என் மலர்
நீங்கள் தேடியது "Business Loss"
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்னமுத்து, 3-வது வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சுகுணா தேவி.
பாலமுருகன் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஜவுளி தொழிலில் பாலமுருகனுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பாலமுருகன் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாலமுருகன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு வந்து உள்ளார். பின்னர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விஷத்தை குடித்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பொழிச்சலூர் பாரதி தெருவை சேர்ந்தவர் காஜா மொய்தீன். மீன் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கினார்கள். இதனால் காஜா மொய்தீன் அவதிப்பட்டார்.
மனம் உடைந்த காஜா மொய்தீன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று இரவு காஜா மொய்தீன், அவரது மனைவி சர்மிளா (30), மகள் பர்தானா (12), மகன் முகமது ஆசிப் (8) ஆகிய 4 பேரும் உணவில் பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுத்து உயிருக்கு போராடினார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குடும்பத்துடன் விஷம் கலந்து உணவை சாப்பிட்டு விட்டதாகவும், தங்களை காப்பாற்றும்படியும் கூறினார்கள்.
அக்கம் பக்கத்தினர் இது பற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் ஆப்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் கணவன்-மனைவி இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும், 2 குழந்தைகளும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






