என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து 79 ஆயிரத்து 117 பேர், பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 20 ஆயிரத்து 277 பேர், இதர வாக்காளர்கள் 494 பேர் என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 99 ஆயிரத்து 888 பேர் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத் தில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
கும்மிடிப்பூண்டி:- ஆண்கள்-131293, பெண்கள்- 136956, பிற இனத்தினர்-33, மொத்தம்-268282.
பொன்னேரி:- ஆண்கள்-125075, பெண்கள்-129710, பிற இனத்தினர்-63, மொத்தம்-254848.
திருத்தணி:- ஆண்கள்-136323, பெண்கள்-140766, பிற இனத்தினர்-27, மொத்தம்-277116.
திருவள்ளூர்:- ஆண்கள்-127952, பெண்கள்-133931, பிற இனத்தினர்-23, மொத்தம்-261906.
பூந்தமல்லி:-ஆண்கள்- 165614, பெண்கள்-169973, பிற இனத்தினர்-48, மொத்தம்-335635.
ஆவடி:- ஆண்கள்-205964, பெண்கள்-207193, பிற இனத்தினர்-89, மொத்தம்-413246.
மதுரவாயல்:- ஆண்கள்-210957, பெண்கள்- 206560, பிற இனத்தினர்-119, மொத்தம்-417636.
அம்பத்தூர்:- ஆண்கள்- 182439, பெண்கள்- 181518, பிற இனத்தினர்-89, மொத்தம்-364046.
மதுராந்தகம்:- ஆண்கள்- 212641, பெண்கள்-213399, பிற இனத்தினர்-93, மொத்தம்-426133.
திருவொற்றியூர்:- ஆண்கள்-143091, பெண்கள்-146181, பிற இனத்தினர்-132, மொத்தம்-289404.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கபிலா. பட்டதாரியான இவர் பத்திரகாளி அம்மனுக்கு கோவில் கட்டி பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.
இவரது கோவில் கும்பாபிஷேகத்தின்போது நல்ல பாம்புகளை கொண்டு சர்ப்ப சாந்தி என்னும் நாக பூஜை நடந்தது.
அப்போது பாம்பை கழுத்தில் சுற்றியபடி அருள் வாக்கு கூறியிருக்கிறார்.
தற்போது பாம்புடன் இருக்கும் கபிலாவின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் பாம்புகளை பிடித்து வைத்திருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிரிஜா லாவுக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவுப்படி செங்கல்பட்டு வன சரகர் பாண்டுரங்கன் தலைமையிலான வனத்துறையினர் சாமியார் கபிலாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வன விலங்குகள் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கபிலாவை வனத்துறையினர் கைது செய்தனர்.
எனக்கு 1999-ம் ஆண்டு சாமி அருள் வந்தது. 2000-ம் ஆண்டு கோவில் கட்டினேன். 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 2018-ம் ஆண்டு 2-வது கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது சர்பசாந்தி பூஜைக்காக நாகத்தை கொண்டு வர செய்தோம். பூஜையின் போது பாம்பை கண்டு நானே பயந்தேன்.
சாமியின் அருள் வந்தபோது அம்மனே பாம்பை வாங்கி இருக்கிறார். அம்மன் கேட்டதால்தான் எனது கழுத்தில் பாம்பை சுற்றி உள்ளனர்.
பாம்பை வைத்து பூஜை செய்தது தவறு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பாம்பை கொண்டு வரவில்லை. பூஜைக்காக மட்டுமே பாம்பை வரவழைத்தோம்.
எனது பெயரை கெடுப்பதற்காக யாரோ தவறுதலாக இந்த வேலையை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவிலை விளம்பரப்படுத்துவதற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் பாம்புடன் உள்ள வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர்.
வன விலங்கு தடுப்பு சட்டத்தில் நல்ல பாம்பு உள்ளது. அதனை காட்சிப்படுத்துவதோ, வணிக ரீதியாக பயன்படுத்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது. இது அபராதம் விதிக்கக் கூடிய குற்றம் அல்ல. நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கக்கூடிய குற்றம். எனவே பெண் சாமி கபிலா கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றனர்
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மரக்காணத்தில் இருந்து சென்னைக்கு இளநீர் ஏற்றி வந்த மினி லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் எதிரே வந்த தனியார் பஸ் மினி லாரி மீது மோதியது.
இதில் லாரியை ஓட்டி வந்த மரக்காணம் பகுதியை சேர்ந்த அய்யனார் (வயது 37) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பஸ் டிரைவர் உட்பட 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
படப்பை:
படப்பையை அடுத்த சோமங்கலம் மேட்டூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் குசேலன். இவரது மகன் திருமூர்த்தி (வயது 22). இவர் உயர்ரக செல்போன்களை திருடி விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு செல்போன் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தார். திருமூர்த்தி வேலைக்கு எங்கும் செல்லாமல் குடித்து விட்டு ஊதாரி தனமாக ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரது தந்தை, திருமூர்த்தியை கண்டித்துள்ளார்.
இதில் மனம் உடைந்த திருமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
படப்பை:
படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் அருண் என்கிற அருண் குமார்.
இவர் மீது மணிமங்கலம், சோமங்கலம், ஒரகடம், ஓட்டேரி உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த ரவுடி அருண்குமாரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அருண் குமார் தனது கூட்டாளிகளுடன் படப்பை அடுத்த மணிமங்கலம் ஏரியில் உள்ள சவுடு மண் குவாரிக்கு சென்று அங்கு இருந்த காசாளரை கத்தியால் தாக்கி ரூ. 1 லட்சத்து 96 ஆயிரம் மற்றும் 2 செல்போன் ஆகியவற்றை கொள்ளயடித்து சென்றனர்.
இதுகுறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை தேடி வந்தனர்.
ஆதனுர் கூட்டு சாலையில் மறைந்து இருந்த ரவுடி அருண்குமார் மற்றும் கூட்டளி சுரேஷ் ஆகிய 2 பேரை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த சாலவாக்கம் அருகே சிறுதா முர்பட்டா காலனி பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (55).
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்கா தரன் என்பவரது மகன் கிருஷ்ணாவுக்கும் (25) முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7.11.2014 அன்று பச்சையப்பனை கிருஷ்ணா கொலை செய்தார்.
இதையடுத்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அரசு தரப்பில் சாட்சிகளை ஆஜர் செய்தனர். இரு தரப்பிலும் விசாரணை செய்ததில் கொலை வழக்கு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணாவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் வழங்கி காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.கயல்விழி தீர்ப்பு வழங்கினார்.
ரூ.25 ஆயிரம் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத காலம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.இளவரசு ஆஜரானார். கிருஷ்ணா புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 48). வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு அவர் இரும்புலியூரில் உள்ள டயர் ஷோரூம் முன்பு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஷோரூம் ஊழியர்கள் சுந்தர்ராஜனை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜன் அருகில் கிடந்த கல்லை ஷோரூம் கண்ணாடி மீது வீசினார். இதில் கண்ணாடி உடைந்தது.
இதுபற்றி ஷோரூம் ஊழியர்கள் தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சுந்தர் ராஜனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து சுந்தர்ராஜனை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி விட்டனர்.
இரவு வீட்டுக்கு சென்ற அவர் தூங்கி விட்டார். காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் எழவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுந்தர்ராஜன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீஸ் தாக்கியதால் தான் சுந்தர்ராஜன் இறந்ததாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் ஏராளமானோர் தாம்பரம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
போலீஸ் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். இது குறித்து சுந்தர்ராஜனின் உறவினர் ஒருவர் கூறும்போது, ‘போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சுந்தர்ராஜன் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார்.
அவரது உடலில் காயங்கள் இருந்தன. போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்து உள்ளார். அவருக்கு எந்த இருதய பாதிப்பும் கிடையாது’ என்றனர்.
சுந்தர்ராஜன் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ் பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
தாம்பரம் சண்முக சாலையில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.
இதில் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வினரின் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, இதயவர்மன், வரலட்சுமி மதுசூதனன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மீது அனுமதி யின்றி போராட்டத்தில் ஈடுபட்டது, ஒரே இடத்தில் அதிக பேர் கூடியது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகத்துக்கு வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுராந்தகத்தில் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்கம் சார்பில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழுவதும் மூடப்பட்டன.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தேரடி வீதி, சூனாம்பேடு சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ஆஸ்பத்திரி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார்.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள சதானந்தபுரம் ஏரியில் பல வருடங்களாக முதலைகள் வசித்து வருகின்றன. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரையிலும் ஏரியில் உள்ள முதலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடிக்காமல் இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் முதலைகள் வழக்கம்போல் ஏரியின் நடுவே உள்ள திட்டு பகுதியில் மதிய நேரத்தில் வந்து உறங்குகிறது. மேலும் இரவு நேரங்களில் ஏரியின் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து அங்கு வீடுகளில் உள்ள கால்நடைகளை வேட்டையாடி செல்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.
உயிர் பலி ஏற்படாமல் தடுக்கும் வகையில் சதானந்தபுரம் ஏரியில் உள்ள முதலைகளை உடனடியாக பிடித்து அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடிப்பாக்கம் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது19). தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் மோட்டார்சைக்கிளில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர் வந்த மோட்டார்சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் வெளிமாநில மதுபாட்டில்களை மர்ம நபர்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சோமங்கலம் போலீசார் படப்பை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் வீட்டில் வெளிமாநில மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






