என் மலர்
செய்திகள்

விபத்து
மாமல்லபுரம் அருகே பஸ்-மினி லாரி மோதல்: டிரைவர் மரணம்
மாமல்லபுரம் அருகே தனியார் பஸ் மினி லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மரக்காணத்தில் இருந்து சென்னைக்கு இளநீர் ஏற்றி வந்த மினி லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் எதிரே வந்த தனியார் பஸ் மினி லாரி மீது மோதியது.
இதில் லாரியை ஓட்டி வந்த மரக்காணம் பகுதியை சேர்ந்த அய்யனார் (வயது 37) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பஸ் டிரைவர் உட்பட 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story