search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for a distance of"

    • வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது.
    • இதனால் யானைகள் விவசாய நிலங்களில் புகுவது குறையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வன காப்பகத்தில் தாளவாடி, டி.என்.பாளை யம் உள்பட 10 வனசரகங்கள் உள்ளன. மேலும் சத்திய மங்கலம் வனபகுதியில் புலிகள் காப்பகம் அமைந்து உள்ளது.

    இந்த வனப்பகுதிகளில் யானைகள், புலி, காட்டெ ருமை, மான், சிறுத்தை உள் பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது.

    திண்டுக்கல்- மைசூர் தேசிய நேடுஞ்சாலையில் அமை ந்துள்ள தாளவாடி வனப்பகுதியில் இருந்து யானை கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி ரோட்டில் உலவி வருகிறது.

    மேலும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவ சாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை, கரும்பு, மக்கா ச்சோளம் உள்பட பல்வேறு பயிர்களை தின்றும், மிதி த்தும் நாசப்படுத்தி வருகிறது.

    இதை தடுக்கும வகையில் தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட வன கிராம பகுதிகளில் அகழி வெட்டியும், மின் வேலி அமைத்தும் கண்காணிக்கப் படுகிறது. ஆனால் இதையும் மீறி ஒரு சில யானைகள் மாற்று வழியில் கிராம ங்களில் புகுந்து வருகிறது.

    இந்த நிலையில் விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்கும் வகையில் தாளவாடி மல்குத்தி புரம் முதல் வீரப்பன் தொட்டி வரை வனப்பகுதியை யொட்டி உள்ள கிராம பகுதியில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகழிகள் அமைத்து வனத்துறையினர் கண்காணித்து பராமரித்து வருகிறார்கள்.

    மேலும் யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் வெட்டப்ட்டு உள்ள அகழியையொட்டிய இரிபுரம் முதல் மல்குத்தி புரம் வரை மின் வேலி அமைக்க முடிவு செய்ய ப்பட்டது.

    இதையொட்டி அந்த பகுதியில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் இணைந்து ரூ.16 லட்சம் மதிப்பில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது.

    இதை ஆசனூர் வன அதிகாரி தேவேந்திரகுமார் மீனா தொடங்கி வைத்தார். இதனால் யானைகள் விவ சாய நிலங்களில் புகுவது குறையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தாள வாடி ரேஞ்சர் சதீஷ் மற்றும் வனத்துறையினர், விவசாயி கள் கலந்து கொண்டனர்.

    ×