என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு பெரியார்நகர் சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் ராஜ்கலைமணி. இவரது மகன் சரவணன் (23).
இவர் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இதன் காரணமாக சரவணன் மனம் உடைந்து போனார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பவானி ஆற்று வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு ஈஸ்வரன் நிரூபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 5 நாட்களாக வாழை, மஞ்சள், கரும்பு ஆகியவை தண்ணீரில் மூழ்கி அழுகி போய் விட்டது.
பவானி ஆற்றில் இருந்து வரும் உபரி நீரை கிளை வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட உட் பகுதியில் உள்ள குளம்- குட்டைகளை நிரப்ப வேண்டும். இதற்கான திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால் உபரி நீர் பாதிப்பு குறையும். கடலில் வீணாக சென்று கலக்காமல் நிலத்தடி நீரம் அதிகமாகி தண்ணீர் பஞ்சம் குறைய வாய்ப்பு ஏற்படும்.
இப்படிப்பட்ட திட்டங்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் கொடுக்கும் வாக்குறுதிகளாகவே உள்ளது.
இன்னொரு முறை உபரி நீர் வெளியேறாமல் பயன்படுகிற உபயோகப்படுத்துகிற நோக்கிலேயே திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் துரைராஜா, மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் மலைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் மைசூர் மகாதேவ புரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 36). இவர் நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வந்தார். பிறகு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
நேற்று காலை அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டார். அதன் பிறகு அறையை திறந்து அவர் வெளியே வரவே இல்லை.
இது குறித்து ஊழியர்கள் லாட்ஜ் மேலாளரிடம் கூறினர். லாட்ஜ் மேலாளர் முருகேசன் இது பற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு புகார் கூறினார்.
நள்ளிரவு 12 மணி அளவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அதிகாரி தவசியப்பன் ஆகியோர் முன்னிலையில் லாட்ஜ் அறையின் தாழ்பாள் உடைக்கப்பட்டது.
உள்ளே படுக்கையில் கோவிந்தசாமி பிணமாக கிடந்தார். அருகே ஊசி ஒன்று கிடந்தது. அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து இருப்பத தெரிய வந்தது.
அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரி சோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட கோவிந்தசாமியின் வீட்டுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் சத்தியமங்கலத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
கோவிந்தசாமி எதற்காக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்தார்? தொழில் ஏற்பட்ட நஷடத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் எதும் உண்டா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.-
கேரளா மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிட முன் வர வேண்டும். அவர்களது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்திட ஈரோடு மாவட்ட வணிகர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கலாம்.
தேவையான போர்வைகள், கைலிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்கள், குழந்தைகளுக்கான பால், பிஸ்கட், மருந்து பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம்.
நிவாரண பொருட்கள் சேகரிக்கும் மையத்தில் இதனை வழங்க வேண்டும். பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்ல வாகன உதவி தேவை. அதற்கும் உதவ முன்வர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார். #keralarain
சென்னிமலை:
தி.மு.க.வில் உள்ள எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்க ஈரோடு மாவட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பெருந்துறை சுகுணா சக்தி என்கிற சக்திவேல் செயல்படுகிறார். தி.மு.க.வில் கருணாநிதி இறந்த பின்பு நடந்த செயற்குழுவில் அழகிரிக்கு அழைப்பு இல்லாமல் இருப்பது இன்னும் அழகிரியை கட்சியில் சேர்க்காமல் இருப்பது அழகிரி ஆதரவாளர்கள் மட்டத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
அடுத்த மாதம் 5-ந் தேதி கருணாநிதி சமாதியில் அழகிரி தலைமையில் ஆதரவாளர்கள் திரண்டு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மும்மராக நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் கணிசமான தொண்டர்களை அழைத்து செல்ல சத்தம் இல்லாமல் ஒருங்கிணைப்பு வேலை நடக்கிறது.
ஈரோடு மாவட்ட தி.மு.க.,வை பொறுத்த அளவில் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைப்பது, மாஜி மாவட்ட செயலாளர் ராஜா அணியில் இருந்து தற்போது விலகி இருப்பவர்களை பார்த்து அழகிரி அணிக்கு இழுக்கும் வேலை தொடங்கி விட்டது.
சென்னிமலை அப்பாய் செட்டியார் வீதியில் உள்ள தனியார் கடையில் அழகிரி ஆதரவாளர்கள் கூட்டம் மிக ரகசியமாக நடந்ததுள்ளது. இதில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் அழகிரி அணியில் தீவிரமாக செயல்படும் பெருந்துறை அருகே வசிக்கும் சுகுணா சக்தி என்ற சக்திவேல் கலந்து கொண்டுள்ளார்.
அவர் பேசும்போது, ‘‘அழகிரி அண்ணன் சொல்லி விட்டார் அஞ்சலி கூட்டத்திற்கு நமது மாவட்டத்தில் இருந்து குறைந்தது 10 பஸ்களில் செல்ல வேண்டும். ஒதுங்கி உள்ள நிர்வாகிகள் மற்றும் லோக்கல் எதிர் கோஷ்டியினர் என்று பலரிடமும் சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வருங்காலத்தில் தி.மு.க., அரியணை ஏற வேண்டும் எனில் அழகிரி அண்ணனால் தான் முடியும்’’ என பேசி உள்ளர்.
அதே போல் கொடுமுடி, பெருந்துறை, மொடக்குறிச்சி பகுதிகளிலும் ரகசிய கூட் டம் நடந்துள்ளது.
இது குறித்து சுகுணா சக்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இப்போது எதுவும் பேச முடியாது. உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் விரைவில் விடை தெரியும். அழகிரியின் பலம் மெரினாவில் நிரூபிக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.ரகசிய கூட்டம் நடத்தவில்லை. தி.மு.க.வில் உள்ள எனது நண்பர்களை தான் சந்தித்து வந்தேன்’’ என்றார். #dmk #alagiri
ஈரோடு:
ஈரோடு மேட்டூர் ரோடு நகரின் முக்கிய ரோடு ஆகும். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரோடு வழியாக செல்லும். இதனால் எப்போதும் மேட்டூர் ரோடு பரபரப்பாகவும், போக்கு வரத்து நெரிசலாகவும் இருக்கும்.
இந்த நிலையில் மேட்டூர் ரோட்டில் கடந்த 1½ மாதமாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் ரோடு தோண்டப்பட்டு கிட்டத்தட்ட பணிகளும் முடிந்து விட்டது.
ஆனால் ரோடு போடப்படாமல் ஆங்காங்கே மணல் திட்டு திட்டாக உள்ளது. இதனால் அடிக்கும் காற்றில் அந்த புழுதி மணல் பறந்து மேட்டூர் ரோட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் மணல் படிந்துள்ளது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதோடு கடைகளுக்கு வரும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று மேட்டூர் ரோடு கடை வியாபாரிகள் சுமார் 300 பேர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடை முன் நடுரோட்டில் நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மேட்டூர் ரோட்டில் ரோடு போட வேண்டும் என்று கோரி இந்த சாலை மறியல் நடந்தது.
வியாபாரிகளின் சாலை மறியலால் மேட்டூர் ரோட்டில் திடீர் பரபரப்பும் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது. இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நினறன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்தனர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போக்கு வரத்து டி.எஸ்.பி. எட்டியப்பனும் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஓரமாக நில்லுங்கள் என்று கூறியதை தொடர்ந்து வியாபாரிகள் ரோட்டில் ஓரமாக நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ‘‘இன்னும் ஒரு வாரத்துக்குள் ரோடு போடப்படும்’’ என உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து வியாபாரிகள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். வியாபாரிகளின் இந்த மறியலால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே தாசரிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக சீரான குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தாசரி பாளையம் பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சத்தி- அத்தாணி ரோட்டுக்கு வந்தனர்.
அவர்கள் சத்தி-அத்தாணி ரோட்டில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபி:
கோபி அருகே உள்ள மேவாணியில் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மேவாணி கணேசபுரம் பகுதியை சேர்ந்த 35 பேர் அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 27 பெண்கள், 8 ஆண்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் வெள்ளம் வடிந்த பிறகு அவர்கள் 35 பேரும் தாங்கள் வசித்த பகுதிக்கு போகாமல் அந்த பகுதியில் உள்ள நஞ்சப்பன் மற்றும் சிலரது இடங்களில் கேட்காமல் குடிசைகள் அமைத்து தங்கினார் களாம்.
இதையொட்டி விவசாயி நஞ்சப்பன் கோபி போலீசில் புகார் செய்தார். கோபி தாசில்தார் வெங்கடேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து தனியார் இடத்தில் குடிசைகள் போட்டு தங்கிய 35 பேரையும் கோபி போலீசார் கைது செய்தனர். அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
நீலகிரி மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் கொட்டிய மழையால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருந்தது.
இதனால் அணை கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிரம்பியது. வரலாறு காணாத வகையில் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் சீற்றம் ஏற்பட்டது. சத்தியமங்கலம், கோபி, கொடிவேரி, அரசூர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பவானி கரையோரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
இதனால் வெள்ளத்தால் பாதுகாப்பான இடத்துக்கு சென்ற மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். தண்ணீர் வீட்டுக்குள் புகுந்ததால் வீட்டில் உள்ள பொருட்கள் யாவும் நனைந்து விட்டது. நேற்று முதல் இந்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்கள் காய வைத்து வருகிறார்கள்.
மேலும் பல வீடுகளில் மாணவ-மாணவிகளின் புத்தகப் பைகளும், நோட்டு புத்தகங்களும் முழுவதும் நனைந்து விட்டன. இதையும் மாணவர்கள் காய வைத்து வருகிறார்கள்.
எனவே பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
70 ஆயிரம், 50 ஆயிரம், 40 ஆயிரம் கன அடி தண்ணீர் என பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை 12700 ஆயிரம் கன அடி வீதம் மட்டும் திறந்து விடப்பட்டது.
ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைந்தாலும் பவானி கரையோரப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்த கொண்டிருந்தது.
இந்த லாரி இன்று காலை 8 மணிக்கு சத்தியமங்கலம் -திம்பம் மலைப்பாதையில் 7-வது சுற்றுப்பாதையில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து லாரி விலகி ரோட்டில் கவிழ்ந்தது.
இதனால் ரோடு முழுவதும் கரும்புகள் சிதறின. லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மீட்பு பணியினர் விரைந்துள்ளனர்.
மலைப்பாதை இறக்கப் பாதையாக இருப்பதால் யானைகள் வர வாய்ப்பில்லை. இந்த லாரிஆசனூர் பகுதியில் விபத்தில் சிக்கி இருந்தால் கரும்புகளை சாப்பிட யானைகள் கூட்டமே வந்திருக்கும். போக்குவரத்து பாதிப்பால் பஸ் மற்றும் வாகனங்களில் வந்த பயணிகள் மிகவும் பாதிப்படைந்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு நாள் முழுவதும் காவிரி மற்றும் பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
ஈரோடு, பவானி, கருங்கல் பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடந்து சென்று பார்த்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
முதல்-அமைச்சர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்த்த போது சில சுராஸ்ய சம்பவங்களும் நடந்து உள்ளது.
பவானி-குமாரபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தில் நின்றபடி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தை பார்த்தார். அப்போது ஒரு பெண் முதல்வர் அருகே வந்தார்.
பிறகு அந்தப் பெண் முதல்வரை பார்த்து “ஏனுங்க என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குதா..? பவானி அரசு பள்ளியில் நம்ம ஒண்ணா படிச்சோமே... நலமா இருக்கீங்களா?” என்று கேட்டார்.
அந்த பெண்ணை பார்த்து முகம் மலர்ந்த முதல்வரும் “ஆமா..நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா..?” என்று கேட்டார்.
அந்த பெண்ணும் நல்லா இருக்கேன் என்று கூறினார்.
பிறகு தன்னுடன் வந்தவர்களிடம் “பவானி வந்ததும் பழைய ஞாபகம் வருகிறது. இந்த பகுதியில் நான் நடந்து செல்லாத இடமே கிடையாது.” என்று கூறி பழைய நினைவை நினைவு கூர்ந்தார் முதல்வர்.
பவானி மார்க்கெட் பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரில் நடந்து சென்ற போது தண்ணீரில் ஒரு செருப்பு மட்டும் தனியாக மிதந்தது. இதை கண்ட முதல்வர் “ஏம்ப்பா... இங்க ஒரு செருப்பு மிதக்குதே.. யாருடையது?” என்று கேட்டார்.
அப்போது நிருபர்கள் நின்ற பகுதியிலிருந்து ஒரு நிருபர் “அது என்னுடைய செருப்புதான்” என்று கூறி அதை எடுக்க வந்தார்.
ஆனால் கூட்டத்தில் அவரால் முன்னேறி வர முடியவில்லை. உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வழிவிடுங்க... என்று கூறினார்.
அனைவரும் அவருக்கு வழிவிட செருப்பை மீண்டும் காலில் அணிந்தபடி அந்த நிருபர் சென்றார். #ErodeFloods #EdappadiPalaniswami






