தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலி

சகுந்தலா வீட்டின் பின்புறம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை காய வைத்து கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது.
தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பா ளையம் வடக்கு சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சகுந்தலா (வயது 85). கோவிந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 5 மகள்கள் உள்ளனர். மகன் வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார்.

சம்பவத்தன்று மதியம் சகுந்தலா வீட்டின் பின்புறம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை காய வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது உறவின ர்கள், அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சகுந்தலாவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சகுந்தலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com