என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் உயிரிழப்பு"

    • 2 பேரும் தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
    • இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அரும்பாவூர்:

    பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் தினேஷ் (வயது 28). தொண்டமாந்துறை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் அவரது மகன் ரஞ்சித் (25).

    இவர்கள் 2 பேரும் நேற்று நள்ளிரவு அங்குள்ள பேச்சாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் தெருவிளக்கு மின் வயரில் இருந்து இணைப்பு எடுத்து அங்குள்ள தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

    நெற்றியில் விளக்கு பொருத்தி அந்த வெளிச்சத்தில் மீன்களைப் பார்த்து மின்சாரத்தை பாய்ச்சும்போது அந்த மீன்கள் கொத்தாக மயக்க நிலைக்கு வந்து பிடிபடும் என கூறப்படுகிறது.

    இவ்வாறு கையில் மின் வயரை வைத்துக்கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் தினேஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடம் வரைந்து வந்தனர் பின்னர் தடுப்பணை நீரில் பிணமாக மிதந்த அவர்கள் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த பெரம்பலூர் துணை போலி சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் சம்பவ இடம் விரைந்து சென்றார் மேலும் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நூதன முறையில் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி மீன்பிடித்த 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அரும்பாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இறந்த வாலிபர் கருப்பு நிற ஜீன்ஸ், சந்தன நிறம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் 2 சர்ட் அணிந்திருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட காவிரி ரெயில்வே நிலைய தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஐந்துபனை பகுதியை சேர்ந்த சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் தமிழரசன்(27) என்பதும், சம்பவ இடத்தில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ரெயில்வே நிலைய தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும் எனவும், தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது.

    ஆனால், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்த வாலிபர் கருப்பு நிற ஜீன்ஸ், சந்தன நிறம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் 2 சர்ட் அணிந்திருந்தார். இறந்து போன வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதகபாடி என்கிற இடத்தில் வந்தபோது லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசியது.
    • சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள ராஜாகொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் அஜித் (வயது19), அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் மகன் சிலம்பரசன் (20), நாகராஜ் மகன் அஜய் (17) ஆகிய 3 பேரும் நேற்று இருசக்கர வாகனத்தில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அதகபாடி என்கிற இடத்தில் வந்தபோது லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.

    அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கரம் வாகனம் மீது ஏறி இறங்கியது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் இறந்த அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனைவி ரூபா அலறல் சத்தம் கேட்டு 4 பேர் கர்மாலியை மீட்க முயன்றனர்.
    • தகவலின் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் சார்வாஹா கிராமத்தில் உள்ள சுந்தர் கர்மாலி (27) என்பவருக்கும் அவரது மனைவி ரூபா தேவிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. சண்டையில் ஆத்திரமடைந்த கர்மாலி தனது மோட்டார் சைக்கிளை கிணற்றில் தள்ளி விட்டார்.

    பின்னர் உடனே அவர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் அவர் மேலே வரவில்லை. அவரது மனைவி ரூபா அலறல் சத்தம் கேட்டு 4 பேர் கர்மாலியை மீட்க முயன்றனர்.

    உடனே அந்த 4 பேரும் கிணற்றுக்குள் குதித்தனர். ஆனால் அதன்பின்னர் அந்த 4 பேரும் மேலே வரவில்லை. அவர்களும் உயிரிழந்தனர்.

    தகவலின் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த நால்வரும் ராகுல் கர்மாலி, வினய் கர்மாலி, பங்கஜ் கர்மாலி மற்றும் சூரஜ் பூயான் என அடையாளம் காணப்பட்டனர்.

    கிணறு மூடப்பட்டு அதன் அருகே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    கிணற்றுக்குள் குதித்தவர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என்றும் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    ×