search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடிவேரி தடுப்பணையில் குவிந்த  சுற்றுலா பயணிகள்
    X

    கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கொடிவேரி தடுப்பணைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர்.
    • இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் தினமும் வந்து செல்கிறார்கள்.

    தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். தொடர்ந்து அவர்கள் அணை பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சாப்பிட்டு செல்வார்கள். மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளி களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர். தொடர்ந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் தடுப்பணையில் கொட்டும் தண்ணீ ரில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை குடும்பத்துடன் சாப்பிட்டனர். மேலும் பலர் தடப்பணையின் வெளியில் விற்கப்படும் மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.

    இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பூங்காவுக்கு வந்த சிறுவர்- சிறுமிகள் ஊஞ்சல் விளை யாடினர். மேலும் பெண்கள், ஆண்கள் என பலர் பூங்கா வில் விளை யாடி மகிழ்ந்த னர். இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காண ப்பட்டது.

    Next Story
    ×