என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு கே.என்.பாளையம் நரசபுரம் பகுதியில் வீட்டிற்கு அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதையடுத்து முத்துசாமியை பங்களாபுதூர் போலீசார் கைது செய்து அவர் வளர்த்த 3 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கே.என்.பாளையம் நரசபுரம் பகுதியில் வீட்டிற்கு அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் பங்களாபுதூர் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு ரோந்து சென்றனர்.

    அப்போது நரசபுரம் பகுதியில் முத்துசாமி (31) என்பவர் அவரது வீட்டிற்கு அருகே உள்ள காலி இடத்தில் செடிகளுக்கு இடையே துணியை கட்டி மறைத்து கஞ்சா செடியை வளா்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து முத்துசாமியை பங்களாபுதூர் போலீசார் கைது செய்து அவர் வளர்த்த 3 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    • மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து, 221 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • மேலும் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையொட்டி சிலர் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீஸ்சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

    இதில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து, 221 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த முனியப்பன் மது குடித்து விட்டு வந்துள்ளார்.
    • இதனால் ருக்மணி அவரது மகன்களுடன் கோபித்துக்கொண்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அங்கன்னகவுண்டன் புதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முனியப்பன்(34). கூலி தொழிலாளி. இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    முனியப்பனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த முனியப்பன் மது குடித்து விட்டு வந்துள்ளார்.

    இதனால் ருக்மணி அவரது மகன்களுடன் கோபித்துக்கொண்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதில் மனவேதனை அடைந்த முனியப்பன் மதுப்பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.
    • இதனால் இப்பகுதி முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.

    இதனால் இப்பகுதி முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்நிலையில் தினசரி கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஞாயிற்று க்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    காலை முதல் கூடுதுறைக்கு வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த நபர்களுக்கு திதி, எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர்.
    • இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் தினமும் வந்து செல்கிறார்கள்.

    தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். தொடர்ந்து அவர்கள் அணை பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சாப்பிட்டு செல்வார்கள். மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளி களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர். தொடர்ந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் தடுப்பணையில் கொட்டும் தண்ணீ ரில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை குடும்பத்துடன் சாப்பிட்டனர். மேலும் பலர் தடப்பணையின் வெளியில் விற்கப்படும் மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.

    இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பூங்காவுக்கு வந்த சிறுவர்- சிறுமிகள் ஊஞ்சல் விளை யாடினர். மேலும் பெண்கள், ஆண்கள் என பலர் பூங்கா வில் விளை யாடி மகிழ்ந்த னர். இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காண ப்பட்டது.

    • மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய்க்கு சுதந்திர தின விழா, காந்தி ஜெயந்தி மற்றும் குடியரசு தின விழாவின் போது சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
    • அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, பிரதோஷம் மற்றும் அஷ்டமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே செந்தாம் பாளையத்தில் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய்க்கு 1997-ம் ஆண்டு கோவில் அமைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கடந்த 1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி செந்தம்பாளையம் வையாபுரி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் காந்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கோவிலில் தினமும் பூஜை நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் வளாகத்தில் விநாயகர் சரஸ்வதி, லட்சுமி, சத்தீஸ்வரர், துர்க்கை, முருகன், ஆஞ்ச நேயர், அய்யப்பன் மற்றும் காலபைரவர் சுவாமிகளுக்கு தனித்தனி ஆலயங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சுவாமிகளுக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய்க்கு சுதந்திர தின விழா, காந்தி ஜெயந்தி மற்றும் குடியரசு தின விழாவின் போது சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மேலும் அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, பிரதோஷம் மற்றும் அஷ்டமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    கவுந்தப்பாடி மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய் கோவி லில் 154-வது காந்தி ஜெயந்தி விழாவையொட்டி 26-ம் ஆண்டு பொங்கல் திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    இதையடுத்து காலை 9 மணிக்கு மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய்க்கும் புனித நீர் மற்றும் நவதிரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாத்மா காந்திக்கு கையில் தேசியக்கொடி கொடுத்து பொங்கல் படைத்து சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது.

    விழாவில் பவானி, அந்தியூர், அத்தாணி, கோபி செட்டிபாளையம், காஞ்சி கோவில், பெருந்துறை, சித்தோடு, ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தேச பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியை, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி செந்தாம்பாளையம் காந்தி கோவிலுக்கு இன்று காலை தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி ஆனந்தன் வந்தார். தொடர்ந்து அவர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தரிசனம் செய்தார்.

    விழா ஏற்பாடுகளை நிர்வாகி தங்கராஜ், ஊர் கவுண்டர் ஆறுமுகம், ஊர்காரியக்காரர் பழனிச்சாமி, கோவில் அர்ச்சகர் கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.
    • இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருவதால் இதை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த னர்.

    ஈரோடு:

    புரட்டாசி மாதம் பெருமாள் மற்றும் ஆஞ்ச நேயர், மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக கருதி பெருமாள் வழிபாடு செய்வர். பலரும் விரதமி ருந்து பெருமாளை வழிபாடு செய்வது வழக்கம், புரட்டாசி யில் வரும் சனிக்கிழமை மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.

    இதையொட்டி சென்னி மலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சென்னிமலை அடு த்துள்ள மேலப்பாளையம் ஆதிநாரயணப்பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதில் ஆயி ரக்கணக்கான பக்த ர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.

    முருங்கத்தொழுவு கிராமம் வடுகபாளையம் அடுத்துள்ள மலை மீது அமைந்துள்ள அணி யரங்கப்பெருமாள் கோவி லில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வெள்ளோடு பெருமாள் கோவில், தண்ணீர்பந்தல் கிருஷ்ண பெருமாள் கோவில், கவுண்டம் பாளை யம் வெங்கடேஷ பெருமாள் கோவில் மற்றும் சென்னி மலை டவுன், ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணு விற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

    அதை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்க ப்பட்டது.

    ஈரோடு கோட்டை பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. இதை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    முன்னதாக மங்களகிரி பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது.

    இதையொட்டி இன்று காலை பவானி, ஈரோடு, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    அதேபோல் சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவப் பெருமாள் சன்னதியில் உள்ள உற்சவர் மற்றும் மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மூல வாய்க்கால் மலை ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவி யங்கள் அடங்கிய அபி ஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடை பெற்றன. அதை தொடர்ந்து மலையை சுற்றி சிறிய தேர் மூலம் சுவாமி திருவீதி உலா வந்தது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில், மேட்டு வளவு பெருமாள் கோயில், மொடச்சூர் பெருமாள் கோவில்,கூகலூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.

    மேலும் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவி லில் இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு திருப்பதி அலங்கா ரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதே போல் அந்தியூர் அழகுராஜ பெருமாள், தவிட்டு பாளையம் வரத ராஜ பெருமாள், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயண பெருமாள், பெருந்துறை பிரசன்ன வெங்கட ரமண பெருமாள், சத்தியமங்கலம் ேகாட்டு வீராம்பாளையம் ெபருமாள், ஈரோடு சத்தி ரோடு கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாவட்ட த்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செயய்ப்பட்டது.

    இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருவதால் இதை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த னர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • மலைப்பகுதியில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைத்து கொள்ள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தல் சந்தோஷினி சந்திரா பேசியதாவது:

    வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை இன்னல்களை எதிர் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளும் வகையில் வட்டார அளவில் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மீட்பு குழு, நிவாரண முகாம் மேலாண்மைக் குழு, சிறப்பு குழு அமைத்து பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிட ப்பட்டுள்ளது.

    தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இயற்கை பேரிடர் கால ங்களில் செயல்படுவதற்காக மருத்துவமனை பாதுகாப்பு செயல்திட்டம் அமைக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை யினர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்குதல் மற்றும் மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்துதல் வேண்டும்.

    வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக உடனுக்குடன் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மலைப்பகுதியில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைத்து கொள்ள வேண்டும்.

    கோட்ட அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையும், அந்தந்த வட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு அதற்கான அலுவலர்களை சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
    • பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்தபோது குஞ்சான் வீட்டில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மூங்கில் பாளையம் பகுதி சேர்ந்தவர் குஞ்சான் வயது 65. இவர் தனது மனைவி சென்னியம்மாள், மகள் பூங்கொடி, மருமகன் பாண்டியராஜ் மற்றும் பேத்திகளுடன் குடியிருந்து வருகிறார். இவரும் இவர் மனைவியும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களாக குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடித்து அளவுக்கு அதிகமாக முடித்துவிட்டு போதையில் வந்த குஞ்சான் குடும்பத்தாரிடம் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.

    இதை கண்ட அவரது மனைவி சத்தம் போடாமல் போய் தூங்குங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டார். இரவு அவரது மருமகன் பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்தபோது குஞ்சான் வீட்டில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    உடனே அவரை இறக்கி ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குஞ்சான் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சகுந்தலா வீட்டின் பின்புறம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை காய வைத்து கொண்டு இருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பா ளையம் வடக்கு சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சகுந்தலா (வயது 85). கோவிந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 5 மகள்கள் உள்ளனர். மகன் வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று மதியம் சகுந்தலா வீட்டின் பின்புறம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை காய வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது உறவின ர்கள், அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சகுந்தலாவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சகுந்தலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் லோகநாதன் முன்னிலை வைத்தார்.

    இந்த கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் இடை நின்றல் கண்காணிப்பு குழு தலை வராக சவுடம்மாள், கற்றல் மேம்பாட்டு குழு தலைவராக சந்தியா, பள்ளி மேலாண்மை குழு தலைவராக சம்ஷாத் பானு, பள்ளி கட்டமைப்பு குழு தலைவராக நாகராஜன் ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டனர்.

    ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளியில் உள்ள கட்டிடம் மற்றும் ஜன்னல் கதவுகள் பழுது பார்த்தல், சத்துணவு மையங்களுக்கு வர்ணம் பூசுதல், மின் இணைப்பு வழங்குதல், சத்துணவு கூட்டத்துக்கு என்று தனியாக தண்ணீர் குழாய் அமைத்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் நகல் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையரிடம் கொடுக்கப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3.06 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
    • மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும் மற்றும் கூடுதல் கலெக்டருமான மதுபாலன் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3.06 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

    இதில் 1.69 லட்சம் பேர் இதுவரை பணிக்கு வருகை புரிகின்றனர். கடந்தாண்டு, 1.22 லட்சம் குடும்பத்தார் பணி பெற்று பயனடை ந்துள்ளனர். நடப்பாண்டில் கடந்த மாதம் 20-ந் தேதி வரை 99,955 குடும்பத்தார் பணி செய்துள்ளனர்.

    ஒரு குடும்பத்துக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் 4,826 குடும்பத்துக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு ள்ளது. 404 குடும்பத்தார் 100 நாளை விரைவில் முடிக்க உள்ளனர்.

    மனித வேலை நாட்களின் கணக்குப்படி, 108.4 சதவீத பணிகள் செய்யப்பட்டுள்ளது. இது மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

    அதேநேரம் இப்பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் ஊதியம், சராசரியாக 241 ரூபாயாகும். கடந்தாண்டு பணியின் அடிப்படையில் பயனா ளிக்கு குறைந்த பட்சம் 224 ரூபாயும், அதிகப்பட்சம் 255 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில், சில பயனாளிகளுக்கு அதிகப்ப ட்சமாக 261 ரூபாய் ஊதி யமாக வழங்கப்பட்டுள்ளது.உரிய காலத்தில் ஊதியம் வழங்குவதில் நமது மாவட்டம் 91.96 சதவீதமாக உள்ளது. ஆன்லைனில் மூலம் அந்தந்த பயனாளியின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதால் குறைபாடுகள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×