search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Three Arrested In Erode"

    கலர் ஜெராக்ஸ் எடுத்து 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எந்திரம், மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பங்களாப்புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் 3 பேர் சாப்பிட சென்றனர். பின்பு அதில் ஒருவர் சாப்பிட்டதற்கான பில் தொகைக்காக ரூ.2 ஆயிரத்தை ஓட்டல் உரிமையாளரிடம் கொடுத்தார். அது கள்ளநோட்டாக இருக்குமோ? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.

    தொடர்ந்து அவர்கள் 3 பேரும் திடீரென அங்கிருந்து ஓடினார்கள். இதனால் ஓட்டல் உரிமையாளர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் அவர்களை விரட்டி சென்று பிடித்து பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தார்கள்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த சதீஷ் (வயது 32), பெருமாநல்லூர் கணக்கரசம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (31), புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (33) என்பது தெரியவந்தது.

    3 பேரும் நண்பர்கள். திருப்பூரில் உள்ள பிரிண்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த அவர்கள் வேலையை விட்டுவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டி.என்.பாளையம் வந்தனர். வேலைக்கு செல்வதாக கூறி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை 3 பேரும் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

    தொடர்ந்து வீட்டில் வைத்து 100 ரூபாய் நோட்டுகள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கடந்த 2 நாட்களாக புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். அதில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்றபோதுதான் 3 பேரும் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜெராக்ஸ் எந்திரம், மடிக்கணினி, பிரிண்டர், 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 58, 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 31 என மொத்தம் 67 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் வேறு எங்கெல்லாம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ஈரோட்டில் ரூ.2 லட்சம் பணம் கேட்டு ஜவுளிக்கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53) இவர் டிவிஎஸ் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார்.

    நீதி மோகன் என்பவர் இவரது ஜவுளிக்கடையில் 18 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கும், நீதி மோகனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து நீதி மோகனுக்கு ஈரோடு நாடார் மேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஈரோடு கனி மார்க்கெட்டில் ஒன்றாக இணைந்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

    பின்னர் நீதி மோகனுக்கும் சக்திவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த வி‌ஷயத்தில் நீதி மோகனுக்கு ஆதரவாக திருநாவுக்கரசு சமரசம் பேசினார்.

    இதனால் திருநாவுக்கரசர் மீது சக்திவேல் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சக்திவேல், கள்ளுக்கடை மேடு பகுதியைச் சேர்ந்த காதர் ஷெரிப் மற்றும் முஸ்தபா ஆகியோர் மூலபாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கு சென்றனர்.

    அங்கு திருநாவுக்கரசின் கழுத்தில் கத்தியை வைத்து, ‘‘உன்னால்தான் எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால் ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும்’’ என்று கேட்டு மிரட்டினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். இதனால் பயந்து போன சக்திவேல், காதர் ஷெரிப், முஸ்தபா ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து திருநாவுக்கரசு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்திவேல், காதர் ஷெரிப், முஸ்தபா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    ×