search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abolished"

    • ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன. மாவட்டத்தில் மாதம் ரூ.60 கோடி வரை சீட்டு வசூல் நடக்கிறது.
    • தமிழகத்தில் மட்டும் சிட்பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு தொழில் வரி, வருமான வரி என பல்வேறு வரிகள் மூலம் ரூ.2,000 கோடி வருமானமாக கிடைக்கிறது.

    ஈரோடு:

    சிட்பண்ட் நிறுவனங்கள் சீட்டுப் பிடித்து கிடைக்கும் கமிஷன் தொகைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட சீட் பண்ட்ஸ் சங்கத்தினர் ஜி.எஸ்.டி. துணை ஆணையரிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் ராமசாமி, செயலாளர் சண்முகம் ஆகியோர் ஈரோடு ஜி.எஸ்.டி. துணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற 2,600 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன. மாவட்டத்தில் மாதம் ரூ.60 கோடி வரை சீட்டு வசூல் நடக்கிறது.

    இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சீட்டு பிடிப்பதன் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய 5 சதவீத கமிஷன் தொகைக்கு ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

    இந்த ஜி.எஸ்.டி. உயர்வு வரும் 18-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த ஜி.எஸ்.டி. உயர்வால் இந்த வரிக்கான தொகையை சீட்டு போடும் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களுக்கு வழங்க மறுக்கின்றனர்.

    இந்த ஜி.எஸ்.டி. காரண மாக ஏற்கனவே முறையற்ற மற்றும் அங்கீகாரம் பெறாமல் பல இடங்களில் சீட்டு நடத்தப்படுகிறது. இதனால் அங்கீகாரம் பெற்ற பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மட்டும் சிட்பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு தொழில் வரி, வருமான வரி என பல்வேறு வரிகள் மூலம் ரூ.2,000 கோடி வருமானமாக கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு இந்த வருவாய் பாதிக்கப்படும்.

    வங்கிகள் வசூலிக்கும் வட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதில்லை. அதே போன்ற சேவையை தான் சிட்பண்ட்ஸ் நிறுவன ங்களும் வழங்குகின்றன.

    மேலும் சீட்டு பிடிக்கும் வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாத நிலையில் எங்களை போன்ற சிறிய சிட்பண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஒன்றிய அரசு இதனை கவனத்தில் கொண்டு சிட்பண்ட்ஸ் நிறு வனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை முழு மையாக ரத்து செய்ய வேண்டும். எங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×