என் மலர்
நீங்கள் தேடியது "கேரளா லாட்டரி சீட்டு விற்ற"
- முதியவர் ஒருவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் வாங்கினால் அதிக பரிசு விழும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
- சத்தியமங்கலம் போலீசார் சத்திய சீலன் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு, பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் செண்பகப் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெமினி (47). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று சத்தியமங்கலம் அருகே சத்தி பஜார் வீதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஜெமினியிடம் தன்னிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் உள்ளதாகவும், அதை வாங்கினால் அதிக பரிசு விழும் என்றும் ஒவ்வொரு லாட்டரி சீட்டுக்கும் நிச்சயம் அதிர்ஷ்ட பரிசு உண்டு என ஆசை வார்த்தை கூறி யுள்ளார்.
அவர் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அனைவருடமும் இதேபோல் லாட்டரி சீட்டு வாங்கும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து ஜெமினி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த முதிய வரை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
போலீசார் அந்த முதியவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் வலயார் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் (73) என்பது தெரிய வந்தது. அவர் கையில் ஒரு மஞ்சள் கலர் பை வைத்திருந்தார். அதை திறந்து பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 192 கேரளா லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும் ரூ. 8,700 ரொக்க பணம் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் சத்திய சீலன் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு, பணத்தை பறிமுதல் செய்தனர்.
- 5 பேர் கொண்ட கும்பல் கேரள மாநிலம் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
- டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்ற சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் கேரள மாநிலம் லாட்டரி சீட்டு எண்களை வெள்ளைத்தாளில் எழுதி பரிசு விழும் என்று கூறி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீசார் அந்த கும்பலை பிடித்து விசாரித்த போது அவர்கள் சேலம் மாவட்டம் வலசையூர் சுந்தரராஜன் காலனியை சேர்ந்த பழனிவேல் என்கிற செந்தில்குமார் (47), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த யோகநாதன் (27), சேலம் மாவட்டம் கிச்சிபாளையம், முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர பாண்டியன் (43), ஈரோடு ஆர்.என். பகுதி சேர்ந்த ரமேஷ் (36), வீரப்பன்சத்திரம் பகுதி சேர்ந்த ராஜன்(60) ஆகியோர் என தெரிய வந்தது.
இவர்களிடமிருந்து 20 கேரளா மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






