என் மலர்
செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ முன் வாருங்கள்- கலெக்டர் வேண்டுகோள்
கேரளா மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிட முன் வாருங்கள் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #keralarain
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.-
கேரளா மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிட முன் வர வேண்டும். அவர்களது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்திட ஈரோடு மாவட்ட வணிகர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கலாம்.
தேவையான போர்வைகள், கைலிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்கள், குழந்தைகளுக்கான பால், பிஸ்கட், மருந்து பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம்.
நிவாரண பொருட்கள் சேகரிக்கும் மையத்தில் இதனை வழங்க வேண்டும். பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்ல வாகன உதவி தேவை. அதற்கும் உதவ முன்வர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார். #keralarain
Next Story






