search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு விபத்து நடந்த இடத்தை அமைச்சர் பெஞ்சமின் பார்வையிட்டார்
    X
    பட்டாசு விபத்து நடந்த இடத்தை அமைச்சர் பெஞ்சமின் பார்வையிட்டார்

    வீட்டில் பட்டாசுகளை விற்பனைக்காக சேமித்து வைக்கக்கூடாது - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    வீட்டில் பட்டாசுகளை விற்பனைக்காக சேமித்து வைக்கக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் யாரேனும் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்தால் காவல் நிலையத்தில் தகவல் அளிக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். #Firecrackers
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நாகலுத்து தெருவில் வசித்து வந்தவர் மைதீன் (52). இவர் அந்த பகுதியில் பட்டாசு விற்பனை தொழில் செய்து வருகிறார்.

    தீபாவளி பண்டிகைக்காக நாட்டு ரக பட்டாசுகளை அதிக அளவில் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார், நேற்று பட்டாசுகளை பேக்கிங் செய்யும் பணியில் நேற்று மாலை மைதீன், அவரது மனைவி தாஹிரா பானு, மகன் முஷ்டாக் ஆகியோர் ஈடுபட்டனர்.

    அப்போது மைதீன் டீ குடிப்பதற்காக வெளியே சென்றபோது பட்டாசுகளை திடீரென வெடித்தன, இதில் தாஹிரா பானு, மற்றும் முஷ்டாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் மைதீன் வீட்டு சுவர் இடிந்து பக்கத்து வீட்டில் விழுந்தது. இதில் அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மஸ்தான் என்பவர் உயிரிழந்தார். வீட்டு வாசல் முன்பு அமர்ந்திருந்த மஸ்தானின் தாயார் சர்புதீன் பானு படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சர்புதீன் பானுவும் இறந்தார்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து அனுமதியின்றி நாட்டு ரக பட்டாசுகளை வீட்டில் வைத்தது தொடர்பாக மைதீனை கைது செய்தனர்.

    விபத்து குறித்து அறிந்ததும் அமைச்சர் பெஞ்சமின், மரகரம் குமரவேல் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தர மூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    வீட்டில் பட்டாசுகளை விற்பனைக்காக சேமித்து வைக்கக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் யாரேனும் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்தால் அது குறித்த தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளிக்குமாறும், இதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். #Firecrackers
    Next Story
    ×