என் மலர்

  செய்திகள்

  தர்ப்பணம் செய்த பொருட்களை தண்ணீரில் விடுவதையும் படத்தில் காணலாம்.
  X
  தர்ப்பணம் செய்த பொருட்களை தண்ணீரில் விடுவதையும் படத்தில் காணலாம்.

  இன்று ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்று ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
  இன்று ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள்

  aadi amavasai today pitru tharpanam

  aadi amavasai, pitru tharpanam, amavasai, ஆடி அமாவாசை, தர்ப்பணம், அமாவாசை,


  இன்று ஆடி அமாவாசை தினம் ஆகும். இதையொட்டி காவிரி ஆறு பாயும் இடங்களில் எல்லாம் முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்தனர்.  இதற்காக மூன்று நதிகள் சங்கமிக்கும் தென்னக திரிவேணி சங்கமாக போற்றப்படும் ஈரோட்டை அடுத்த பவானி கூடுதுறையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது.

  ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் பஸ் மற்றும் வாகனங்களில் பவானி கூடுதுறைக்கு வந்து குவிந்தனர்.

  தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரியில் வெள்ளம் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே மக்கள் பாதுகாப்பாக நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

  ஆற்றுக்குள் அதிக தூரத்துக்கு மக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆற்றின் ஓரமாக தொட்டியும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் மக்கள் நீராடினர். சிலர் தடுப்பு வேலிக்குள் நின்று ஆற்றில் நீராடினர்.

  பின்னர் தங்களது தாய், தந்தை, தாத்தா, பாட்டி என முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பிறகு அவர்கள் திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

  கன்னி பெண்களும் இன்று தங்கள் பெற்றோருடன் வந்து காவிரியில் நீராடி தங்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமைய வேண்டும். தடை நீங்கி திருமணம் நடக்க வேண்டும் என வழிபட்டனர்.


  ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் குளித்து தர்ப்பணம் செய்வதற்காக குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.


  ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி விவசாயம் செழிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட விவசாயிகள் பலரும் வந்த காவிரி நீராடி வழிபட்டனர்.

  ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பவானி ஆற்றங்கரை முழுவதும் இன்று மக்கள் கூட்டமாக தென்பட்டது. வாகனங்களில் வருபவர்களுக்கு வசதியாக வாகனங்கள் நிறுத்த இட வசதியும் செய்யப்பட்டிருந்தது. கோவிலின் முன்பும் பின் புறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

  பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் மேற்பார்வையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  போலீசார் பொதுமக்களிடம் தங்கள் உடமைகளையும், தாங்கள் அழைத்து வந்த குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளும்படி மைக்கில் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய் தபடி இருந்தனர். தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  Next Story
  ×