என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சத்தியமங்கலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் இந்த திம்பம் மலைப்பாதை வழியாக சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.

    இந்த மலைப்பாதையில் அவ்வப்போது லாரிகள் பழுதாகி நிற்பதும், விபத்துக்குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மைசூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு பஸ் இன்று திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்ப முற்பட்டபோது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த எதிரே வந்த லாரியின் வலதுபுறம் பஸ் எதிர்பாராத விதமாக மோதி நின்றது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். எதிரே வந்த லாரியின் மீது பஸ் லேசாக மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டதோடு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இறந்த வாலிபர் கருப்பு நிற ஜீன்ஸ், சந்தன நிறம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் 2 சர்ட் அணிந்திருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட காவிரி ரெயில்வே நிலைய தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஐந்துபனை பகுதியை சேர்ந்த சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் தமிழரசன்(27) என்பதும், சம்பவ இடத்தில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ரெயில்வே நிலைய தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும் எனவும், தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது.

    ஆனால், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்த வாலிபர் கருப்பு நிற ஜீன்ஸ், சந்தன நிறம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் 2 சர்ட் அணிந்திருந்தார். இறந்து போன வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 56 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், சமூகத்துக்காகவும், தமிழர் நலன், தமிழக மக்களுக்காக எடுத்த முயற்சிகளில் வைகோ, 80 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார்.
    • மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மின் கட்டணத்தை உயர்த்தும் நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

    ஈரோடு:

    மாமனிதன் வைகோ ஆவணப்பட வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று ஈரோட்டில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    56 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், சமூகத்துக்காகவும், தமிழர் நலன், தமிழக மக்களுக்காக எடுத்த முயற்சிகளில் வைகோ, 80 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார். தெலுங்கானாவில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்தபோது நானும் அவருடன் பங்கேற்றேன். அப்போது நாங்கள் வலதுசாரி அரசியலால் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசினோம். தமிழகம் உள்பட இந்தியாவில் வலதுசாரிகளால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள் குறித்து பேசினோம்.

    ஆனால் நான் விருதுநகர் தொகுதியை எனக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று பேசுவதற்காக சென்றதாக நாளிதழ் ஒன்று (தினத்தந்தி அல்ல) செய்தி வெளியிட்டது. அது தவறு. நான் எந்த தொகுதியை பெறுவது பற்றியும் அவருடன் பேசவில்லை.

    விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியதால் ஏற்படும் இழப்பை சமாளிக்க, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற வணிக பால் பாக்கெட்டுகளின் விலையை மட்டும்தான் அரசு உயர்த்தி இருக்கிறது. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மின் கட்டணத்தை உயர்த்தும் நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

    இவ்வாறு ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறினார்.

    • சம்பவத்தன்று இரவு சரஸ்வதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • அவரது குடும்பத்தினர் அவரை மீ்ட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா அய்யம்பாளையம் புதூரை சேர்ந்த பழனிசாமி மனைவி சரஸ்வதி(67). காய்கறி வியாபாரி.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சரஸ்வதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீ்ட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சரஸ்வதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சரஸ்வதியின் மகன் கார்த்தி கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • கொடுமுடி, கணபதி பாளையம், சிவகிரி, நடுபாளையம், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் பரா மரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    ஈரோடு:

    கொடுமுடி, கணபதி பாளையம், சிவகிரி, நடுபாளையம், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் பரா மரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுமுடி, சாலைப் புதூர், குப்பம் பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல் பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்தி பாளையம், அரசம் பாளையம், சோளக்காளி பாளையம், நாகமநாய்க்கன் பாளையம்.

    சிவகிரி, வேட்டுவபாளை யம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழ மங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங் காட்டு வலசு, எலலக்கடை, குல விளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப் பாைளயம், பாரப்பாளை யம், விளக்கேத்தி, குட்டப் பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளை யம், பெரும்பரப்பு, வடுக பட்டி, 24 வேலம் பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப் புதூர், ராக்கம்மா புதூர், இச்சிபாளையம், முத்தை யன் வலசு, கருக்கம் பாளை யம், ஊஞ்சலூர், ஒததக்கடை, வடக்கு புதுப்பாளையம்.

    ஈஞ்சம்பள்ளி, முத்து கவுண்டன் பாளையம், சோளங்கா பாளையம், பாசூர், ராக்கியா பாளையம், மடத்துப்பாளையம், கணபதி பாளையம், பச்சாம் பாளை யம், பழனி கவுண்டன்பாளை யம், பஞ்சலிங்க புரம், காங்கேயம் பாளையம், சாானார் பாளையம், குமரன் பாளையம்.

    நடுப்பாளையம், தாமரை பாளையம் மலையம் பாளை யம், கொம்பனை புதூர், பி.கே.மங்கலம், ஈஞ்சம் பள்ளி, கொளாநல்லி, கரு மாண்டாம் பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே. பாளையம், எம்.கே. புதூர், காளிபாளையம், கொளத்து பாளையம், செம் மாண்டாம் பாளையம், குட்டப்பாளையம்.

    பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சி பாளையம், ஈங்கூர், பாலப் பாளையம், மு.பிடாரியூர், வேலாயுதம் பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை, ஆர்.எஸ்., ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    • அந்தியூர்- அத்தாணி செல்லும் சாலையில் பாலம் அருகே மண பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் பலர் மண் பாண்ட பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.
    • கார்த்திகை தீப அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் திவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள பலர் அகல் விளக்கு தயா ரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதே போல் அந்தியூர்- அத்தாணி செல்லும் சாலையில் பாலம் அருகே மண பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் பலர் மண் பாண்ட பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கார்த்திகை தீப அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் திவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வித விதமாக டிசைன்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மண் அகல் விளக்குகளை தயார் செய்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் தயாரி க்கப்படும் கார்த்திகை தீப அகல்விளக்குகள் அந்தியூர் பகுதி மட்டுமின்றி ஈேராடு மாவட்டத்தின் பல பகுதி களுக்கும், மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படு கின்றது.

    மேலும் ஈரோடு, பவானி, அப்பக்கூடல், அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து இங்கு தயாரிக்கப்படும் கார்த்திகை தீப அகல் விளக்குகளை ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

    கடந்த ஆண்டு கொரோ னா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை தீப அகல் விளக்கு விற்பனை மந்த மாகவே காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை தீப அகல் விளக்குகள் அதிக அளவில் விற்பனை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மண்பாண்ட தொழிலா ளர்கள் தெரிவித்தனர்.

    இதையொட்டி இந்த பகுதி விளக்கு தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் வெள்ளி திருப்பூர், ஆலம்பாளையம் உள்ளி ட்ட பகுதிகளிலும்கார்த்திகை விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • நேற்று ஒரே நாளில் 6 உழவர் சந்தைகளில் 61.89 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இங்கு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால் மற்ற இடங்களை விட இங்கு காய்கறி விலை குறைவாக விற்கப்படுகிறது.

    இதனால் உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று முகூர்த்த நாள் மற்றும் பவுர்ணமியையொட்டி நேற்று அதிகாலை முதலே உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று ஒரே நாளில் 6 உழவர் சந்தைகளில் 61.89 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. இந்த காய்கறிகள் ரூ.18 லட்சத்து 4 ஆயிரத்து 735-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முதியவர் ஒருவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் வாங்கினால் அதிக பரிசு விழும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • சத்தியமங்கலம் போலீசார் சத்திய சீலன் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு, பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் செண்பகப் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெமினி (47). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று சத்தியமங்கலம் அருகே சத்தி பஜார் வீதியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஜெமினியிடம் தன்னிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் உள்ளதாகவும், அதை வாங்கினால் அதிக பரிசு விழும் என்றும் ஒவ்வொரு லாட்டரி சீட்டுக்கும் நிச்சயம் அதிர்ஷ்ட பரிசு உண்டு என ஆசை வார்த்தை கூறி யுள்ளார்.

    அவர் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அனைவருடமும் இதேபோல் லாட்டரி சீட்டு வாங்கும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து ஜெமினி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த முதிய வரை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    போலீசார் அந்த முதியவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் வலயார் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் (73) என்பது தெரிய வந்தது. அவர் கையில் ஒரு மஞ்சள் கலர் பை வைத்திருந்தார். அதை திறந்து பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 192 கேரளா லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும் ரூ. 8,700 ரொக்க பணம் இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் சத்திய சீலன் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு, பணத்தை பறிமுதல் செய்தனர். 

    • சத்திய மங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் பண்ணாரி கோவிலின் அருகே ஒரு காட்டு யானை குட்டியுடன் ரோட்டில் நடந்து சென்றது.
    • இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கடா மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக அடி க்கடி வனப்பகுதியை விட்டு வெளிேயறி வருகிறது. தொடர்ந்து யானைகள் ரோட்டில் உலாவி வருகிறது.

    அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் துரத்துவது, வழி மறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக கரும்புகள் ஏற்றி வரும் லாரிகளையும் வழி மறித்து அதில் இருந்து கரும்புகளை ருசித்து வரு வது அடிக்கடி நடக்கிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சத்திய மங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் பண்ணாரி கோவிலின் அருகே ஒரு காட்டு யானை குட்டியுடன் ரோட்டில் நடந்து சென்றது.

    தொடர்ந்து குட்டியுடன் வந்த காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் ஒய்யாரமாக நடந்து சென்றது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அவர்கள் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தினர். தொடர்ந்து நீண்ட நேரத்துக்கு பிறகு அந்த யானைகள் வனப்பகுதிக்கு சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் சென்றனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, ஆசனூர், தலமலை வனப் பகுதிகளில் இருந்து யானை கள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே வனப் பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகை ப்படம் எடுக்க கூடாது.

    வாகன ஓட்டிகள் வன பகுதி ரோடுகளில் அதிக ஒலி எழுப்பும் ஆரன்களை பயன்படுத்தாமல் செல்ல வேணடும். யானை களுக்கு தொந்தரவு செய்யும் வண்ணம் வாகனத்தை நிறுத்துவதும் செல்பி எடுப்பதும் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வன த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • முத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் பொன்னுசாமியின் மொபட்டை திருடியது தெரிய வந்தது.
    • இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள மணிமலையை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் சென்னிமலை மாரி யம்மன் கோவில் பொங்கல் திருவிழாவுக்கு தனது மொபட்டில் வந்திருந்தார்.

    தொடர்ந்து அவர் மொபட்டை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் மொபட் எங்கும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பொன்னு சாமி சென்னிமலை போலீ சில் புகார் செய்தார். போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த கணேசன் (வயது 37) என்பவர் பொன்னுசாமியின் மொபட்டை திருடியது தெரிய வந்தது. இவர் முத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழி யராக வேலை பார்த்து வருகிறார்.

    இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் கணேசனிடம் விசாரித்த போது, இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகன ங்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைதொடர்ந்து கணேசனை போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடை த்தனர்.

    • மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • மொடக்குறிச்சியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்கப்படும் என அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. இதற்கான இடத்தை மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

    இந்நிலையில் மொடக்குறிச்சி தாசில்தார் இடம் தேர்வு செய்வதில் காலம் தாழ்த்துவதுடன் மொடக்குறிச்சிக்கு பதில் வேறு இடத்தை தேர்வு செய்து கொடுப்பதாக புகார் எழுந்தது. வேறொரு இடத்திற்கு பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் அரசு ஆணைப்படி மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று மொடக்குறிச்சி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கடைகளிலும் கடை அடைப்பு குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த நோட்டீசில் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என எழுதப்பட்டிருந்தது.

    மொடக்குறிச்சியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி நால் ரோட்டில் பொதுமக்கள், வணிகர்கள் ஒன்று திரண்டு பேரணியாக மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடை அடைப்பு போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொடக்குறிச்சியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலத்திலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    இதையடுத்து டெங்கு காய்ச்சல் பரவி விடாமல் இருக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலத்திலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு மண்டலங் களிலும் வார்டு வாரியாக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக கடந்த சில நாட்களாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    குறிப்பாக வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியின் பின் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று பார்க்கின்றனர். அவ்வாறு தண்ணீர் தேங்கி இருந்தால் அந்த தண்ணீரை அகற்ற வலியுறுத்திகின்றனர். மேலும் அந்த இடத்தில் மஞ்சள், உப்பு போட்ட சொல்லி வருகின்றனர்.

    இதுபோல் வீட்டு அருகே தண்ணீர் தேங்காத வண்ணம் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் செப்டிக் டேங்க், குடிநீர் தொட்டி பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    சிரட்டை, பழைய டயர் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி கொள்ளாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கொசு உற்பத்தியாகும் சூழ்நிலையை ஏற்படுத்து பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 4 மண்டலத்திலும் வார்டு வாரியாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். பெரிய வாகனங்களில் ராட்ச எந்திரங்கள் மூலம் தெளித்து வருகின்றனர்.

    மிகக்குறுகிய சந்துகள், வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ×