search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporary stalls"

    • புதுப்பாளையம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க வரும் 15-ந் தேதி காலை 11 மணிக்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டரின் வழிகாட்டுதல் படி ஏலம் ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் இந்த ஏலம் ரத்து செய்யவும்வழிவகை இருப்பதாக அந்த ஏல அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். பண்டிகையின் போது நடைபெறும் மாட்டுச் சந்தை குதிரைச் சந்தையை காண ஏராளமானோர் வருவது வாடிக்கையாக தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரண மாக பண்டிகை நடை பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்த சூழ்நிலையில் புதுப்பாளையம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க வரும் 15-ந் தேதி காலை 11 மணிக்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கலெக்டரின் வழிகாட்டுதல் படி ஏலம் ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் இந்த ஏலம் ரத்து செய்யவும்வழிவகை இருப்பதாக அந்த ஏல அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் பண்டிகை நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பத்தில் மீண்டும் அந்தியூர் பகுதி மக்களும் வெளி மாவட்டத்தில் இருந்து கால்நடைகளை கொண்டு வரும் வியாபாரிகளும் உள்ளனர்.

    ×