என் மலர்

  தமிழ்நாடு

  நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி மொடக்குறிச்சியில் இன்று கடை அடைப்பு போராட்டம்
  X

  நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி மொடக்குறிச்சியில் இன்று கடை அடைப்பு போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
  • மொடக்குறிச்சியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

  மொடக்குறிச்சி:

  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்கப்படும் என அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. இதற்கான இடத்தை மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

  இந்நிலையில் மொடக்குறிச்சி தாசில்தார் இடம் தேர்வு செய்வதில் காலம் தாழ்த்துவதுடன் மொடக்குறிச்சிக்கு பதில் வேறு இடத்தை தேர்வு செய்து கொடுப்பதாக புகார் எழுந்தது. வேறொரு இடத்திற்கு பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இந்நிலையில் மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் அரசு ஆணைப்படி மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

  அதன்படி இன்று மொடக்குறிச்சி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கடைகளிலும் கடை அடைப்பு குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த நோட்டீசில் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என எழுதப்பட்டிருந்தது.

  மொடக்குறிச்சியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

  இதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி நால் ரோட்டில் பொதுமக்கள், வணிகர்கள் ஒன்று திரண்டு பேரணியாக மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  கடை அடைப்பு போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொடக்குறிச்சியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

  Next Story
  ×