search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector prabhakar"

    கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 3.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடிநீர் வசதி, மின்சார வசதி, பட்டா, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், இலவச தையல் எந்திரம் போன்ற கோரிக்கை அடங்கிய 187 மனுக்கள் பெற்றுக்கொண்ட கலெக்டர், அந்த மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டார். 

    பின்னர், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் வேப்பனபள்ளியை சேர்ந்த ஜானகி என்பவருக்கு நவீன செயற்கை கால், மலையாண்டஹள்ளி சேர்ந்த தனபால் என்பருக்கு நவீன செயற்கை கை, சாமனப்பள்ளியை சேர்ந்த மாணவர் சஞ்சய் என்பவருக்கு நவீன செயற்கை ஆகியவை வழங்கப்பட்டது. 

    அத்துடன் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு நிதியாக வாரிசுதாரர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் தொன்னைகான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்பவருக்கு விலையில்லா தையல் எந்திரம் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 26 ஆயிரத்து 981 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். 

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    நான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்று கலெக்டர் பிரபாகர் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் கதிரம்பட்டி மூலக்கரை கிராமம் வாரக்காடு தோட்டம் பகுதியில் பெரும் பள்ளம் ஓடை குறுக்கே ரூ.25 லட்சம் செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. 3 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேக்கும் அளவுக்கு இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு புதிய தடுப்பணையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

    ஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவர் அக்னி சின்னச்சாமி, செயலாளர் எஸ்.கணேசன், பொருளாளர் ஞானவேல், நீர் மேலாண்மை குழு தலைவர் ராபின், துணைத் தலைவர்கள் யூ.ஆர்.சி.தேவராஜ், சி.டி.குமார், அறங்காவலர்கள் பி.வி.மகேஷ், எஸ்.கே.எம்.சிவக்குமார், ஆர்.ஆர்சத்தியமூர்த்தி, காமதேனு மாட்டுத்தீவன நிறுவன தலைவர் ஆர்.ஜி.சுந்தரம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், காசிபாளையம் கோவிந்தராஜ், சூரம்பட்டி முன்னாள் நகர்மன்றத் தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர் பூவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தடுப்பு அணையின் மேல் பகுதியில் ஏற்கனவே ரூ.10 லட்சம் செலவில் இரண்டு தடுப்பணைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. மேலும் இதன் கீழ் பகுதியில் 5 தடுப்பணைகள் தூர் வாரப்பட்டுள்ளன.

    விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:-

    தற்போது எனக்கு கிருஷ்ணகிரியில் பணி செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கும் தொடர்ந்து சிறந்த முறையில் பணியாற்றுவேன். நான் வருகிற வியாழக்கிழமை கிருஷ்ணகிரியில் பொறுப்பேற்க உள்ளேன். ஒளிரும் ஈரோடு அமைப்பு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதற்கு நானும் ஒரு படிக்கல்லாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கட்டமாக நிறைவேற்றப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்து ஒரு குறிப்பு எழுதி வைத்துள்ளேன்.

    அந்தக் குறிப்பை அடுத்ததாக பதவியேற்க உள்ள மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளேன். நாளை மறுநாள் (புதன் கிழமை) புதிய கலெக்டராக பொறுப்பேற்க உள்ள கதிரவனுடன் எனக்கு 15 ஆண்டுகளாக சிறந்த நட்பு உள்ளது. இதை பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து எனது ஆலோசனை வழங்க முடியும்.

    இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.
    கேரளா மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிட முன் வாருங்கள் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #keralarain

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.-

    கேரளா மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிட முன் வர வேண்டும். அவர்களது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்திட ஈரோடு மாவட்ட வணிகர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கலாம்.

    தேவையான போர்வைகள், கைலிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்கள், குழந்தைகளுக்கான பால், பிஸ்கட், மருந்து பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம்.

    நிவாரண பொருட்கள் சேகரிக்கும் மையத்தில் இதனை வழங்க வேண்டும். பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்ல வாகன உதவி தேவை. அதற்கும் உதவ முன்வர வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார். #keralarain

    ×