என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்டியுடன் உலாவிய"

    • சத்திய மங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் பண்ணாரி கோவிலின் அருகே ஒரு காட்டு யானை குட்டியுடன் ரோட்டில் நடந்து சென்றது.
    • இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கடா மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக அடி க்கடி வனப்பகுதியை விட்டு வெளிேயறி வருகிறது. தொடர்ந்து யானைகள் ரோட்டில் உலாவி வருகிறது.

    அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் துரத்துவது, வழி மறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக கரும்புகள் ஏற்றி வரும் லாரிகளையும் வழி மறித்து அதில் இருந்து கரும்புகளை ருசித்து வரு வது அடிக்கடி நடக்கிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சத்திய மங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் பண்ணாரி கோவிலின் அருகே ஒரு காட்டு யானை குட்டியுடன் ரோட்டில் நடந்து சென்றது.

    தொடர்ந்து குட்டியுடன் வந்த காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் ஒய்யாரமாக நடந்து சென்றது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அவர்கள் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தினர். தொடர்ந்து நீண்ட நேரத்துக்கு பிறகு அந்த யானைகள் வனப்பகுதிக்கு சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் சென்றனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, ஆசனூர், தலமலை வனப் பகுதிகளில் இருந்து யானை கள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே வனப் பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகை ப்படம் எடுக்க கூடாது.

    வாகன ஓட்டிகள் வன பகுதி ரோடுகளில் அதிக ஒலி எழுப்பும் ஆரன்களை பயன்படுத்தாமல் செல்ல வேணடும். யானை களுக்கு தொந்தரவு செய்யும் வண்ணம் வாகனத்தை நிறுத்துவதும் செல்பி எடுப்பதும் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வன த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×