என் மலர்
ஈரோடு
- தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்கி வருகிறது.
- பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்துகிறது.
அதன்படி நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,222 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 600 கன அடி இன்று முதல் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 300 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்கி வருகிறது.
இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 105 அடியை நெருங்கியதும் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்படும் என பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கராத்தே போட்டியை பொறுத்தவரை இரண்டு வகை உண்டு.
- ஈரோட்டில் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கம் வென்றேன்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பள்ளி மாணவிகள் மாநில அளவிலான சப் -ஜூனியர் கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதுப் பற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி கே. கே. நகர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செந்தாமரை. இவர்களுக்கு நேகா ஸ்ரீ(11), ஹரிணி ஸ்ரீ(10) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஹரிணிஸ்ரீ பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதேப்போல் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி கலையரசி. இவர்களது இளைய மகள் கீர்த்திகா(8). வெள்ளாங்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிகள் ஹரிணி ஸ்ரீ, கீர்த்திகா இருவரும் சென்னையில் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் மாண்போர்ட் பள்ளியில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் நடந்த 38-வது மாநில அளவிலான சப்- ஜூனியர் கராத்தே போட்டியில் ஈரோடு மாவட்ட கராத்தே அணி சார்பில் குமித்தே எனப்படும் சண்டை பிரிவில் கலந்துகொண்டு 2 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகள் இருவரும் சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு வந்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியை கோமதி தலைமையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
வெள்ளி பதக்கம் வென்ற மாணவி ஹரிணி ஸ்ரீ கூறும்போது,
சிறுவயது முதலே கராத்தே மீது எனக்கு அலாதி பிரியம் ஏற்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை துணிந்து தைரியமாக சந்திக்க வேண்டும். அதற்காக நான் கராத்தே கற்க ஆசைப்பட்டேன்.
இது குறித்து எனது தந்தையிடம் கூறினேன். அவரும் எனது ஆசையை புரிந்து கொண்டு எனக்கு உதவி புரிந்தார். நான் கடந்த இரண்டு மாதமாக வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கராத்தே அகாடமியில் பயிற்சியாளர் பரமேஸ்வரன் என்பவரிடம் முறையாக பயிற்சி எடுத்து வருகிறேன். தினமும் அதிகாலை 5.30 முதல் 7.30 மணி வரை கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
கடந்த மாதம் ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பிரவுன் மெடல் வாங்கினேன். இதுதான் எனது முதல் கராத்தே போட்டியாகும். அதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர் கராத்தே போட்டியில் குமித்தே பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றேன். இந்த வெற்றி எனக்கு மிகப் பெரிய ஊக்கத்தை தந்துள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிக்காக தயாராகி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் கராத்தேவில் தங்கம் வெல்வதே எனது வாழ்நாள் லட்சியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நான் வெள்ளாங்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறேன். எனக்கு சிறுவயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. எங்கள் பள்ளியைச் சேர்ந்த கலைவாணி என்ற அக்கா கராத்தே போட்டியில் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார். அவரைப் பார்த்து எனக்கு கராத்தே போட்டி மீது ஆர்வம் ஏற்பட்டது. இது குறித்து எனது தந்தையிடம் தெரிவித்தேன் அவரும் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஒரு வருடமாக வெள்ளாங்கோவிலில் உள்ள கராத்தே அகடாமியில் பயிற்சியாளர் பரமேஸ்வரன் என்பவரிடம் கராத்தேவை முறையாக கற்று வருகிறேன். ஈரோட்டில் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கம் வென்றேன். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் கராத்தே போட்டியில் குமித்தே பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்றேன். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியம். அதற்காக நான் கராத்தே தேர்ந்தெடுத்து தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்வதே எனது வாழ்நாள் லட்சியமாகும் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.
இது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்த பரமேஸ்வரன் கூறியதாவது,
கராத்தே போட்டியை பொறுத்தவரை இரண்டு வகை உண்டு. ஒன்று கட்டா. மற்றொன்று கும்மித்தே. கட்டா என்றால் கற்பனை திறன் உடைய சண்டை. அதாவது எதிரில் ஆள் இருப்பது போன்று கற்பனை செய்து கொண்டு சண்டையிட வேண்டும். குமித்தே என்றால் நேரடியாக சண்டையில் ஈடுபடுவது. மாணவிகள் ஹரணி ஸ்ரீ, கீர்த்திகா இருவரும் குமித்தே பிரிவில் தீவிர பயிற்சி மற்றும் கடின உழைப்புடன் சாதித்து காட்டியுள்ளனர். இனி வரக்கூடிய அனைத்து போட்டிகளிலும் மாணவிகள் வெற்றி பெற அவர்களுக்கு தீவிரப் பயிற்சி அளிக்கப்படும். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்று வைப்பது நல்லது தான். இரு மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர் உறுதுணையாக இருந்து வருகின்றனர். வறுமையான சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு பெற்றோர் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
+2
- ஈரோடு சோலார் பகுதியில் செயல்பட்டு வந்த போலி வங்கியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
- வங்கி சோலார் பகுதியில் கடந்த 2 மாதமாக செயல்பட்டு வந்ததும், இந்த வங்கியில் 8 பேர் மட்டுமே சேமிப்பு கணக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
ஈரோடு:
சென்னை, ஈரோடு உள்பட 8 இடங்களில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் ஒரு வங்கி செயல்பட்டு வந்தது. இந்த வங்கி குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இந்த வங்கி போலியானது என தெரிய வந்தது.
இது தொடர்பாக வங்கியின் உரிமையாளர் சந்திரபோஸ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் ஈரோடு சோலார் பகுதியில் செயல்பட்டு வந்த போலி வங்கியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி சென்னையில் இருந்து நேற்று காலை போலீசார் வந்தனர்.
அவர்கள் காலையில் இருந்து மாலை வரை வங்கியில் சோதனை நடத்தினர். அப்போது இந்த வங்கி சோலார் பகுதியில் கடந்த 2 மாதமாக செயல்பட்டு வந்ததும், இந்த வங்கியில் 8 பேர் மட்டுமே சேமிப்பு கணக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் போலி வங்கியில் இருந்து கம்ப்யூட்டர், லேப்டாப், செக் புத்தகங்கள், பாஸ் புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர். மேலும் இந்த வங்கி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதும் தெரிய வந்தது. நேற்று போலீசார் வந்ததை தொடர்ந்து இங்கு பணியாற்றும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. எனவே இந்த வங்கியில் பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே போலி வங்கியின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையும் அகற்றப்பட்டது.
- தொழிலாளி சித்து விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார்.
- மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியையொட்டி உள்ள எக்கத்தூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சித்து (55). தொழிலாளி.
இவர் நேற்று மதியம் விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஒற்றை யானை சித்துவை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தொடர்ந்து இறந்துவிட்ட சித்துவின் உடல் அருகே அந்த யானை நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.
அப்போது அவர் யானை தாக்கி இறந்து கிடப்பதையும் அவரது அருகில் ஒற்றை யானை நிற்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தீ மூட்டி யானையை விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானை தாக்கி பலியான சித்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெற வழிவகை செய்துள்ளது.
- இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஈரோடு:
இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 01.01.2023-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,222 வாக்கு சாவடிகள் அமைந்துள்ள 951 வாக்குசாவடி மையங்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அனைத்து வேலை நாட்களிலும் வரும் டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறும் பணியினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வருகின்ற 12, 13, 26 மற்றும் 27-ந் தேதிகளில் 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள www.nvsp.inv என்ற இணையதள முகவரி மூலம் வாக்காளர் சேவைகளை பெறதேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
- ஒரு கார் முருகன் வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் முருகன் சிறுவலூர்- பெருந்துறை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடை பெற்றது.
- மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு என மொத்தம் ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
மொடக்குறிச்சி:
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடை பெற்றது. ஏலத்தில் கொடு முடி சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த விவசாயிகள் 3,300 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 23 ரூபாய் 66 காசுக்கும், அதிக பட்ச விலையாக 25 ரூபாய் 80 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 5 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 1,132 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 27 ஆயிரத்து 98 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல் தேங்காய் பருப்பு 162 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 80 ரூபாய் 19 காசுக்கும், அதிகபட்ச விலை யாக 82 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 82 ரூபாய் 12 காசுக்கும் ஏலம் போனது.
இதே போல் இரண்டாம் தரம் குறைந்த பட்ச விலையாக 60 ரூபாய் 89 காசுக்கும், அதிக பட்ச விலையாக 80 ரூபாய் 20 காசுக்கும், சராசரி விலையாக 75 ரூபாய் 85 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 6,992 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 5 லட்சத்து 47 ஆயிரத்து 901 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு என மொத்தம் ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- ஈரோடு கலை மகள் கல்வி நிலையத்திலும், கல்லூரி மாணவர்களு க்கான போட்டிகள் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர்- தலைமை ஆசி ரியர் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி துணை இயக்கு நரிடம் நேரில் அளிக்க வேண்டும்.
ஈரோடு:
தமிழக அரசின் ஆணை க்கிணங்க தமிழ் வளர்ச்சித் தறை சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி வரும் 14-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஈரோடு கலை மகள் கல்வி நிலையத்திலும், கல்லூரி மாணவர்களு க்கான போட்டிகள் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
எனவே மாணவர்கள் பேச்சுப் போட்டி களுக்கான விண்ணப்பப் படிவங்களை அவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர்- தலைமை ஆசி ரியர் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி துணை இயக்கு நரிடம் நேரில் அளிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரிப் போட்டி யில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படும்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சு போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
- ஒரு அறையில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்ைச புளியம்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (35). இவரது மனைவி வானதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
விக்னேஷ்குமார் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் விக்னேஷ்குமாரை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட சென்ற விக்னேஷ் குமார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி வானதி செங்குந்தபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் விக்னேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வேலை பறிபோன விரக்தியில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- இன்று 30 சதவீதம் சில்லரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்து துணிகளை வாங்கி செல்வார்கள். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூடுதலாக வியாபாரம் நடைபெறும்.
இந்நிலையில் கடந்த தீபாவளியையொட்டி ஜவுளி வியாபாரம் களை கட்டியது. வெளி மாநில வியாபாரிகள், வெளி மாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்து துணிகளை வாங்கி சென்றனர்.
ஆனால் கடந்த வாரம் கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்த வாரமும் ஜவுளி சந்தை கூடியது. தொடர் மழை காரணமாக வெளி மாநிலத்திலிருந்து வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். எப்போதும் கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள்.
மழை காரணமாக இன்று கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவில் இருந்து மட்டும் சில வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்று வெறும் 10 சதவீதம் மட்டுமே மொத்த வியாபாரம் நடைபெற்றது.
அதேநேரம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்றது. இன்று 30 சதவீதம் சில்லரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் குளிர் காற்று வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக சொட்டர்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
சொட்டர் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல் கம்பளி ஆடைகள் விற்பனையும் நன்றாக இருந்தது.
- சம்பவத்தன்று பழனியம்மாள் மகன் முருகேசன் வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு உள்ள திண்ணையில் மயங்கி விழுந்தார்.
- மன வேதனையில் இருந்த பழனியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு காளியம்மாள், பழனியம்மாள் (60) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் காளியம்மாளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பழனியம்மாளுக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். பழனியம்மாள் ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பழனியம்மாள் மகன் முருகேசன் வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு உள்ள திண்ணையில் மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசனின் மனைவி இது குறித்து முருகேசனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
முருகேசன் வீட்டிற்கு விரைந்து வந்து உறவினர்கள் மூலம் பழனியம்மாளை கார் மூலம் கவுந்தப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு பழனியம்மாள் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதில் மன வேதனையில் இருந்த பழனியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஹரிசங்கர் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் ரவி. இவரது மகன் ஹரிசங்கர் (வயது 17). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உணவு மற்றும் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஹரிசங்கர் லேத் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசபட்டார். சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஹரிசங்கர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தார்கள். ஹரிசங்கர் சாவுக்கு காரணமா னவர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து ஹரிசங்கர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வேலை வாங்கிய லேத் உரிமையாளரை கைது செய்ய கோரி சிவகிரி போலீஸ் நிலையம் முன்பு ஹரிசங்கர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்த ஹரிசங்கர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
இதனையடுத்து நேற்று மாலை பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஹரிசங்கர் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் தலைமையான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்று உறவினர்கள் கலந்து சென்றனர்.
இந்நிலையில் இதுவரை மாணவர் ஹரிசங்கர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி வருகின்றனர்.
இதனால் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர்.






