என் மலர்
நீங்கள் தேடியது "ரத்த வகை"
- ரத்ததானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும்.
- விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும்.
நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தமாகும். இந்த ரத்தம் ஒவ்வொரு உறுப்புக்கும் சீராகச் சென்றடையாவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
அவசர கால சிகிச்சைகளில் விபத்துகள் அல்லது அறுவை சிகிச்சையின்போது ரத்தம் தேவைப்படும்போது, ரத்த வகை தெரியாதவர்களுக்கு O எதிர்மறை (O-) வகை இரத்தம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது உலகளாவிய இரத்த வகையாகக் கருதப்படுகிறது. சரியான இரத்த வகையைத் தெரிந்துகொள்வது மிக முக்கியமானது.
ஒருவருக்குப் பொருந்தாத இரத்த வகையைச் செலுத்தினால், அது கடுமையான நோய் எதிர்ப்பு எதிர்வினைகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தாக முடியும்.
ரத்த வகை Rh ஆன்டிஜென் அல்லது Rh-ஐ அடிப்படையாகக் கொண்டது. இது நேர்மறை (+) அல்லது எதிர்மறை (-) என வகைப்படுத்தப்படுகிறது.
இரண்டு அமைப்புகளின் கலவையால் எட்டு [A+, A, B+, B, AB+, AB, O+, O] அடிப்படை இரத்த வகைகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் ரத்த வகையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ரத்த தானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும். ரத்தசோகை, ஹீமோபீலியா போன்ற நோய்கள், அசாதாரணப் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளின்போதும், விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும்.
ஒருவருக்கு எந்த ரத்த வகை உள்ளதோ, அதே ரத்தம்தான் அவருக்குச் சேரும். அதற்கு ரத்தம் தேவைப்படுபவர், தானம் செய்கிறவர் என இருவரின் ரத்த வகையும் தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் எடுக்கும்போதும் பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கப்படும்போதும் ரத்த வகையைக் குறிப்பிட வேண்டும்.
- பெண்ணின் ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பினார்.
- 10 மாதங்களாக நடந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் என கண்டுபிடிக்கப்பட்டது.
உலகில் அதிசயங்கள் என்பது எப்போதும் மக்களை வியக்க வைக்கும். அதிலும் மருத்துவ துறையில் அதிசயம் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அந்த வகையில் தற்போது கர்நாடகத்தில் மருத்துவ துறையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. பொதுவாக 'ஓ' பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உள்ளிட்ட ரத்த வகைகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு புதிதாக ஒரு வகையைச் சேர்ந்த ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு அங்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது ரத்தம் 'ஓ ஆர்.எச். பாசிட்டிவ்' வகையைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது. பொதுவாக சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருக்காது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து டாக்டர்கள் அந்த பெண்ணின் ரத்த மாதிரியை பெங்களூரு டி.டி.கே. ரத்த மையத்தில் அமைந்திருக்கும் அதிநவீன இம்முனோஹெமடாலஜி ரெபரென்ஸ் ரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பினர். அங்கு அந்த பெண்ணின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவரது ரத்தம் பான்ரியாக்டிவ் ஆவது, அதாவது அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது.
இதை அந்த ரத்த பரிசோதனை மையத்தில் டாக்டர் அங்கித் மாதுர் உறுதிப்படுத்தினார். பின்னர் அவர் அந்த பெண்ணின் ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பினார்.
அங்கு 10 மாதங்களாக நடந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரத்த வகைக்கு சி.ஆர்.ஐ.பி.(கோமர் இந்தியா பெங்களூரு) என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த வகை ரத்தம் உள்ள முதல் நபர் கோலார் பெண் தான் என்று அவர்களும் அறிவித்தனர். இது மருத்துவத்துறையில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
- மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
- கல்லூரியை சேர்ந்த 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் வரதராஜன், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் என்.விஜயகுமார், நிலைய மருத்துவர் கோவிந்தராஜ், கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமங்கலம் பாலு தொடங்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டல இணை இயக்குனர் தஞ்சை தனராஜன் சிறப்புரையாற்றினார்.
ரத்ததான முகாமில் கல்லூரியை சேர்ந்த 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.
அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 50 ரத்த தானம் வழங்கினர்.
இரத்தம் சேகரிக்கும் பணியை மன்னார்குடி ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் காத்தி காயினி தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்தம் சேகரித்தனர்.
ரத்ததான முகாமை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மன்னார்குடி வட்ட கிளை துணைத்தலைவர் என். ராஜப்பா, மன்னார்குடி இரத்தக்கொடையாளர்கள் ஒருங்கிணைப்பு மைய பொறுப்பாளர் கார்த்தி கேயன், கவிஞர் தங்கபாபு ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.






