என் மலர்
ஈரோடு
- ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரெயில்வே மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- இதனால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
ஈரோடு:
ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரெயில்வே மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டேல் வீதி, சிதம்பரம்காலனி, 80 அடி ரோடு, காந்திஜிரோடு, பெரியார்நகர் வீட்டுவசதி வாரியம், எஸ்.கே.சி.ரோடு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மரப்பாலம், வளையக்கார வீதி, பாலசுப்ராயலு வீதி.
நேதாஜிரோடு, கள்ளு க்கடைமேடு, முனி சிபல்சத்தி ரம், ஜீவானந்தம்ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோல் ஈரோடு சூரியம்பாளையம் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் நசியனூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தட்டான்குட்டை, ஓடக்காடு, செல்லப்பம்பாளையம், லட்சுமிபுரம், கே.ஆர்.பி.நகர், சித்தோடு, வசுவபட்டி, நடுப்பாளையம், டெலிபோன்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
ஈரோடு சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மாணிக்க ம்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்ப தால் அம்பேத்கர் நகர், நரிப்பள்ளம், மரவ பாளையம், அம்மன்நகர், ஆசிரியர் காலனி, செந்தமிழ்நகர், சாமிநகர், எல்லப்பாளையம், பெரிய சேமூர், சின்னசேமூர், வேலன்நகர், எம்.ஜி.ஆர்.நகர், சூளை, ஈ.பி.பி.நகர், அருள்வள்ளன் நகர், தென்றல் நகர், கள்ளன்கரடு, சீனாகாடு, பொன்னிநகர், மாமரத்துபாளையம், சொட்டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடுகளை திருடி சென்று கொண்டிருப்பதை கண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
- இதில் அவர்கள் திருடிய ஆட்டை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கறிக்கடையில் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி சாவடி ப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (44). இவர் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வருகிறார்.
இவர் வீட்டில் ஏராள மான ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். ஆடு, மாடுகளை அதே பகுதியில் தனக்கு சொந்தமான தோட்ட த்திற்கு சென்று தினமும் காலை மேய்க்க விட்டு மாலை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம்.
இதேபோல் நேற்றும் நந்தகுமார் ஆடு, மாடுகளை தோட்டத்தில் மேய்க்க விட்டிருந்தார். பின்னர் மதியம் நந்தகுமார் தோட்டத்திற்கு வந்து பார்த்த போது மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடுகளை திருடி சென்று கொண்டிருப்பதை கண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த 2 பேரையும் நந்தகுமார் மடக்கி பிடித்தார். இது குறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (44), மற்றொருவர் ஊத்துக்குளி காங்கேயம்பாளையம் பகுதியை சேர்ந்த பூபதி (37) என்பதும் அவர்கள் ஆட்டை திருடி சென்றதும் ஒப்புக்கொண்டனர்.
இதில் அவர்கள் திருடிய ஆட்டை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கறிக்கடையில் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன. மாவட்டத்தில் மாதம் ரூ.60 கோடி வரை சீட்டு வசூல் நடக்கிறது.
- தமிழகத்தில் மட்டும் சிட்பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு தொழில் வரி, வருமான வரி என பல்வேறு வரிகள் மூலம் ரூ.2,000 கோடி வருமானமாக கிடைக்கிறது.
ஈரோடு:
சிட்பண்ட் நிறுவனங்கள் சீட்டுப் பிடித்து கிடைக்கும் கமிஷன் தொகைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட சீட் பண்ட்ஸ் சங்கத்தினர் ஜி.எஸ்.டி. துணை ஆணையரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் ராமசாமி, செயலாளர் சண்முகம் ஆகியோர் ஈரோடு ஜி.எஸ்.டி. துணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற 2,600 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன. மாவட்டத்தில் மாதம் ரூ.60 கோடி வரை சீட்டு வசூல் நடக்கிறது.
இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சீட்டு பிடிப்பதன் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய 5 சதவீத கமிஷன் தொகைக்கு ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஜி.எஸ்.டி. உயர்வு வரும் 18-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த ஜி.எஸ்.டி. உயர்வால் இந்த வரிக்கான தொகையை சீட்டு போடும் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களுக்கு வழங்க மறுக்கின்றனர்.
இந்த ஜி.எஸ்.டி. காரண மாக ஏற்கனவே முறையற்ற மற்றும் அங்கீகாரம் பெறாமல் பல இடங்களில் சீட்டு நடத்தப்படுகிறது. இதனால் அங்கீகாரம் பெற்ற பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் சிட்பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு தொழில் வரி, வருமான வரி என பல்வேறு வரிகள் மூலம் ரூ.2,000 கோடி வருமானமாக கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு இந்த வருவாய் பாதிக்கப்படும்.
வங்கிகள் வசூலிக்கும் வட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதில்லை. அதே போன்ற சேவையை தான் சிட்பண்ட்ஸ் நிறுவன ங்களும் வழங்குகின்றன.
மேலும் சீட்டு பிடிக்கும் வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாத நிலையில் எங்களை போன்ற சிறிய சிட்பண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு இதனை கவனத்தில் கொண்டு சிட்பண்ட்ஸ் நிறு வனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை முழு மையாக ரத்து செய்ய வேண்டும். எங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
- பின்னர் ஏரியில் சிக்கி தவித்த மணி, ஜானகியை மீட்க போராடினர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து இன்று அதிகாலை 3:30 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிக்கு செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கிளம்பியது. லாரியை சுப்பிரமணி என்பவர் ஓட்டினார்.
லாரியில் செங்கல் சூலை தொழிலாளர்கள் மணி மற்றும் ஜானகி பயணம் செய்தனர். லாரி ஆப்பக்கூடல் அடுத்த கூத்தம்பூண்டி ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கிய லாரி கட்டுப்பாட்டை இழந்து கூத்தம்பூண்டி ஏரிக்குள் கவிழ்ந்தது.
இதில் லாரி டிரைவர் சுப்பிரமணி நீச்சல் அடித்து கொண்டு ஏரியிலிருந்து கரை ஏறினார். பின்னர் சுப்பிரமணி அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் ஏரியில் சிக்கி தவித்த மணி, ஜானகியை மீட்க போராடினர். எனினும் முடியவில்லை இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பரிசல் ஓட்டிகளை உதவியுடன் மணி, ஜானகி 2 பேரையும் பத்திரமாக ஏரியில் இருந்து மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு தயாராக இருந்த 108 மருத்துவ உதவியாளர்கள் கோகுலப்பிரியன், தாமோதரன் ஆகியோர் மணி மற்றும் ஜானகிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- மகனின் நிலைமையை கண்டு தந்தை சிவக்குமாரவேலு மனவேதனையடைந்த நிலையில் இருந்து வந்தார்.
- இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சிவக்குமாரவேலு சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் சிவக்குமாரவேலு (60). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு கணேசன், கிஷோர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் முதல் மகனுக்கு திருமணமாகிவிட்டது. 2-வது மகன் கிஷோர் திருமணம் செய்யாமல் இருந்து வந்ததோடு சமீபகாலமாக குடிபோதைக்கும் அடிமையாகிவிட்டார்.
மகனின் நிலைமையை கண்டு தந்தை சிவக்குமாரவேலு மனவேதனையடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று கிஷோர் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தந்தை சிவக்குமாரவேலு பல்வேறு இடங்களில் மகனை தேடியும் எந்த விபரமும் தெரியவில்லை.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சிவக்குமாரவேலு சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுப்பாளையம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க வரும் 15-ந் தேதி காலை 11 மணிக்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டரின் வழிகாட்டுதல் படி ஏலம் ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் இந்த ஏலம் ரத்து செய்யவும்வழிவகை இருப்பதாக அந்த ஏல அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். பண்டிகையின் போது நடைபெறும் மாட்டுச் சந்தை குதிரைச் சந்தையை காண ஏராளமானோர் வருவது வாடிக்கையாக தொன்று தொட்டு நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரண மாக பண்டிகை நடை பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் புதுப்பாளையம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க வரும் 15-ந் தேதி காலை 11 மணிக்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கலெக்டரின் வழிகாட்டுதல் படி ஏலம் ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் இந்த ஏலம் ரத்து செய்யவும்வழிவகை இருப்பதாக அந்த ஏல அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பண்டிகை நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பத்தில் மீண்டும் அந்தியூர் பகுதி மக்களும் வெளி மாவட்டத்தில் இருந்து கால்நடைகளை கொண்டு வரும் வியாபாரிகளும் உள்ளனர்.
- பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
- கடந்த 6 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.41 அடியாக உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக கடந்த 6 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.41 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,561 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 90 அடியை கடந்து விடும். இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மற்ற பிரதான அணைகளான வரட்டுபள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
வரட்டுபள்ளம் அணையின் முழு கொள்ளளவு 33.50 அடியாகும். கடந்த 2 நாட்களாக வரட்டு பள்ளம் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வரட்டுபள்ளம் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.43 அடியாக உள்ளது. இந்த அணை மூலம் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இதேபோல் 30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.03 அடியாக உள்ளது. இதேபோல் மற்றொரு அணையான 41.75 அடி கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாக உள்ளது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மின் கசிவால் ஏற்பட்ட தீயை மோகன்குமார் அனைத்து விட்டு மின் ஓயரை கம்பால் அடித்து துண்டித்து விட்டு ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்டார்.
- இது குறித்து வெள்ளோடு போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்கு மார்(27). இவருக்கு திருமணமாகிவிட்டது. மோகன்குமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. மோகன்குமார் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மோகன் குமார் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவால் ஏற்பட்ட தீயை மோகன்குமார் அனைத்து விட்டு மின் ஓயரை கம்பால் அடித்து துண்டித்து விட்டு ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் இரவு தூங்கு சென்று விட்டார். மறுநாள் காலை மோகன்குமார் மனைவி எழுந்து பார்த்தபோது மோகன் குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது நெற்றில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்திருந்தது. குடிபோதையில் கீழே விழுந்தாரா? அல்லது மின் கசிவால் ஏற்பட்ட மின் ஒயரை கம்மல் அடித்தபோது அதனால் காயம் ஏற்பட்டதா? என்று தெரியவில்லை.
இது குறித்து வெள்ளோடு போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மோகன்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மோகன்குமார் சாவுக்கான உண்மையான காரணம் தெரிய வரும் போலீசார் தெரிவித்தனர்.
- ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.
- கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் ஆடி பண்டிகையொட்டி இந்த வாரம் முதல் மீண்டும் வெளியூர் வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாகவும், மொத்த வியாபாரிகள் 30 சதவீதத்தை தாண்டி நடந்ததாகவும், ஒரு சில ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை விற்பனை அதிக அளவில் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-
ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.
குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது. வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது.
கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் ஏற்னவே இருந்த ஜவுளிகளை பழைய விலைக்கு விற்பனை செய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் வரும் போது, விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. ஆடிப்பண்டிகை வரை தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை, பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மா பாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, மு.பு.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, பி.என்.நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார்.
- இதுகுறித்து வீரப்ப–ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த பெரியசேமூர், ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(37). இவரது மனைவி உமாதேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
விஜயகுமார் மருத்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். விஜயகுமார் தனது மனைவி மகன்கள் மற்றும் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மனைவி, மகன்கள் வீட்டுக்கு வந்த போது விஜயகுமார் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்ப–ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவானி அடுத்த குருப்ப நாயக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(27). ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பார்சல் பண்ணும் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.
இதனால் கடந்த சில நாட்களாக சரவணன் மனவருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் சம்பவத்தன்று சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி வர்ணபுரம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(21). தமிழரசன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு டைப்ரைட்டிங் கிளாசுக்கு போயிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மேல் படிப்பு படிக்க விருப்பப்பட்டு தமிழ்செ ல்வன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் தங்களிடம் மேல் படிப்பு படிக்க வைக்க வசதி இல்லை என்று அவரது பெற்றோர் கூறிவிட்டனர்.
இதனால் தமிழரசன் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று தமிழரசன் எலி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தமிழரசன் அனுமதிக்க ப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (31). இவருக்கும் புளியம்பட்டி அருகே உள்ள குரும்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த அம்சவேணி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபித்து கொண்டு அம்சவேணி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் லோகநாதன் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து உள்ளார். தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கூறி வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த லோகநாதன் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து விட்டார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அவரிடம் 25 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
- இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூர் போலீசார் உப்புபள்ளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
அவரிடம் 25 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் காளியூர் செல்லியபாளையம் பகுதியை சோ்ந்த வேலுச்சாமி (65) என்பதும் மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனா்.






