சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் கைது

மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து, 221 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதையொட்டி சிலர் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீஸ்சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

இதில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து, 221 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com