாவில் இருந்து மடிப்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் வாலிபர் தேவேந்திரபியான் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசாருக்கும், உறவினர்கள் வரும் வரை வாலிபருக்கு பாதுகாப்பு கொடுத்த தொண்டு நிறுவன பிரமுகர் நாராயணனுக்கும் வாலிபரின் உறவினரும் நண்பர்களும் நன்றி தெரிவித்தனர். #Facebook
தீபாவளி பண்டிகைக்காக நாட்டு ரக பட்டாசுகளை அதிக அளவில் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார், நேற்று பட்டாசுகளை பேக்கிங் செய்யும் பணியில் நேற்று மாலை மைதீன், அவரது மனைவி தாஹிரா பானு, மகன் முஷ்டாக் ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது மைதீன் டீ குடிப்பதற்காக வெளியே சென்றபோது பட்டாசுகளை திடீரென வெடித்தன, இதில் தாஹிரா பானு, மற்றும் முஷ்டாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மைதீன் வீட்டு சுவர் இடிந்து பக்கத்து வீட்டில் விழுந்தது. இதில் அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மஸ்தான் என்பவர் உயிரிழந்தார். வீட்டு வாசல் முன்பு அமர்ந்திருந்த மஸ்தானின் தாயார் சர்புதீன் பானு படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சர்புதீன் பானுவும் இறந்தார்.
இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து அனுமதியின்றி நாட்டு ரக பட்டாசுகளை வீட்டில் வைத்தது தொடர்பாக மைதீனை கைது செய்தனர்.
விபத்து குறித்து அறிந்ததும் அமைச்சர் பெஞ்சமின், மரகரம் குமரவேல் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தர மூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
வீட்டில் பட்டாசுகளை விற்பனைக்காக சேமித்து வைக்கக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் யாரேனும் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்தால் அது குறித்த தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளிக்குமாறும், இதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். #Firecrackers
சென்னையை அடுத்த மதுரவாயல், கங்கா நகரை சேர்ந்தவர் நாகூர் கனி(வயது 44). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி சோபிதாபேகம். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சோபிதாபேகம் தனது பிள்ளைகளுடன் சென்று விட்டார். வீட்டில் நாகூர்கனி மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து சோபிதா பேகம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது கணவர் தனது அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன நாகூர் கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்து விட்டதால் சரியான முறையில் வருமானம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் அவருக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த நாகூர் கனி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருவதாக மதுரவாயல் போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் நாகலூத்துமேட்டில் வசித்து வருபவர் மத்தின்பாய் (வயது 52). இவரது மனைவி தாஹிராபானு (45), மகன் முஸ்தாக் (22). தீபாவளி பண்டிகையையொட்டி மத்தின்பாய் வேலூர் மாவட்டம் நெமிலியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கிவந்தார். அவைகளை சில்லரை விற்பனைக்காக வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தார்.
அவை அனைத்தும் அனுமதி இல்லாமல் தயாரிக்கப்படும் நாட்டு வெடி வகையை சேர்ந்த பட்டாசுகள் என கூறப்படுகிறது. தாஹிராபானுவும், அவரது மகன் முஸ்தாக்கும் நேற்று மதியம் அந்த பட்டாசுகளை சில்லரை விற்பனைக்கு ஏற்றவகையில் பிரித்து சிறிய பாக்கெட்டுகளாக அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 3 மணியளவில் திடீரென அந்த பட்டாசுகள் தீப்பிடித்துக் கொண்டன. இதனால் அடுத்தடுத்து பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் சரமாரியாக வெடித்து நாலாபுறமும் சிதறின. சுமார் 15 நிமிடங்களுக்கு அந்த பட்டாசுகள் வெடித்தன. இதில் தாஹிராபானு, முஸ்தாக் ஆகியோர் மீது தீப்பற்றி உடல் கருகியது. சிறிது நேரத்திலேயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த வெடி விபத்தில் அருகில் வசிக்கும் மஸ்தான் (47) என்பவரின் வீட்டு சுவரும் இடிந்துவிழுந்தது. இதில் மஸ்தான் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அந்த வீட்டின் வெளியே உட்கார்ந்து இருந்த அவரது தாய் சர்புதீன்பீபி (75) படுகாயம் அடைந்தார். பின்னர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்தடுத்த 2 வீடுகளிலும் தாய்-மகன் பலியாகியுள்ளனர்.
பயங்கர வெடி சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இந்த வெடி விபத்தில் மத்தின்பாய் வீடும், மஸ்தான் வீடும் பெருத்த சேதமடைந்தன. மேலும் எதிர்வீட்டில் உள்ள ஜன்னல்களும் நொறுங்கின.
காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் சம்பவ இடத்தில் இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் அவர்களிடம் உள்ளதா? வெடி விபத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் விசாரணை நடத்தினார். விசாரணையில் அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மத்தின்பாயை போலீசார் கைது செய்தனர்.
நாட்டு வெடி வகை பட்டாசு என்பதால் உராய்வு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். ஆனாலும் தீப்பிடித்ததற்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது பற்றி தீயணைப்பு வீரர்களும் விசாரணை நடத்துகிறார்கள்.
இந்த கோர சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, தாசில்தார் காஞ்சனமாலா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கே.மரகதம்குமரவேல் எம்.பி., மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
காஞ்சீபுரத்தில் பட்டபகலில் நடந்த இந்த பயங்கர வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் நாகலு தெருவில் இருக்கும் சைரா பானு என்பவர் தீபாவளி சீட்டுபோட்டு, பட்டாசு விநியோகம் செய்து வந்துள்ளார். அதற்கென அவரது வீட்டில் வாங்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்ததில், சைரா பானுவின் மகன்கள் உட்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சோழிங்கநல்லூர்:
துரைப்பாக்கம் அரசு பள்ளி எதிரே நேற்றிரவு வாலிபர் ஒருவர் மண்ணெய் கேனுடன் வந்து நின்றார்.
திடீர் என்று அவர் உடலில் மண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். பற்றி எரிந்த தீயுடன் அலறி துடித்தார்.
இதை பார்த்த மக்கள் அருகில் உள்ள துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல் கருகிய நிலையில் கிடந்த அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார். யார்? எதற்காக தீக்குளித்தார் என்பது தெரியவில்லை.
இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்னை ஒன் ஐடி நிறுவனம் உள்ளது. இங்கு 7-வது மாடியில் ஏ.சி.யை பழுது பார்த்து புதியதாக மாற்றும் வேலை நடந்தது.
துரைபாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் உள்பட 4 பேர் ஏ.சி. பொருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 7-வது மாடியில் இருந்து பிரகாஷ் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை முல்லை நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் ஆவடியில் உள்ள படை உடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் ரேணுகாதேவி (வயது 18). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ரேணுகாதேவி படிப்பில் கவனம் செலுத்தாமல் தூங்கியதாக தெரிகிறது. இதனால் அவரை அனிதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகாதேவி நேற்று காலை வயிறு வலிப்பதாக கூறி பள்ளிக்கு விடுமுறை எடுத்துவிட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் ரேணுகாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது28) சென்னையில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் ஆயுதபூஜை கொண்டாட மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்றார். பண்டிகை விடுமுறை முடிந்து அவர் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். மாமல்லபுரம் பைபாஸ் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச் சுவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரன் உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் சாந்தி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகன் சாய்ஸ்ரீவத்சன் (வயது 15). இவர், தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
சாய்ஸ்ரீவத்சன், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் தங்க பதக்கம் பெற்று உள்ளார். தற்போது மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களாக கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்து வந்தார்.
நேற்று காலை தந்தை ஸ்ரீதருடன் சாய்ஸ்ரீவத்சன், கிண்டியில் உள்ள நீச்சல் குளத்துக்கு வந்தார். சாய்ஸ்ரீவத்சன் தனியாகவும், அவரது தந்தை ஸ்ரீதர் தனியாகவும் நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென சாய்ஸ்ரீவத்சனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நீச்சல் குளத்தில் இருந்து கரையேறி வந்த அவர், மயங்கி விழுந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை ஸ்ரீதர் மற்றும் அங்கு நீச்சல் பயிற்சிக்கு வந்தவர்கள் சாய்ஸ்ரீவத்சனை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சாய்ஸ்ரீவத்சன் பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் ஹரீஷ் (வயது 29). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் குரோம்பேட்டையை சேர்ந்த பிரவீன் (29). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மதியம் காரில் புதுச்சேரி நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். ஹரீஷ் காரை ஓட்டினார்.
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை இவர்களது கார் முந்தி செல்ல முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் பிரவீன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






