என் மலர்
ஈரோடு
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- 5,435 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 457 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,460 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 26 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 33 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 27 ரூபாய் 59 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 5,435 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 457 ரூபாய்க்கு விற்பனையானது.
- ஒருவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
- போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு:
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வீரப்பன்சத்திரம் போலீசார் சத்திரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஒருவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள பூலாங்குறிச்சியை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 780 மதிப்பிலான 6 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல சத்தியமங்கலம் போலீசார் பண்ணாரி ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டி ருந்தனர். அப்போது உதையா மரத்து மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை நடை பெற்றது தெரியவந்தது.
உடனடியாக அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அம்பலவாந்தல் பகுதியை சேர்ந்த அன்பரசு (21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 8 மதுபாட்டில்கள் மற்றும் பணம் ரூ.1,600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போட்டோவை மார்பிங் செய்ததை அறிந்த மோகனசுந்தரி அதிர்ச்சியில் மன உளைச்சலுக்கு ஆளானார்.
- வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்துள்ளார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் இருகலூரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (42). இவரது மனைவி மோகன சுந்தரி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நம்பியூர் அரசு போக்குவரத்துக்கு கழக கிளையில் வெங்கடாசலம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு சென்ற மோகனசுந்தரி அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோகன சுந்தரியை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ரகுநாத், செல்லமுத்து அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
- கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுநாத்தை கைது செய்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளை யம் பகுதியில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கடத்தூர் போலீசார் சிங்கிரிபாளை யம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மது கடை அருகே சோதனை செய்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் அனுமதி யின்றி மது விற்று கொண்டு இருந்தனர்.
இதையடுத்து போலீசார் மது விற்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரித்த னர்.
இதில் அவர்கள் கோபி செட்டிபாளையத்தை அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்த ரகுநாத் (32), புதுகோட்டை மாவட்ட த்தை சேர்ந்த செல்லமுத்து என்றும் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுநாத்தை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.2,340 மதிப்புள்ள 18 மது பாட்டில்கள் மது விற்று வைத்து இருந்த ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரை கண்டதும் செல்லமுத்து அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வரு கிறார்கள்.
- சதீஷ்குமார் தொட்டில் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார்.
- இது குறித்து மொடக்குறி ச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி அடுத்த பூலக்காட்டு நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31).
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவன த்தில் இளநிலை அலுவல ராக பணியாற்றி வந்தார். இவருக்கு சரண்யா (23) என்ற மனைவும், 2 மகன்க ளும் உள்ளனர்.
இந்நிலையில் சதீஷ்குமார் பவானியில் உள்ள அவரது பெற்றோரையும் கவனித்து வந்தார். மேலும் நண்பர்களு க்கு அடிக்கடி பண உதவி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு அதிக கடன் ஏற்பட்டதாகவும் மேலும் சதீஷ்குமாருக்கு வயிற்று வலி மற்றும் முதுகு வலி இருந்து வந்தது.
இதையடுத்து பணம் இல்லாததால் சதீஷ்குமார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார். மேலும் கடன் அதிகமான தால் சதீஷ்குமார் மன வரு த்தத்தில் இருந்து வந்தார். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் இருக்கும் பணத்தை தனது மனைவியிடம் கொடுத்து மருத்துவமனைக்கு அழை த்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து மனைவி சரண்யா மகனை அழைத்துக் மருத்துவ மனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உள்புறமாக மூடப்பட்டு இருந்தது. கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு திறக்கவில்லை. இதையடுத்து சரண்யா உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது சதீஷ்குமார் தொட்டில் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சதீஸ் குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மொடக்குறி ச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கோட்டையன் வந்து கொண்டிருந்த மொபட்டும், ஆனந்த் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
- விபத்தில் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆலங்கட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 70). இவர் 13-வது வார்டு அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள குடிநீர் குழாயில் குடிநீர் பிடிக்க இன்று காலை தனது மொபட்டில் சென்றார்.
அப்போது முத்தூர் ரோட்டில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சிவகிரியில் பழக்கடை நடத்தி வரும் ஆனந்த் என்பவர் வந்து கொண்டி ருந்தார். ஆலங்காட்டு வலசு பகுதி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக செங்கோட்டையன் வந்து கொண்டிருந்த மொபட்டும், ஆனந்த் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
மருத்துவ குழுவினர் முகத்தில் படுகாயம் அடைந்த செங்கோட்டையன் மற்றும் ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் வரும் வழியி லேயே செங்கோட்டையன் இறந்து விட்டதாக கூறினர்.
விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.90 அடியை எட்டியது.
- பவானி ஆற்றுக்கு இன்று காலை 1,250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் பவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணை 105 அடியை வேகமாக நெருங்கி வருகிறது .
அணைக்கு நேற்று 1,800 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 3,966 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.90 அடியை எட்டியது.
105 அடியை அணை நெருங்கி உள்ளதால் பவானி ஆற்றுக்கு இன்று காலை 1,250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடி, வாய்க்காலுக்கு 500 கன அடி என மொத்தம் 2,250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை யினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பவானி ஆற்றின் வழியோரங்களில் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பவானி ஆற்றில் அதிக அளவில் உபரி நீர் திறக்கப்ப ட்டால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பொதுப்பிரிவு பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே வெள்ளை நிற பை கேட்பாரற்று கிடந்தது.
- ரெயில்வே போலீசார் அதனை திறந்து பார்த்தபோது அதில் 20 கிலோ போதை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு:
வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சேலத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரகுவரன், ரெயில்வே போலீசார் அருள்செல்வம், ராஜவேல், சரவணகுமார் ஆகியோர் தன்பாத்-ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனை செய்தனர்.
அப்போது பொதுப்பிரிவு பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே வெள்ளை நிற பை கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அதனை திறந்து பார்த்தபோது அதில் 20 கிலோ போதை பொருட்கள் (குட்கா) இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் கேட்டபோது இது தங்களுடையது இல்லை என பயணிகள் தெரிவித்தனர். போலீசார் வருவதை தெரிந்து கொண்டு கடத்தல் கும்பல் குட்காவை அங்கேயே விட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது.
பின்னர் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்ததும் போலீசார் கைப்பற்றிய 20 கிலோ போதை பொருட்களை மீட்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து போதை பொட்களை கடத்தியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், சீனிவாசனை கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பு.புளியம்பட்டி:
பு.புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் தனது நண்பருடன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
இதையடுத்து அவர்கள் சந்துருவிடம் வழி கேட்பது போல் நடித்து சந்துருவின் பாக்கெட்டில் இருந்த ரூ.200-யை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயற்சி செய்தனர்.
அப்போது அவர் சத்தம் போட்டார். அவரது சத்தத்தை ேகட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை துரத்தி பிடித்தனர். தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் புளியம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (22) சீனிவாசன் (25) என தெரிய வந்தது.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் சம்பவத்தன்று கே.என்.பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (24) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இரு ந்தார்.
அப்போது அந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டது.
அதே போல் சதுமுகை பகுதியை சேர்ந்த கணேசன் (55) என்பவர் டி.ஜி.புதூர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டும் திருடப்பட்டதாக பங்களாப்புதூர் போலீசில் புகார் செய்ய ப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் வேட்டுவன் புதூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் ஏளூர் வேட்டு வன் புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மகேந்திரன் (36) என்பதும், அவர் நவீன்குமார் மற்றும் கணேசன் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.
- வியாபாரி வந்து எள் மூட்டையை எடுக்கும் போது ஒரு எள் மூட்டை மட்டும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
- இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விசாரணை மேற்கொண்டார்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள மைலம்பாடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகின்றது.
இங்கு மைலம்பாடி, அம்மாபேட்டை, நால்ரோடு, அந்தியூர், ஒலகடம், பூனாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள எள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.
பின்னர் சனிக்கிழமை அன்று ஏலம் நடைபெறும். இந்த ஏலத்தில் ஈரோடு, சங்ககிரி, சேலம், சிவகிரி, கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் எடுத்து செல்வார்கள்.
இந்த நிலையில் சனிக்கிழமை 100 எள் மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் சிவகிரி பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் 10 எள் மூட்டை ஏலத்தில் எடுத்துள்ளதாகவும்,
அந்த வியாபாரி எள் மூட்டைகள் அனைத்தும் மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்துவிட்டு பிறகு வந்து எடுத்து சென்று விடலாம் என்று சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த வியாபாரி வந்து எள் மூட்டையை எடுக்கும் போது 9 மூட்டைகள் மட்டும் அங்கு இருப்பு இருந்தது. ஒரு எள் மூட்டை மட்டும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இது குறித்து மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கனிமொழி பவானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து மாயமான எள் மூட்டையை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விசாரணை மேற்கொண்டார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைத்தும், கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.
- ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் தொடர்ந்து மார்கழி முதல் தேதியில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.
ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6, 7-வது வளைவு களிலேயே பொதுமக்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று சாமி தரிசனத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
இது பற்றி உடனடியாக சென்னிமலை போலீசாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு. சப்- இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி மலைப்பாதையில் போக்கு வரத்து சீர் செய்தனர்.
அதன் பின்பு பொது மக்கள் 9 மணி அளவில் நிம்மதியாக சாமி தரிசனம் செய்வதற்கு சென்றனர். இந்த கடும் போக்குவரத்து நெருசலால் சென்னிமலை மலை கோவிலில் காலை நேரத்தில் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.






