என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே வாலிபர் தற்கொலை
    X

    ஈரோடு அருகே வாலிபர் தற்கொலை

    ஈரோடு அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide

    ஈரோடு:

    ஈரோடு பெரியார்நகர் சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் ராஜ்கலைமணி. இவரது மகன் சரவணன் (23).

    இவர் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இதன் காரணமாக சரவணன் மனம் உடைந்து போனார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×