என் மலர்
ஈரோடு
பவானி:
பவானி பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் சுதாகர் (வயது 22.) இவர் காடையாம்பட்டியில் உள்ள தனியார் லேத் பட்டறையில் வேலை செய்தார். நேற்று மதியம் மீன் பிடிப்பதற்காக மூலப்பாளையம் ஆற்றங்கரைக்கு சென்றார்.
அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் இறங்கிய அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
அந்த பகுதியை சேர்ந்தவர்களும், மீனவர்களும் சேர்ந்த ஆற்றில் மூழ்கி இறந்த சுதாகர் உடலை மீட்டனர்.
அவரது உடல் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அனுமன் நகரை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 25). இவரது கணவர் பெயர் கேசவராஜ் சென்னிமலையை சேர்ந்தவர், 4 மாத கர்ப்பிணியாக இருந்ததால் தேன்மொழி தனது பெற்றோர் ஊரான டி.என்.பாளையம் அனுமன் நகருக்கு வந்து தங்கினார்.
கடந்த 3 மாதத்துக்கு முன் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிரணவ்வர்ஷன் என்று பெயர் சூட்டினார்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வீட்டில் இருந்த தேன்மொழி திடீரெனதனது உடல் மீதும் தனது குழந்தை மீதும் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் இருவரது உடல் முழுவதும் தீ மள...மள...வென பிடித்து உடல் கருகி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கரிக்கட்டையாக கிடந்த தேன்மொழி மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தேன்மொழி எதற்காக தனது கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலையில் உள்ள வெள்ளோடு ரோட்டில் பூங்காநகர் உள்ளது. இங்கு வசிப்பவர் நடராஜ். இவர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள காந்தி நகரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சவுந்திரராஜன் (வயது 23). இவர் பட்ட வகுப்பு முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு வீட்டில் இருந்து வந்தார்.
சவுந்திரராஜன் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த சிலருடன் சென்னிமலையில் இருந்து உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில் கணபதிபாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது அவருடன் வந்த ஒருவர் தனது மகனுக்கு நீச்சல் பழக்கிக் கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் சவுந்திரராஜன் குளிக்க வாய்க்காலில் இறங்கியுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் வாய்க்காலில் மூழ்கிவிட்டார். உடனே அவருடன் வந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவரது உடல் தண்ணீரில் மூழ்கிவிட்டதால் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாய்க்காலில் இறங்கி தேடினர். ஆனால் அவரை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. அந்த இடத்தில் சேற்றில் சிக்கியிருந்து இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர்.
இதுகுறித்து அவரது தந்தை நடராஜ் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு வந்து அவரது உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி மொடச்சூர் பெரியார்நகர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் சரண் (வயது 14). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதி நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர்கோபாலகிருஷ்ணன்.இவரது மகன் ஸ்ரீராம் (14) இவனும் அதே பள்ளியில் படித்து வருகிறான். இரு மாணவர்களும் நண்பர்கள்.
கடந்த 11-ந் தேதி நண்பர்கள் இருவரும் பள்ளிக் கூடம் சென்றனர். ஆனால் மாலை வீடு திரும்பி வர வில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.
மேலும் நண்பர்கள் வீடு உறவினர் வீடுகளில் தேடியும் மாணவர்கள் கிடைக்க வில்லை. இதனால் பதட்டம் அடைந்த சரணின் தந்தை வெள்ளியங்கிரி இதுகுறித்து கோபி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 மாணவர்களையும் தேடி வருகிறார்கள்.
பாடம் படிக்க கஷ்டமாக இருந்ததால் வீட்டை விட்டு வெளியேறினார்களா? வேறு என்ன காரணத்துக்காக மாயமானார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாயமான மாணவர்களை தேடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) கிராம சபா கூட்டம் நடக்கிறது.
கிராமசபா கூட்டம் பற்றி மக்களிடையே குறிப்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் மேம்பாட்டு திட்ட சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு சமுதாய கடமை ஆற்ற வேண்டும்.
மேலும் ஊராட்சிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, திறந்த மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து விபத்துக்கள் நிகழ்வதைத் தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குதல், தூய்மைப்பணி மேற்கொள்ளுதல் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழித்தல் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் குறித்து அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் கேட்டு கொண்டுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று ராகுல்காந்தி சென்னை வந்தார். அவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு தமிழக அரசு சரியான பாதுகாப்பு தரவில்லை. பொதுமக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு ராகுல்காந்தி தள்ளப்பட்டுவிட்டார்.

இந்தியாவில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ராகுல் காந்திக்கு ஏன் பாதுகாப்பு தரவில்லை? என எழுதி வருகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளவருக்கு பாதுகாப்பு குளறுபடியா? இது சகித்துக்கொள்ள முடியாது. இதை உயர்மட்ட விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiFuneral #Congress #RahulGandhi #EVKSElangovan
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். தமிழகம் முழுவதும் கருணாநிதியும் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மவுன ஊர்வலமும் இரங்கல் கூட்டமும் நடந்து வருகிறது.
கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள், சுவரொட்டி விளம்பரங்களும் தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி இறப்புக்கு இரங்கல் தெரிவித்து பிளக்ஸ் பேனர்கள், சுவரொட்டி விளம்பரம் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் அந்த 2 பிளக்ஸ் பேனர்களையும் கிழித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான தி. மு.க. நிர்வாகிகள் திரண்டனர்.
மேலும் இது குறித்து ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருணாநிதி பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53) இவர் டிவிஎஸ் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
நீதி மோகன் என்பவர் இவரது ஜவுளிக்கடையில் 18 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கும், நீதி மோகனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து நீதி மோகனுக்கு ஈரோடு நாடார் மேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஈரோடு கனி மார்க்கெட்டில் ஒன்றாக இணைந்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.
பின்னர் நீதி மோகனுக்கும் சக்திவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் நீதி மோகனுக்கு ஆதரவாக திருநாவுக்கரசு சமரசம் பேசினார்.
இதனால் திருநாவுக்கரசர் மீது சக்திவேல் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சக்திவேல், கள்ளுக்கடை மேடு பகுதியைச் சேர்ந்த காதர் ஷெரிப் மற்றும் முஸ்தபா ஆகியோர் மூலபாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கு சென்றனர்.
அங்கு திருநாவுக்கரசின் கழுத்தில் கத்தியை வைத்து, ‘‘உன்னால்தான் எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால் ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும்’’ என்று கேட்டு மிரட்டினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். இதனால் பயந்து போன சக்திவேல், காதர் ஷெரிப், முஸ்தபா ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து திருநாவுக்கரசு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்திவேல், காதர் ஷெரிப், முஸ்தபா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலையில் மழை பெய்தபோது வீசிய சூறாவளிக் காற்றில் மேற்கூரை தூக்கி வீசப்பட்டதில் மின் கம்பி அறுந்தது. சில இடங்களில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று மாலையில் சென்னிமலை டவுன் மற்றும் சுற்று வட்டாரத்தில் திடீரென மழை பெய்தது . அப்போது கடுமையான சூறாவளிக் காற்று வீசியது.
இதனால் தினசரி மார்க்கெட் எதிரில் உள்ள இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து ரோட்டோரம் விழுந்தது. ஈங்கூர் ரோட்டில் பத்திரபதிவு அலுவலகம் முன் இருந்த பெரிய மரத்தின் கிளையும் முறிந்து ரோட்டில் விழுந்தது.
இதனால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னிமலை அடுத்துள்ள முருங்கக்காடு பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றில் அங்குள்ள ஒரு தகர செட்டின் மேற்கூரை காற்றில் பறந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் மின் கம்பத்தின் மேல் பகுதியில் உள்ள இரும்பு தகடுகள் மற்றும் சில மின் சாதனங்கள் சேதம் அடைந்தன. அருகில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மின் கம்பிகள் அறுந்து தொங்கியது . இதனால் மின் தடை ஏற்பட்டு அப்பகுதியேகும் மிருட்டானது.
இதனால் பொதுமக்கள் இரவில் இருட்டில் தவித்தனர். மின்வாரிய பணியாளர்கள் அவ்விடத்துக்கு இன்று வந்து பார்த்து சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
aadi amavasai today pitru tharpanam
aadi amavasai, pitru tharpanam, amavasai, ஆடி அமாவாசை, தர்ப்பணம், அமாவாசை,
இன்று ஆடி அமாவாசை தினம் ஆகும். இதையொட்டி காவிரி ஆறு பாயும் இடங்களில் எல்லாம் முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்தனர்.
இதற்காக மூன்று நதிகள் சங்கமிக்கும் தென்னக திரிவேணி சங்கமாக போற்றப்படும் ஈரோட்டை அடுத்த பவானி கூடுதுறையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது.
ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் பஸ் மற்றும் வாகனங்களில் பவானி கூடுதுறைக்கு வந்து குவிந்தனர்.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரியில் வெள்ளம் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே மக்கள் பாதுகாப்பாக நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆற்றுக்குள் அதிக தூரத்துக்கு மக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆற்றின் ஓரமாக தொட்டியும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் மக்கள் நீராடினர். சிலர் தடுப்பு வேலிக்குள் நின்று ஆற்றில் நீராடினர்.
பின்னர் தங்களது தாய், தந்தை, தாத்தா, பாட்டி என முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பிறகு அவர்கள் திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
கன்னி பெண்களும் இன்று தங்கள் பெற்றோருடன் வந்து காவிரியில் நீராடி தங்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமைய வேண்டும். தடை நீங்கி திருமணம் நடக்க வேண்டும் என வழிபட்டனர்.

ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி விவசாயம் செழிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட விவசாயிகள் பலரும் வந்த காவிரி நீராடி வழிபட்டனர்.
ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பவானி ஆற்றங்கரை முழுவதும் இன்று மக்கள் கூட்டமாக தென்பட்டது. வாகனங்களில் வருபவர்களுக்கு வசதியாக வாகனங்கள் நிறுத்த இட வசதியும் செய்யப்பட்டிருந்தது. கோவிலின் முன்பும் பின் புறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் மேற்பார்வையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் பொதுமக்களிடம் தங்கள் உடமைகளையும், தாங்கள் அழைத்து வந்த குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளும்படி மைக்கில் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய் தபடி இருந்தனர். தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாசூர் ரெயில் நிலைய யார்டில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் வந்தது. அவர் இது தொடர்பாக ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. நீலம், சிவப்பு, வெள்ளை நிற கோடு போட்ட அரைக்கை டீ சர்ட்டும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்த அவர் சுமார் 160 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர். அவரது இடது பக்க மார்பில் ஒரு மச்சமும், நடு முதுகில் மச்சமும், வலது விலாவில் ஒரு மச்சமும் உள்ளது. இது குறித்து ஈரோடு ரெயில் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோபி பாரியூர் ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக மதுக்கடை உள்ளது. இங்கு சூப்பர் வைசராக பணி புரிபவர் ஜோதிலிங்கம் (வயது 43).
கடையில் விசு, மூர்த்தி, மோகனசந்தரம் ஆகிய 3 பேர் விற்பனையாளர்களாக பணி புரிகிறார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அன்று மதுக்கடை மூடப்பட்டது. கடையை மூடி கொண்டு உள்ளே சூப்பர்வைசர் உள்பட 4 பேர் இருந்தனர்.
அப்போது மாலை 4 மணிக்கு அதேபகுதியை சேர்ந்த காளிமுத்து, ஏசுதாஸ் ஆகிய 2 பேர் வந்தனர். அவர்கள் மதுக்கடை கதவை தட்டினர்.
உள்ளே இருந்த ஊழியர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் வந்த 2 பேர் ‘‘எங்களுக்கு 25 பெட்டி பிராந்தி வேண்டும்’’ என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் ‘‘இன்று மது விற்பனை கிடையாது. தர மாட்டோம்’’ என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்பார்வையாளர் ஜோதிலிங்கம் கதவு ஷட்டரை வேகமாக இழுத்து மூடினார். அப்போது கதவு இடுக்கில் அவரது கை மாட்டி காயம் ஏற்பட்டது.
இது குறித்து சூப்பர் வைசர் ஜோதிலிங்கம் கோபி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து காளிமுத்து, எசுதாஸ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews






