மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

சம்பவத்தன்று பழனியம்மாள் மகன் முருகேசன் வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு உள்ள திண்ணையில் மயங்கி விழுந்தார்.மன வேதனையில் இருந்த பழனியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு காளியம்மாள், பழனியம்மாள் (60) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் காளியம்மாளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

பழனியம்மாளுக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். பழனியம்மாள் ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பழனியம்மாள் மகன் முருகேசன் வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு உள்ள திண்ணையில் மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசனின் மனைவி இது குறித்து முருகேசனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

முருகேசன் வீட்டிற்கு விரைந்து வந்து உறவினர்கள் மூலம் பழனியம்மாளை கார் மூலம் கவுந்தப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு பழனியம்மாள் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதில் மன வேதனையில் இருந்த பழனியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com