search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka woman"

    கர்நாடகாவில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
    பெங்களூர்:

    வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் மனித ஆற்றல் துறையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் திருமணத்துக்காக திருமண தகவல் அலுவலகம் மூலம் பெண் தேடினார். அப்போது தனது பகுதியை சேர்ந்த ரக்‌ஷா (26) என்ற பெண் பொருத்தமான வரனாக அமைந்தது. அவரும் எம்.பி.ஏ. படித்து வேலை பார்த்து வந்தார்.

    இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்தார். வயிற்றில் ஜீரண பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.

    ஆனால் சரத்துக்கு வேறு மாதிரி சந்தேகம் ஏற்பட்டது. திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு ரக்‌ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். திருமணம் பிடிக்காததால் தான் ரக்‌ஷா இப்படி இருப்பதாக சரத் கருதினார்.

    மேலும் ரக்‌ஷாவின் தாயார் இறந்த நேரத்தில் அந்த ஊரை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவர் ரக்‌ஷாவுக்கு ஆறுதலாக இருந்து ஏராளமான உதவிகளை செய்தார். இதனால் அவருக்கும் ரக்‌ஷாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்கனவே சரத்துக்கு இருந்தது.

    இந்த நிலையில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் வாந்தி ஏற்பட்டதாக கருதினார்.

    எனவே ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து அதை கண்டுபிடிக்க முடிவு செய்தார். இதற்காக ரக்‌ஷாவை வயிற்று பிரச்சனைக்கு சிகிச்சை பெறலாம் என கூறி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    ஆனால் டாக்டர்களிடம் ரகசியமாக பேசிய அவர் ரக்‌ஷா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? வாந்திக்கு கர்ப்பம் காரணமா? என சோதனை நடத்துமாறு கூறினார்.

    எனவே அதற்கான சோதனையை டாக்டர்கள் மேற்கொண்டனர். சோதனை செய்வது தொடர்பான படிவத்தில் ரக்‌ஷாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால் அவர் படித்து பார்க்காமலேயே கையெழுத்து போட்டு விட்டார்.

    டாக்டர்கள் சோதனை செய்தபோதுதான் கற்பு பரிசோதனை நடந்தது தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த ரக்‌ஷா உடனே ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.

    கணவர் அவரை நேரில் சென்று அழைத்தும் வர மறுத்து விட்டார். இதனால் சரத் கர்நாடக அரசு குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் அளித்தார். இருவரையும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் அழைத்து பேசினார்கள்.

    அப்போது என் மீது சந்தேகப்பட்ட கணவரோடு வாழ முடியாது என்று ரக்‌ஷா பிடிவாதமாக கூறிவிட்டார்.

    இந்த நிலையில் சரத் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதற்கு பதிலடியாக ரக்‌ஷா சரத் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கற்பு மீது சந்தேகப்பட்டு சோதனை நடத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்துள்ளார்.
    கணவருடன் தன்னை சேர்த்து வைக்ககோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கர்நாடக பெண் புகார் மனு அளித்துள்ளார்.
    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது 35). இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

    எனக்கும் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் டெலிபோன் நகரைச் சேர்ந்த உமா சங்கர் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு லக்‌ஷனா, லட்சுமணா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். தற்போது என் குழந்தைகள் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் என் கணவரது வீட்டார் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். என் குழந்தைகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.

    இது சம்பந்தமாக ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் கணவரை என்னோடு சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    பின்னர் மனுவை அனிதா கலெக்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டார். #tamilnews
    பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை சென்ற கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐயப்ப பக்தர்களின் அறிவுரையை ஏற்று திரும்பிச் சென்றார். #Sabarimalatemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழாவுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் தரிசனத்திற்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம் பாரம்பரியத்தை மீறக்கூடாது என்று கூறி சபரிமலை செல்லும் இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகிறார்கள்.

    இதனால் சபரிமலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவுக்கு நடை திறந்த பிறகு சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற 2 ஆந்திர இளம்பெண்களை ஏற்கனவே ஐயப்ப பக்தர்கள் திருப்பி அனுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் குழுவில் 50 வயதுக்கு உட்பட்ட ஒரு இளம்பெண்ணும் இடம் பெற்றிருந்தார்.

    அந்த குழுவினர் மரக்கூட்டம் பகுதியில் சென்றபோது ஐயப்ப பக்தர்கள் அந்த இளம்பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர். உடனே அவர்கள் சபரிமலையின் ஐதீகத்தை அந்த பெண்ணுக்கு எடுத்துக்கூறி சபரிமலையில் இருந்து திரும்பி செல்லுமாறு அறிவுரை கூறினார்கள். அந்த பெண்ணும் அதை ஏற்று திரும்பிச் சென்றார்.

    சபரிமலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நிலக்கல், பம்பை, மரக்கூட்டம் போன்ற இடங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பத்தனம்திட்டா ரெயில் நிலையம், பஸ் நிலையம் பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Sabarimalatemple

    ×