search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    நெல்லை மாவட்டத்தில் இன்று 1,483 வாக்குசாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

    சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், திருத்தம் செய்பவர்கள் தங்கள் பெயரை சேர்த்து, திருத்தம் செய்து கொள்ளலாம்.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற 1-1-2022-ம் ஆண்டில் 18 வயது நிரம்பியவர்கள், தற்போது புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், திருத்தம் செய்பவர்களும் தங்கள் பெயரை சேர்த்து, திருத்தம் செய்து கொள்ளலாம். இதற்காக இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, நெல்லை, பாளை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 1,483 வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். அவர்களிடம் அந்த பகுதி மக்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதற்கான படிவத்தை அங்கேயே பெற்று, பூர்த்தி செய்து கொடுத்து தங்கள் பெயரை சேர்க்கலாம். நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் இந்த பணியை அரசியல் கட்சியினரும் பார்வையிட்டு வாக்காளர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர்.

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்காளர் சேர்க்கும் பணியை பார்வையிட்டு, தங்கள் கட்சி நிர்வாகிகளை துரிதப்படுத்தினர்.

    இதுபோல நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜாவும் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்காளர் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்ட தங்களது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தினார்.

    Next Story
    ×