என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The work intensity of making"

    • அந்தியூர்- அத்தாணி செல்லும் சாலையில் பாலம் அருகே மண பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் பலர் மண் பாண்ட பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.
    • கார்த்திகை தீப அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் திவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள பலர் அகல் விளக்கு தயா ரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதே போல் அந்தியூர்- அத்தாணி செல்லும் சாலையில் பாலம் அருகே மண பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் பலர் மண் பாண்ட பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கார்த்திகை தீப அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் திவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வித விதமாக டிசைன்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மண் அகல் விளக்குகளை தயார் செய்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் தயாரி க்கப்படும் கார்த்திகை தீப அகல்விளக்குகள் அந்தியூர் பகுதி மட்டுமின்றி ஈேராடு மாவட்டத்தின் பல பகுதி களுக்கும், மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படு கின்றது.

    மேலும் ஈரோடு, பவானி, அப்பக்கூடல், அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து இங்கு தயாரிக்கப்படும் கார்த்திகை தீப அகல் விளக்குகளை ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

    கடந்த ஆண்டு கொரோ னா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை தீப அகல் விளக்கு விற்பனை மந்த மாகவே காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை தீப அகல் விளக்குகள் அதிக அளவில் விற்பனை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மண்பாண்ட தொழிலா ளர்கள் தெரிவித்தனர்.

    இதையொட்டி இந்த பகுதி விளக்கு தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் வெள்ளி திருப்பூர், ஆலம்பாளையம் உள்ளி ட்ட பகுதிகளிலும்கார்த்திகை விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ×