search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women road picket"

    ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கே.கே.நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராணிப்பேட்டை சோளிங்கர் செல்லும் சாலையில் இன்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சேலம் அருகே குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே ஓலைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு பாப்பன் வாடி ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் விநியோகிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பலமுறை ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இரும்பாலை மெயின்கேட் அருகே திரண்டனர். பின்னர் அங்குள்ள சேலம்- தாரமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது குடிநீர் வழங்கக்கோரி கண்டன கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அந்த சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே தாசரிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக சீரான குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தாசரி பாளையம் பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சத்தி- அத்தாணி ரோட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் சத்தி-அத்தாணி ரோட்டில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செங்கல்பட்டு அடுத்த சாலவாக்கத்தில் குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    செங்கல்பட்டை அடுத்த சாலவாக்கம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இதுபற்றி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் முறையாக குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலவாக்கம் - செங்கல்பட்டு சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×