என் மலர்tooltip icon

    ஈரோடு

    கணவருடன் தன்னை சேர்த்து வைக்ககோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கர்நாடக பெண் புகார் மனு அளித்துள்ளார்.
    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது 35). இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

    எனக்கும் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் டெலிபோன் நகரைச் சேர்ந்த உமா சங்கர் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு லக்‌ஷனா, லட்சுமணா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். தற்போது என் குழந்தைகள் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் என் கணவரது வீட்டார் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். என் குழந்தைகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.

    இது சம்பந்தமாக ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் கணவரை என்னோடு சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    பின்னர் மனுவை அனிதா கலெக்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டார். #tamilnews
    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜவுளிக் கடை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்னமுத்து, 3-வது வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சுகுணா தேவி.

    பாலமுருகன் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஜவுளி தொழிலில் பாலமுருகனுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பாலமுருகன் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பாலமுருகன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு வந்து உள்ளார். பின்னர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வி‌ஷத்தை குடித்துள்ளார்.

    அருகில் இருந்தவர்கள் பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வாழைக்காய் வியாபாரியிடம் ரூ. 1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ஆப்பக்கூடல்:

    கேரள மாநிலம் குட்டி சிறா என்ற பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதிக்கு புஜூ என்பவர் வாழைக்காய் லோடு ஏற்றிக் கொண்டு ஈச்சேரில் வந்து கொண்டிருந்தார்.

    ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி கை காட்டி பிரிவில் வந்த போது அங்கு தேர்தல் பறக்கும் படையினர் ஜெயக்குமார் என்பவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஈச்சேர் மினி லாரியை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர் அப்போது ரூ.1½ லட்சம் கொண்டு வரப்பட்டதையும் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதே போல் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் நால் ரோடு பஸ் நிறுத்தம் முன் தேர்தல் பறக்கும் படையினர்(பெருந்துறை சட்டமன்ற தொகுதி) அதிகாரி மோகன சுந்தரம் தலைமையில் கொடுமுடி சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர் அதில் அந்தியூர் அருகே உள்ள ஆலமரத்து காடு பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (48) என்பவர் கன்னிவாடி சந்தைக்கு ஆடு வாங்க ரூ. 87050-ஐ எடுத்து கொண்டு சென்றார்.

    ஆனால் அந்த பணத்துக்கு ஆவணம் இல்லாததால் அதை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் பிறகு அதை பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls

    சத்தியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் காரில் வந்தவர்களிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்தனர். #LSPolls
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி தீனதயாளன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 3 பேர் இருந்தனர். கூடலூரில் இருந்து ஈரோட்டில் நடக்கும் மாட்டு சந்தைக்கு இவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் நடத்திய சோதனையில் பிரதீஸ் குமார் என்பவரிடம் ரூ.60 ஆயிரம், எல்டாஸ்பால் என்பவரிடம் ரூ.52 ஆயிரம் மற்றும் தினேஷ் (31) என்பவரிடம் ரூ.56800 என ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 300-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    மாட்டு சந்தைக்கு வந்த வியாபாரிகளான இவர்களிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அந்த பணத்தை சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். #LSPolls

    ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிப்பவர்கள்தான் என்னுடைய கணவரை கடத்தி வைத்துள்ளனர் என்று மாயமான முகிலனின் மனைவி பூங்கொடி கூறினார். #Mukilan #Sterlite
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது 52). சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தூத்துக்குடி கலவரத்துக்கு போலீசார்தான் காரணம் என்பது குறித்த வீடியோ ஆதாரங்களை கடந்த பிப்ரவரி 15-ந் தேதி முகிலன் சென்னையில் வெளியிட்டார். அதன்பிறகு அன்று இரவு ரெயிலில் மதுரைக்கு புறப்பட்டார். ஆனால் ரெயில் திண்டிவனம் சென்றபோது முகிலனை திடீரென காணவில்லை.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் 40 தனிப்படைகள் அமைத்து தேடி வருவதுடன், 251 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர்.

    முகிலன்

    இந்த நிலையில், முகிலனின் மனைவி பூங்கொடி (42) சென்னிமலையில் நேற்று நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    “எனக்கும், முகிலனுக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. முகிலன் டி.எம்.இ. படித்துள்ளார். எங்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும்.

    திருமணத்திற்கு முன்பே எனது கணவர் முகிலன் புரட்சிரக இளைஞர் முன்னணி அமைப்பில் இருந்து கொண்டு பல்வேறு மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார். என்னை விட அவருக்கு 10 வயது அதிகம். ஆனாலும் அவருடைய சமூக அக்கறை காரணமாக அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. எங்களுக்கு கார்முகில் (21) என்ற ஒரே மகன் உள்ளார்.

    கார்முகில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் உள்ளூரில் நடந்த பல்வேறு போராட்டங்களில் முகிலன் கலந்துகொண்டுள்ளார். நானும் அவரோடு போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன்.

    எங்கள் குடும்ப வருமானத்திற்காக மட்டுமின்றி சமூக போராட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் அச்சடிப்பதற்காக 1998-ம் ஆண்டு அச்சகம் அமைத்து 2 வருடங்கள் அச்சகத்திலேயே முகிலன் இருந்தார். 2010-ம் ஆண்டிற்கு பிறகு முகிலன் தமிழக அளவிலான பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டார். அதன்பிறகு வீட்டிற்கு அடிக்கடி வரமாட்டார்.

    2013-ம் ஆண்டில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதங்கள் சிறை சென்றார். புரட்சிகர இளைஞர் முன்னணி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான கூட்டியக்கம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இயக்கம் என பல்வேறு இயக்கங்களோடு இணைந்து பல போராட்டங்கள் நடத்தியதுடன் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் தொடங்கி போராட்டங்கள் நடத்தினார்.

    அதனால் இவர் மீது 100-க்கும் மேற்பட்ட போராட்ட வழக்குகள் இருந்தது. 2014-ம் ஆண்டில் முகிலனே வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து திருச்சி சிறையில் 6 மாதம் இருந்தார். பின்னர் நீதிபதியே சொந்த ஜாமீனில் இவரை வெளியே விட்டார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் திருச்சி காவிரி ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் முகிலன் கைது செய்யப்பட்டு 379 நாட்கள் சிறையில் இருந்து 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது.

    இந்த போராட்டத்தில் முகிலன் மிக தீவிரமாக கலந்துகொண்டார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி சென்னிமலைக்கு வந்த முகிலன் 2 மணி நேரம் மட்டுமே வீட்டில் இருந்தார். அதன்பிறகு தூத்துக்குடி கலவரம் குறித்த போலீசாருக்கு எதிரான சி.டி.யை பிப்ரவரி 15-ந் தேதி சென்னையில் முகிலன் வெளியிட்டார்.

    சி.டி. வெளியிட்ட அன்றே ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உள்ள ஊழியர் ஒருவர் முகிலனிடம், தூத்துக்குடி கலவரம் குறித்த சி.டி. ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் எங்களிடம் கொடுங்கள் என்றும், இதை ஏன் நீதிமன்றத்தில் கொடுத்தீர்கள்? என்றும் கேட்டுள்ளதாக உடன் இருந்தவர்களிடம் முகிலன் தெரிவித்துள்ளார்.

    முகிலன் காணாமல் போனதற்கு ஓரிரு நாள் முன்பு காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். முகிலன் கலந்துகொண்ட போராட்டத்தில் பெண்களும் கலந்துகொள்வது உண்டு. அதுபோல நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பங்கேற்றுள்ளார்.

    என்னுடைய கணவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சில அரசியல்வாதிகள், உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி உடன் இருந்தவர்களும் அவர் மீது தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அதுபோல இவருடன் போராடிய பெண்ணோடு இணைத்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு எதிராக எனது கணவர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து பிரசாரம் செய்துள்ளார். அதனால் இனி வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்கு எதிராக முகிலன் செயல்படுவார் என நினைத்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களே போலீஸ் துணையுடன் சேர்ந்து என் கணவரை கடத்தி வைத்திருக்கலாம்.

    கடந்த 2013-ம் ஆண்டுகூட ஒரு போராட்ட வழக்கில் போலீசார் இவரை யாருக்கும் சொல்லாமல் சில நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தனர். அதுபோல் இப்போதும் கடத்தி சென்றுள்ளனர்.

    இதுவரை பொது வாழ்க்கைக்காகவே தன்னை அர்ப்பணம் செய்த முகிலன் மீது உடன் இருப்பவர்களே பரப்பி வரும் அவதூறுகளை முறியடித்து அவரை மீட்க போராடி வருகிறேன். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கடத்தி சென்றவர்களே முகிலனை விட்டுவிடுவார்கள் என நம்புகிறேன்” என்றார். #Mukilan #Sterlite
    ஈரோடு அருகே காரில் சென்ற சித்த மருத்துவரிடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே ரகுபதிநாயக்கன்பாளையம் அவல்பூந்துறை ரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி குருசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் ஈரோட்டில் இருந்து முள்ளாம்பரப்பு நோக்கி சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் காரில் உள்ள பொருட்களை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த ஒரு பெட்டியில் ரூ.1 லட்சத்து 720 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், அவர் ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பதும், அவர் சித்த மருத்துவர் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் கொண்டு சென்ற பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால் அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறும்போது, “உரிய ஆவணத்தை காண்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்”, என்றார்.
    ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சத்தி-கோபி ரோட்டில் கோபி கொடிவேரி அணை பிரிவில் பறக்கும் படை அதிகாரி பவானி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தை சேர்ந்த விவசாயியான நரேந்திரன் என்பது தெரியவந்தது.

    மேலும் நடத்திய விசாரணையில், நிலத்தை கிரையம் செய்வதற்காக சத்தியமங்கலம் சென்ற அவர், வேலை முடியாததால் ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்துடன் ஊருக்கு காரில் திரும்பியது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் நரேந்திரனிடம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைத்தனர்.

    சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை காட்டினால் அவரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.

    இதேபோல் விஜயமங்கலம்-ஊத்துக்குளி ரோட்டில் பெருந்துறை அருகே உள்ள வேட்டைக்காரன்கோவிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தரவடிவேல் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் 2 மணி அளவில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் ரூ.75 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பவானியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பதும், ஊத்துக்குளியில் வெடிமருந்தை விற்றுவிட்டு அதற்கான பணம் ரூ.75 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு ஊருக்கு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சத்தியமங்கலம் அருகே உள்ள புதுரோடு என்ற கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜீவாதயாளன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். இதில் சத்தியமங்கலத்தில் இருந்து கேரளாவுக்கு பேக்கரி பொருட்கள் வாங்க காரில் சென்ற முகமது சுவேகான் (19) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.52 ஆயிரத்து 200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.4லட்சத்து 29 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.
    கொடுமுடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     கொடுமுடி:

    கொடுமுடி அடுத்த சூளை கல்பாளையம், பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35). லோகநாதன் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலையை சொந்தமாக மிஷின் வைத்து வேலை பார்த்து வந்தார்.

    நேற்று கட்டிட வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதனை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    டாக்டர்கள் பரிசோதித்து விட்டு லோகநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி அருகே மின்சாரம் தாக்கியதில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி அடுத்த சூளை கல் பாளையம், பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35). லோகநாதன் கட்டிடங் களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலையை சொந்தமாக மிஷின் வைத்து வேலை பார்த்து வந்தார்.

    நேற்று கட்டிட வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதனை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    டாக்டர்கள் பரிசோதித்து விட்டு லோகநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சோலார் இரணியன் வீதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் பத்மபிரியா (வயது 19).

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாராம். ஆனால் இவர் இன்னும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு போனார். என்ன ஆனார் என தெரியவில்லை.

    இது குறித்து பத்மபிரியாவின் தந்தை குமார் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    கொடுமுடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொடுமுடி:

    கொடுமுடி அடுத்த கொளத்துப்பாளையம் புது காலனியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சரண்யா (வயது 23). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். பின்னர் பூபதி வெளியே சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த சரண்யா மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூபதி வீட்டு வந்து கதவை திறந்தார். அப்போது அவரது மனைவி சரண்யா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது புகழ்மிக்க பண்ணாரி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 4-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் சப்பரம் புதுவடவள்ளி, ராஜன் நகர், சிக்கரசம் பாளையம், புதுபீர்கடவு மற்றும் சத்தியமங்கலம் நகரின் பல்வேறு இடங்களில் வீதி உலா வந்தது.

    ஒவ்வொரு கிராமத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் சப்பரத்தை வரவேற்று பயபக்தியுடன் வணங்கினர். மேலும் பல பக்தர்கள் அம்மன் சப்பரம் வரும் வழியில் தரையில் படுத்து அம்மனை வணங்கினர்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊர்களில் வீதிஉலா வந்த அம்மன் மீண்டும் கோவிலை சென்றடைந்தது. இதைதொடர்ந்து கம்பம் நடப்பட்டது. மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை முழங்க அம்மன் புகழ்பாடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும் விழாவையொட்டி தினமும் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு திருக்குளம் சென்று அம்மன் அழைத்தல் மற்றும் வரம் பெறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இன்று இரவு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் மலைபோல் குவிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு குண்டம் வார்க்கப்படுகிறது.

    இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு குண்டம் இறங்கும் விழா தொடங்குகிறது. முதலில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்க தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதிக்கிறார்கள். நாளை நடக்கும் குண்டம் விழாவுக்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் தடுப்பு கம்பங்களில் அமர்ந்து இடம் பிடித்து குண்டம் இறங்க காத்திருக்கிறார்கள்.

    இவர்கள் அமர்ந்துள்ள இடத்திலேயே சமைத்து சாப்பிட்டும் வருகிறார்கள். குண்டம் விழாவில் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள்.

    மேலும் கர்நாடக மாநில பக்தர்களும் ஆயிரக்கணக்கான பேர் பலந்து கொண்டு தீ மிதிக்கிறார்கள். குண்டம் விழாவை யொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுளகிறார்கள்.
    ×