என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சேலம்- கோவை பைபாஸ் ரோடு வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
    • இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இட த்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள நசியனூர் கவுண்டன்பாளை யம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்து என்கிற பூரணசாமி (58). இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், மேனகா, சுதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    சமையல் வேலை செய்து வரும் முத்து நசியனூர் மாரியம்மன், மதுர காளியம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவிலில் பூஜை செய்து வந்தார்.

    இவரது தங்கை புஷ்பா (49). இந்த நிலையில் முத்து மற்றும் அவரது தங்கை புஷ்பாவும் மோட்டார் சைக்கிளில் நசியனூர் மேற்கு புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிளில் சேலம்- கோவை பைபாஸ் ரோடு நசியனூர் சாமி கவுண்டன் பாளையம் பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இட த்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஆத்தூரை சேர்ந்த சற்குணம் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விபத்தில் போலீஸ் ஏட்டு தனக்கொடிக்கு இடதுபுற தோலில் காயம் ஏற்பட்டது.
    • இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனக்கொடி (52). இவர் ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்கள்.

    தற்போது தனக்கொடி கருங்கல்பாளையம் காவிரிக்கரை அருகே உள்ள சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளை திரும்பிய போது பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், தனக்கொடி மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதின.

    இந்த விபத்தில் போலீஸ் ஏட்டு தனக்கொடிக்கு இடதுபுற தோலில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் வரதம்பாளையம் அருகே உள்ள தியேட்டர் பக்கத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த பெட்டிக்கடை யை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த பெட்டி கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.

    இது குறித்து விசாரித்த போது சத்தியமங்கலம் பண்ணாரி யம்மன் நகரை சேர்ந்த ரங்கசாமி (75) என்பவர் அந்த பெட்டி க்கடை யை நடத்தி வந்தது தெரிய வந்தது.

    10 லாட்டரி சீட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரங்கசாமி இடமிருந்து ரூ.17, 950 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டம் முழுவதும் 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 3 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி முதல் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 658 ஆக உள்ளது.

    இதுவரை குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 919 ஆக உள்ளது. இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
    • பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக் கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

    இதற்காக பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லூரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரித்து ஈரோட்டுக்கு குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது.

    சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், வ.உ.சி. பூங்காவில் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் என 2 பிரமாண்ட தரைமட்ட தொட்டிகளில் தண்ணீர் விடப்படுகிறது.

    அங்கிருந்து 67 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குழாய்கள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

    மேலும் ஈரோடு மாநகரில் சில பகுதிகளில் குடிநீர் இணைப்பு செய்யும் பணி முழுமையாக நிறைவடையவில்லை. எனவே அந்த பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    முதல்நாளான இன்று அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாளை 21-ந் தேதி வாசுகி முதல் வீதி, வாசுகி வீதி, நாச்சியப்பா வீதி, தெப்பக்குளம் வீதி ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

    இதேபோல 22-ந் தேதி பாவாடை வீதியில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது. 23-ந் தேதி பவர் ஹவுஸ்ரோடு, 24-ந் தேதி ஈரோடு மூலனூர்ரோடு சோலார் ரவுண்டானா பகுதியில் நடைபெறுகிறது.

    இதனையடுத்து 26-ந் தேதி ஈரோடு-கரூர்ரோடு எச்.பி.பெட்ரோல் பங்க் பகுதி, 27-ந் தேதி குறிக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம், 28-ந் தேதி பூந்துறைரோடு கல்யாண சுந்தரம் வீதி, கல்யாண சுந்தரம் முதல் வீதி, 2-வது வீதி, 29-ந் தேதி கல்யாண சுந்தரம் 3-வது வீதி ஆகிய பகுதிகளில் பணிகள் நடக்கிறது.

    இதேபோல் 30-ந் தேதி பூந்துறைரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகல், டாலர்ஸ் காலனி வீட்டுவசதி வாரியம், பிரப்ரோடு கலைமகள் பள்ளி சாலை, வாமலை வீதி, எஸ்.கே.சி.ரோடு பிரிவு, முத்து வேலப்பா வீதி ஆகிய பகுதி களிலும் நடைபெறுகிறது.

    மேலும் 31-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ரங்கம் பாளையம் ரெயில்வே பாலம் அருகில், 3-ந் தேதி ஈரோடு அரசு மருத்துவமனை பின்புற சாலை, சென்னிமலைரோடு முத்தம்பாளையம், சுவஸ்திக் ரவுண்டானா அருகில் வ.உ.சி.பூங்கா சாலை ஆகிய பகுதிகளிலும், 8-ந் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத்நகர் சாலையிலும் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 190 கிராமங்கள் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
    • விரைவில் அனைத்து கிராமங்களும் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றப்படும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாகுவதை தடுக்க பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றது.

    போதை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதோடு, அவர்களுடைய சொத்துக்களும் முடக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் மேற்கு மண்டலத்தில் ஐ.ஜி.சுதாகர் உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,562 கிராமங்களில் 250 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 190 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போலீசார் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    கடைகள், குடோன்களில் அவ்வப்போது சோதனை நடத்தி போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்கள், விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1562 கிராமங்களில் முதல்கட்டமாக 250 கிராமங்களை தேர்வு செய்து அதில் இதுவரை 190 கிராமங்கள் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் அனைத்து கிராமங்களும் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றப்படும்.

    ஈரோடு புதுமைக் காலனியில் கடந்தாண்டு வரை கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருந்தது. போலீ சாரின் நடவடிக்கையால் கட்டுக்குள் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது.
    • இதனால் யானைகள் விவசாய நிலங்களில் புகுவது குறையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வன காப்பகத்தில் தாளவாடி, டி.என்.பாளை யம் உள்பட 10 வனசரகங்கள் உள்ளன. மேலும் சத்திய மங்கலம் வனபகுதியில் புலிகள் காப்பகம் அமைந்து உள்ளது.

    இந்த வனப்பகுதிகளில் யானைகள், புலி, காட்டெ ருமை, மான், சிறுத்தை உள் பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது.

    திண்டுக்கல்- மைசூர் தேசிய நேடுஞ்சாலையில் அமை ந்துள்ள தாளவாடி வனப்பகுதியில் இருந்து யானை கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி ரோட்டில் உலவி வருகிறது.

    மேலும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவ சாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை, கரும்பு, மக்கா ச்சோளம் உள்பட பல்வேறு பயிர்களை தின்றும், மிதி த்தும் நாசப்படுத்தி வருகிறது.

    இதை தடுக்கும வகையில் தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட வன கிராம பகுதிகளில் அகழி வெட்டியும், மின் வேலி அமைத்தும் கண்காணிக்கப் படுகிறது. ஆனால் இதையும் மீறி ஒரு சில யானைகள் மாற்று வழியில் கிராம ங்களில் புகுந்து வருகிறது.

    இந்த நிலையில் விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்கும் வகையில் தாளவாடி மல்குத்தி புரம் முதல் வீரப்பன் தொட்டி வரை வனப்பகுதியை யொட்டி உள்ள கிராம பகுதியில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகழிகள் அமைத்து வனத்துறையினர் கண்காணித்து பராமரித்து வருகிறார்கள்.

    மேலும் யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் வெட்டப்ட்டு உள்ள அகழியையொட்டிய இரிபுரம் முதல் மல்குத்தி புரம் வரை மின் வேலி அமைக்க முடிவு செய்ய ப்பட்டது.

    இதையொட்டி அந்த பகுதியில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் இணைந்து ரூ.16 லட்சம் மதிப்பில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது.

    இதை ஆசனூர் வன அதிகாரி தேவேந்திரகுமார் மீனா தொடங்கி வைத்தார். இதனால் யானைகள் விவ சாய நிலங்களில் புகுவது குறையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தாள வாடி ரேஞ்சர் சதீஷ் மற்றும் வனத்துறையினர், விவசாயி கள் கலந்து கொண்டனர்.

    • கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
    • சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.

    ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • சம்பவத்தன்று தங்கமுத்து வாந்தி எடுத்து உள்ளார்.
    • மனைவி கேட்டபோது தான் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீல்வாணி வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து(58). கூலி தொழிலாளி.

    இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    தங்கமுத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தங்கமுத்து வாந்தி எடுத்து உள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது தான் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவி உடன் கணவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தங்கமுத்து அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கமுத்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அறையில் மனோஜ் குமார் மிஸ்ரா தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், தென்காபாதார் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குமார் மிஸ்ரா (42).

    கடந்த 3 வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மேட்டுப்புதூர் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிலரும் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மனோஜ் குமார் மிஸ்ராவுடன் தங்கி இருந்த நபர் வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார்.

    ஆனால் கதவு திறக்கவில்லை. கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது . இது குறித்து அந்த நபர் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் மனோஜ் குமார் மிஸ்ரா தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

    அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மனோஜ் குமார் மிஸ்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ராமாத்தாள் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை, ஈரோடு ரோடு வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராமாத்தாள் (வயது 74). இவர் தனது பேத்தியின் வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ராமாத்தாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஒவ்வொரு நாளும் 1,500 பேர் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
    • ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் தலைமையில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 233 விற்பனையாளர்கள், 10 கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.

    விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 243 பணியிடத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 12,137 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.சி.ஏ., எம்.பி.ஏ., என்ஜினீயரிங் போன்ற முதுகலை பட்டதாரிகள் அதிக அளவில் விண்ணப்பித்திருந்தனர்.

    இவர்களுக்கான நேர்காணல் கடந்த 15-ந்தேதி திண்டலில் உள்ள ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை மையத்தில் தொடங்கியது. தொடர்ந்து வரும் 24-ந்தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

    ஒவ்வொரு நாளும் 1,500 பேர் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் தலைமையில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.

    இன்று காலையும் நேர்காணல் நடைபெற்றது. என்ஜினீயரிங் பட்டதாரிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர். இன்று நடந்த நேர்காணலில் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

    அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

    ×