என் மலர்tooltip icon

    ஈரோடு

    சீர்காழி அருகே போலீஸ் நிலையத்தில் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வக்கீல் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த பெரம்பூர் சென்னியநல்லூர் பெரியதெருவை சேர்ந்தவர் அன்புமணன்(வயது 31). இவர் தனியார் பஸ் டிரைவராக உள்ளார். அன்புமணன் சீர்காழி கரிக்குளம் பகுதி வழியாக தனியார் பஸ் இயக்கி சென்றார். அப்போது எதிரே புதுத்துறை பகுதியை சேர்ந்த வழக்குரைஞர் ராஜேஷ், சிவா, மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ராஜா ஆகியோர் சென்ற காரின் மீது பஸ் மோதி, கார் சைடு கண்ணாடியை உடைத்துவிட்டு பஸ் புதிய பேருந்துநிலையம் சென்றுவிட்டதாம்.

    அங்கிருந்து பஸ் வெளியே வரும்போது காரில் வந்தவர்கள் பஸ்சை தடுத்துநிறுத்தி டிரைவரை கடுமையாக திட்டியதோடு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்திருந்த பேருந்து ஓட்டுனரை காவல்நிலையத்திலேயே ராஜேஷ் கடுமையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இது குறித்து அன்புமணன் அளித்த புகாரின் பேரில் வழக்குரைஞர் ராஜேஷ், சிவா, ராஜா ஆகியோர் மீது சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து வக்கீல் ராஜேஷ், சிவா ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜாவை தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பி. சுகுணாசிங் சீர்காழி காவல்நிலையத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி மல்லிகா (வயது 60). இவர்களுக்கு அமுதா (30), பூவிழி (28) என 2 மகள்கள் உள்ளனர். இதில் பூவிழிக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. சின்னசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    இந்நிலையில் மூத்த மகள் அமுதாவுக்கு வடிவேல் என்பவருடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனன்யா (வயது 9) என்கிற மகள் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமுதா கணவரை பிரிந்து மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    அமுதா பெருந்துறை அடுத்த சரலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவரது மகள் தனன்யா அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் மல்லிகாவின் 2-வது மகள் பூவிழி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மல்லிகா அவரது மகள் அமுதா மற்றும் தனன்யா ஆகியோர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தூங்க சென்றனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டுக் கதவுகள் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மல்லிகா வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

    பின்னர் கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் மல்லிகா தனியாகவும் மற்றொரு அறையில் அமுதா மற்றும் தனன்யா இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வீட்டை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சம்பா சாகுபடியில் பாரம்பரிய முறைகளான நேரடி விதைப்பு, நாற்றங்கால் முறை நடவு, வரிசை நடவு உள்ளிட்ட முறைகளில் நெல் விதைப்பு நடந்துள்ளது.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில் நெல் பிரதான பயிராக உள்ளது. குறுவை, சம்பா என இரண்டு பருவத்தில் இங்கு நெல் நடவு செய்யப்படுகிறது. சம்பா சாகுபடி அக்டோபர், நவம்பரில் நடவு செய்யப்பட்டு ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி தொடக்கத்தில் அறுவடை நடக்கும்.

    தற்போது கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் 6,000 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.

    சம்பா சாகுபடியில், பாரம்பரிய முறைகளான நேரடி விதைப்பு, நாற்றங்கால் முறை நடவு, வரிசை நடவு உள்ளிட்ட முறைகளில் நெல் விதைப்பு நடந்துள்ளது. இந்த பயிர்கள் ஆரோக்கியமாக வளர உரமிடுதல் மிக முக்கியமானதாகும்.

    இதுகுறித்து வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:

    மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் உரங்கள் இடுவதால் தேவையற்ற இடுபொருள் செலவுகள் தவிர்க்கலாம். ரசாயன கரிம எருக்கள், பசுந்தாள் உரம், பயிர்களின் கழிவுகள் போன்றவற்றால் மண் வளம் அதிகரிக்கும்.

    அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா இடுவதால் மண்வளம் பாதுகாக்கப்படும். முதன்மை தாவர ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகளுடன் மண் பரிசோதனை அடிப்படையில் நுண்ணூட்டச் சத்துக்களையும் சேர்க்கும். மகசூல் பெருகும் என்றார்.
    மேட்டூர் அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 24 ஆயிரம் கனஅடி காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதேபோல் பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் அங்கிருந்தும் உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இந்த உபரிநீர் பவானி கூடுதுறை வழியாக வந்து காவிரி ஆற்றில் கலப்பதால் காவிரியில் கூடுதல் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான ஈரோடு கருங்கல்பாளையம், நெரிஞ்சிப்பேட்டை, பவானி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வகிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஈரோடு வருவாய்துறை சார்பில் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
    மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    காலையில் இட்லி, தோசை, இடியாப்பம் என்று செய்ய அம்மாவால் முடியலையா? உங்களுக்கும் போர் அடிக்குதா?

    காலை உணவு என்பது மிக முக்கியமான ஒன்று. காலை உணவினை தவிர்ப்பவர்கள் எளிதில் நோயாளி ஆகிவிடுவர். எனவே காலை உணவுகளில் நல்ல உணவுகள் சிலவற்றினைப் பற்றி பார்ப்போம்.

    * முட்டை உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு முட்டை எளிய சத்தான உணவு. சிறந்த புரதச் சத்து கொண்டது. வயிறு நிரம்பும். பசியும் சீக்கிரம் எடுக்காது. கண் பிரச்சினைகளுக்கு முட்டை நல்ல உணவு. மூளை, கல்லீரலுக்கு நல்ல சத்தினை அளிக்கின்றது. அளவான முறையில் உண்ணும் போது கொலஸ்டிரால் அளவும் ரத்தத்தில் கூடுவதில்லை.
    தயிர்& தயிர் ஒரு நிதான கப் (150 மி.லி) அளவு எடுத்துக் கொள்ளலாம். Probiotics நிறைந்தது. குடல் பாதுகாப்பாய் இருக்கும்.

    * விருப்பம் உள்ளவர்கள் காலை உணவில் 1 கப் காபி அருந்தலாம்.  

    ஓட்ஸ் உணவு

    இது நார்சத்து, குறைந்த கொலஸ்டிரால் நிறைந்த சத்து கொண்டது. இவை அனைவருக்கும் ஏற்ற உணவு.

    * சியா விதைகள்

    இதன் சத்தும், நார்சத்தும் இன்று சத்துணவு நிபுணர்களால் அதிகம் சிபாரிசு செய்யப்படுகின்றது. 28 கிராம் சியா விதைகளில் 10 கிராம் அளவு நார்சத்து கிடைக்கின்றதாம். இதனை பொடியாக்கி தயிர் அல்லது விருப்பமான உணவில் கலந்து எடுத்துக் கொள்கின்றனர். சியா விதைகள், ஆளி விதைகள் இரண்டுமே இன்று அதிக முக்கியத்துவத்தினைப் பெறுகின்றன.

    சீஸ்

    இது இருந்தாலே புரத சத்து மிகுந்த காலை உணவு ஆகி விடும். 200 கிராம் கப்பில் சுமார் 24 கிராம் புரதம் கிடைக்கின்றது. இதனை உணவு, பழங்கள், இவற்றின் மீது துறுவி தூவி எடுத்துக் கொள்ளலாம்.

    * முழு தானிய கோதுமை bread உடன் விதைகள், காய்கறிகள் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

    * பாதாம், வால்நட், பிஸ்தா, முந்திரி இவை அனைத்துமே சத்து நிறைந்தவை. கலவையாக Ð கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளலாம்.

    * இத்துடன் கிரீன் டீ, அரிந்த பழங்கள் போன்றவற்றை ஒரு மாறுதலுக்காகவும் இல்லை அன்றாட பழக்க முறையிலும் காலையில் எடுத்துக் கொள்ளலாமே.

    காலை உணவு அவசியம். அதிலும் சத்துடையதாகவும் இருப்பது அவசியம் என்பதனை நினைவில் கொள்வோம்.
    இந்த தீபாவளியின் போது இனிப்புகள் தருவதில் சற்று மாறுதல் இருந்தது. இந்த மாறுதல் வருடா வருடம் நாம் காண்பது தான். என்றாலும் இந்த முறை அது கூடி இருந்தது. அது என்ன மாறுதல்? வீட்டில் செய்த இனிப்பு, கார வகைகள் மற்றும் கடைகளில் வாங்கப்பட்ட இனிப்பு, கார வகைகளை அதிகமாக உற்றார், நண்பர்களுக்கு கொடுத்து வருவது வழக்கத்தில் உள்ளது. சில வருடங்களாக உலர்ந்த பழங்கள் எனப்படும் பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா, வால்நட், அத்திப் பழம், பாதாம் பழம் எனக் கொடுக்கின்றனர். இது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது மிக நல்ல வர வேற்கத்தக்க மாற்றமே. அதிகம் பாதாம் பருப்பு புழக்கத்தில் உள்ளது. அப்படி என்னதான் அந்த பாதாம் பருப்பில் உள்ளது. பொதுவாகவே கொட்டை வகைகள் அனைத்திலுமே மக்னீசியம் அதிகம். சுமார் 28 கிராம் பாதாம் பருப்பில் 18 சதவீதம் அன்றாட தேவைக்கான மக்னீசியம் கிடைக்கின்றன.

    மக்னீசியத்தின் முக்கியத்துவம் என்ன?

    * ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த கொதிப்பு இவற்றினை கட்டுப்பாட்டில் வைக்கும். * அதிக சக்தி கொண்டது. * வைட்டமின் டி செயல்பாட்டில் உதவுவது.

    * மன அழுத்தத்தில் இருந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வல்லது. பலருக்கு ஏனோ மக்னீசியம் தேவையான அளவு அவர்களது உணவில் இருந்து கிடைப்பதில்லை. மேலும் மன அழுத்தம், மருந்துகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வு இவையும் மக்னீசியத்தினை நம் உடலில் குறைக்கின்றன. அவ்வகையில் தினமும் 5 முதல் 10 பாதாம் பருப்பு களை ஊற வைத்து உண்பது நன்மை பயக்கும்.

    * பாதாம் அதிக நார்சத்து கொண்டது. நாகரீக உணவு உலகில் நார்சத்தின் அளவு குறைந்து கொண்டே  வருகின்றது. இது குடலில் அபாயகரமான பாதிப்புகளை உருவாக்கலாம். ஆக தினம் சிறிதளவு பாதாம் உட்கொள்வதும், நார்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் நன்மை பயக்கும்.

    டாக்டர் கமலி ஸ்ரீபால்

    டாக்டர் கமலி ஸ்ரீபால்

    * மிக அதிக வைட்டமின் ஈ சத்து கொண்டது. Antioxidant என இதனை குறிப்பிடுவர். இதனால் செல்கள் சிதைவு காப்பாற்றப்படுகின்றது.

    * நோய் எதிர்ப்பு சக்திக்கு இது மிக முக் கியமானது, ரத்தக்குழாய்களை பாதுகாக் கின்றது.ரத்தம் இறுகிக் கொள்ளாமல்  காக்கின்றது. ஒரு அவுன்சில் 45 சதவீதம் தேவையான வைட்டமின் ஈ கிடைக்கின்றது. தாது உப்புக்கள் நிறைந்தது: பாதாம் பருப்பு தாது உப்புகள் நிறைந்தது. மக்னீசியம், மங்கனீஸ், கால்ஷியம் காப்பர்சிங்க், பாஸ்பரஸ் நிறைந்தது, இவை எலும்புகளை பாதுகாக்க வல்லது. பாதாம் இருதய நோய் பாதிப்புகளை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் இவைகளை குறைக்க வல்லது. தாவர வகை புரதம் குறைந்தது, சில பாதாம்கள் உண்டாலே வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்.  நல்ல கொழுப்பு நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது. சுவையானது. இவ்வளவு சக்தி கொண்ட பாதாமினை அளவோடு மட்டுமே உண்ண வேண்டும் என ஏன் அதிகம் வலியுறுத்தப்படுகின்றது-.

    * அதிக பாதாம் ஜீரண கோளாறினை ஏற்படுத்தும். வயிறு உப்பி மலச்சிக்கல் ஏற்படும்.

    * பாதாம் அதிக வைட்டமின் ---ஈ சத்து நிறைந்தது. பாதாமினையும் அதிகமாக உட்கொண்டு கூடவே ஈ சத்து கூடுதல் கொண்ட முட்டை, பசலை கீரை, முழு தானியங்கள் இவற்றினையும் எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றுப் போக்கு, சோர்வு, கண்பார்வை மங்கி தெரிதல் போன்றவை ஏற்படும். எனவே கண்டிப்பாக பாதாமினை ஊற வைத்து 5 முதல் 10 வரை நன்கு மென்று உண்ணுங்கள்.

    *  அதிக பாதாம் உடல் எடையினைக் கூட்டும்.

    * சிறு நீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிக பாதாம் எடுத்துக் கொள்ளும் பொழுது ஏற்படுகின்றது.

    * அதிக பாதாம் அலர்ஜியினை உருவாக்கலாம்.

    * மிக அதிக பாதாம் மற்றும் மங்கனீஸ் அதிகம் உள்ள உணவுகளை நாம் உட்கொள்ளும் பொழுது ரத்த கொதிப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் இவற்றின் செயலினை பாதிக்கும்.

    * அதிக பாதாம் சாப்பிட்டால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். நச்சுத் தன்மையினை கூட உடலில் ஏற்படுத்தி விடும்.
    நமக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒன்று மிக அதிகமாக எதனையும் செய் வோம். நல்லது கூட தவறாக மாறி போகும், மற்றொன்று முறையாக எத்தனை முறை காதில் பீரங்கி வைத்து சொன்னா லும் அதனை காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டோம். ஆக நிதானமாகவும், முறையாகவும் செய்வது கடினம் என்றே ஆக்கி விட்டோம். இனியாவது எதனையும் எந்த அளவில் சாப்பிட வேண்டும். எந்த அளவு உடற்பயிற்சிசெய்ய வேண்டும் என்பதனை அவரவர் உடல் நிலைக்கேற்ப மருத்துவர் ஆலோசனையோடு பின்பற்ற வேண்டும்.

    நிறைய உணவுகள் உடலுக்கு எளிதில் நன்மை தருபவைதான். நாம் அதனை எந்த அளவு பயன்படுத்துகின்றோம் என்பதனை சிந்தித்து இவற்றினையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாமே.

    quinoa-இது விதை வகையினைச் சேர்ந்தது. சமீப காலமாக அதிக கவனத்தினை பெறுகின்றது. இதில் 70 சதவீதம் கார்போகைடிரேட் இருந்தாலும் இது புரதம், நார்சத்து மற்றும் தாது உப்புகள் மிகுந்தது. சர்க்கரை நோய் கட்டுப்பட, இருதய பாதுகாப்பு இவற்றுக் காகவும் இதனை பயன்படுத்துகின்றனர். குளூட்டன் சத்து இல்லாதது. குளூட்டன் அலர்ஜி கொண்டவர்களுக்கு ஏற்றது. சற்று கனமான ரவை போல் இருக்கும். இதனை சமைத்து காய்கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.

    ஓட்ஸ்

    இதுவும் 70 சதவீதம் கார்போகை டிரேட் கொண்டதுதான். புரதச் சத்தும், நார் சத்தும் நிறைந்தது. ஆய்வுகள் கூறுவது ஒட்ஸ் உணவு இருதய பாதிப்பு அபாயத்தையும், கொலஸ்டிரால் பாதிப் பினையும் நன்கு குறைக் கின்றது. ஓட்ஸ் உணவு வயிற்றில் நிறைவினைத் தருவதால் எடை குறைப் பிற்கும் உதவுகின்றது.

    வாழைப்பழம்

    சுமார் 140 கிராம் எடையுள்ள வாழைப் பழத்தில் 35 கிராம் அளவு கார்ப் போஹைடிரேட் கொண் டது. பொட்டாசியம் சத்து நிறைந்த கார ணத்தினால் உயர் ரத்த அழுத் தத்தினை குறைக்க உதவுகின்றது. இருதய ஆரோக்கியம் கூடுகின்றது. மேலும் வாழைப்பழத்தில் உள்ள வைட்ட மின் பி6, சி சத்து மிகுந்த நன்மை பயக்கின்றது.

    சர்க்கரை வள்ளி கிழங்கு

    நகர் புறங்களில் இந்த கிழங்கினை மறந்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. இக்கிழங்கு வைட்ட மின் ஏ, சி மற்றும் பொட்டாசியம் மிகுந்தது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது.

    பீட்ரூட்

    இதனை சமைத்தோ, ஜுசாகவோ எடுத்துக் கொள்வது நல்லது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க வல்லது. இருதய ஆரோக்கியத்தினைக் கூட்டுகின்றது.

    ஆப்பிள்

    விலை அதிகம் கூடி விட்ட பழங்களில் இதுவும் ஒன்று. வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தி  கொண்டது. இரு தய பாதுகாப்பு, சில வகை புற்று நோய் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்க வல்லது. ராஜ்மா எனப்படும் கிட்னி பீன்ஸ் கரும் சிவந்த நிறத்தில் இருக்கும் இந்த பருப்பு வகை அதிக புரதச் சத்து கொண்டது. அதிக அளவு வைட்டமின்கள், தாது உப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சர்க்கரை அளவினை ரத்தத்தில் சீராக்க உதவுவது. குடல் புற்று நோய் அபாயத்தினை குறைக்க வல்லது. வட இந்தியர்கள் நன்கு பயன்படுத்தும் இதனை நாமும் பயன்படுத்தி பலன் பெறலாமே.

    கொண்டை கடலை

    இதனை பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே நன்கு உள்ளது என்பதால் இது நல்ல புரத சத்து நிறைந்தது என்று சொன்னாலே போதும். ஆக அதிக சாதம், காரமான ஒரு குழம்பு என்றிராமல் மேலே கூறியவைகளையும் நாம் உணவில் சேர்க்கும்போது உணவும் சுவையாக இருக்கும். உடலும் நல்ல ஆரோக்கியம் பெறும். செய்வோமே.

    உணவு முறைகள்

    ஏன் நாம் இப்படி சமையல்  வேலை, சமைத்த உணவு என்ற ஒரு கருத்திலேயே ஆழ்ந்து இருக்கின்றோம். மூழ்கி இருக்கின்றோம் என்றே புரிவதில்லை, சரி அப்படித்தான் அதனை சரியாக செய்து சாப்பிடுகின்றோமா எனில் நிறைய இடத்தில் அதுவும் இல்லை. குறைந்தது 6 குண்டு இட்லி, அதற்கு ஒரு காரமான ஏதா வது சட்னி என கார்போகைடிரேட்டினை கொட்டி வயிற்றினை பானை போல் ஆக்கி விடுகின் றாம். சாப்பாட்டிற்கேற்ற உடல் உழைப்பும் இல்லை. பொதுவாக ஓட்டல்களில் 3 வகை நிறங் களில் சட்னி, ஒரு சாம்பார் என இட்லிக்குக் கொடுப் பார்கள். இதில் எத்தனை பொருட்கள் சேர்கின்றன என்று பாருங்கள் தேங்காய், பொட்டுகடலை, தக்காளி, புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், பருப்பு, புளி மஞ்சள்தூள், வெங்காயம் மற்றும் காய்கறி இப்படி சாப்பிடும் பொழுது நிறைய ஊட்டச்சத்தும் கிடைக்கும். சாப்பிடும் அளவில் 3 இட்லியும் குறையும்.

    * காலையில் 4 முதல் 5 பாதாம், எலுமிச்சை நீர் மற்றும் காலை உணவிற்கு முன்னால் சிறிது பழம் என எடுத்துக் கொண்டால் நொறுக்கு தீணிகளுக்கு மனம் ஓடாது.

    * பழங்கள், சாக்லெட் என உண்டு பாருங்கள். உடல் மிக சுறுசுறுப்பாக இருப்பதை உடனே உணர் வீர்கள். * கிரீன் டீ, பாதாம், பிஸ்தா இவைகள் சிறிதளவு என அன்றாட பழக்கம் ஆக்கி விட வேண்டாமா-?

    * வாரம் ஒரு முறையாவது சிறிது முளை கட்டிய பயறுகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாமா-?

    * வாரத்தில் சில நாட்களாவது தாவர வகைகளை உணவில் சேர்த்து பழகலாமே தாவர வகை உணவுகளால் மூட்டு வலி பாதிப்புகள் குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * தாவர வகை உணவு சருமத்தினை சுத்தமாக வைக்க உதவுகின்றது. உடலின் கடுமையான துர் வாசனைகள் விலகும். * தூக்கம் நன்கு வருகின்றது. * இத்தனை நல்ல பயன்களைத் தரும்  தாவரவகை உணவினை இன்னமும் ஏன் பழக்கத்தில் கொண்டு வராது இருக்கின்றோம்.

    * மதிய உணவில் முடிந்தால் சிறிய கப் அளவு கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், பச்சடி, மோர், சிகப்பு அரிசி சாதம் என்று வானவில் நிறத்தில் உண்ணலாமே, வறுத்த, பொரித்த, மசாலா, எண்ணை இவைகளை தவிர்க்கலாமே, ஏன் செய்ய மறுக்கிறோம்.
    நம்பியூர் அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ராமநாதபுரம் என்ற பகுதியில் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ராமநாதபுரம் அருகே சென்ற போது ஒரு பிக்கப் வேனில் சில நபர்கள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் என்ன மூட்டை ஏற்றுகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து போலீசார் மூட்டைகளை பரிசோதித்து பார்த்தபோது ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனே மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து போலீசார் ரேசன் அரிசி கடத்திய வாகனம் மற்றும் 1½ ரேசன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்து நம்பியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், திருத்தம் செய்பவர்கள் தங்கள் பெயரை சேர்த்து, திருத்தம் செய்து கொள்ளலாம்.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற 1-1-2022-ம் ஆண்டில் 18 வயது நிரம்பியவர்கள், தற்போது புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், திருத்தம் செய்பவர்களும் தங்கள் பெயரை சேர்த்து, திருத்தம் செய்து கொள்ளலாம். இதற்காக இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, நெல்லை, பாளை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 1,483 வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். அவர்களிடம் அந்த பகுதி மக்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதற்கான படிவத்தை அங்கேயே பெற்று, பூர்த்தி செய்து கொடுத்து தங்கள் பெயரை சேர்க்கலாம். நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் இந்த பணியை அரசியல் கட்சியினரும் பார்வையிட்டு வாக்காளர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர்.

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்காளர் சேர்க்கும் பணியை பார்வையிட்டு, தங்கள் கட்சி நிர்வாகிகளை துரிதப்படுத்தினர்.

    இதுபோல நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜாவும் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்காளர் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்ட தங்களது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தினார்.

    ஈரோட்டில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடை பகுதியில் தண்டவாள பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த ரெயில் பயணிகள் இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது. ஆனால் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 10 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஏற்கனவே விசுவக்குடி, கொட்டரை நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 71 ஏரிகளில், 18 ஏரிகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில், தற்போது கீழப்பெரம்பலூர், வயலூர், கிழுமத்தூர், அகரம்சீகூர், பேரையூர், சாத்தனவாடி, நெய்குப்பை, கீரவாடி ஆகிய ஏரிகளும், லாடபுரம் பெரிய ஏரி, வி.களத்தூர் சிறிய ஏரி என 10 ஏரிகளும் நிரம்பி, மறுகாலில் உபரி நீர் வெளியேறி செல்வதால், அதன் அருகே உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    பல குளங்களும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் மாவட்டத்தில் நெற்குணம், பென்னக்கோணம், காரியானூர் ஆகிய 3 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. பெரம்பலூர் சிறிய ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, ஆயிக்குடி ஏரி ஆகிய 3 ஏரிகளில் 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 6 ஏரிகளில் 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 11 ஏரிகளில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 22 ஏரிகளில் ஒரு சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.

    பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள கோரையாறு அருவி, எட்டெருமை பாழி அருவி, லாடபுரம் மயிலூற்று அருவி, புதுநடுவலூர் அத்தி அருவி ஆகியவற்றிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஈரோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 24). இவர் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். 

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மலையம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

    இந்த வழக்கில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சுபாசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார். இதைத்தொடர்ந்து சுபாஷ் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக அரசின் இயலாமையை மறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறை கூறுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
    சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த அதி கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. அதில் இருந்து தற்போது வரை சென்னை நகரம் சூரியனை காணவில்லை. மேக மூட்டமாக வானம் காணப்பட்டு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.

    இதனால் பெரும்பாலான இடத்தில் வெள்ளம் வடியாத நிலை உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் வெள்ளம் வடியாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சியை கண்டித்துள்ளது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மழைநீர் வடிகால் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி எழுப்பியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கோப்புப்படம்

    இந்த நிலையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது. மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை. தமிழக அரசின் இயலாமையை மறைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறுகிறார்’’ என்றார்.

    நாளை சென்னையில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    மாணவியை திருமணம் செய்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் உறவினர்கள்.

    அந்த சிறுமி அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுவன் பழகி வந்துள்ளான். சம்பவத்தன்று மாணவியை சிறுவன் கடத்தி சென்று உள்ளான்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வெள்ளித் திருப்பூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சிறுவனைத் தேடி வந்தனர். விசாரணையில் சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து இருவரையும் மீட்ட போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×