வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

மின் கசிவால் ஏற்பட்ட தீயை மோகன்குமார் அனைத்து விட்டு மின் ஓயரை கம்பால் அடித்து துண்டித்து விட்டு ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்டார். இது குறித்து வெள்ளோடு போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்கு மார்(27). இவருக்கு திருமணமாகிவிட்டது. மோகன்குமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. மோகன்குமார் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மோகன் குமார் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவால் ஏற்பட்ட தீயை மோகன்குமார் அனைத்து விட்டு மின் ஓயரை கம்பால் அடித்து துண்டித்து விட்டு ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் இரவு தூங்கு சென்று விட்டார். மறுநாள் காலை மோகன்குமார் மனைவி எழுந்து பார்த்தபோது மோகன் குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது நெற்றில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்திருந்தது. குடிபோதையில் கீழே விழுந்தாரா? அல்லது மின் கசிவால் ஏற்பட்ட மின் ஒயரை கம்மல் அடித்தபோது அதனால் காயம் ஏற்பட்டதா? என்று தெரியவில்லை.

இது குறித்து வெள்ளோடு போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மோகன்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மோகன்குமார் சாவுக்கான உண்மையான காரணம் தெரிய வரும் போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com