என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது
    • ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெருந்துறையில் பல்வேறு பகுதியில் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.

    அப்போது கஞ்சா விற்றதாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளியை சேர்ந்த சக்திவேல்(29), ராமு என்பவரது மகன் தினேஷ்கு மார்–(23), பெருந்துறை குள்ளம்பாளை யத்தை சேர்ந்த தனசேகர்(31) ஆகிய 3 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    இதில் தனசேகர் பெருந்துறை யில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது.

    கைதானவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பெருந்துறை போலீசார் கூறினர்.

    கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 24,460 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 458 பேர் என மொத்தம் 24,918 பேர் எழுதினர்.
    • தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 1500 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 24,460 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 458 பேர் என மொத்தம் 24,918 பேர் எழுதினர்.

    முதல்நாளான இன்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை நேரடி பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு 105 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுத 3 தேர்வு மையங்கள் என மொத்தம் மாவட்ட–த்தில் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    வினாத்தாள்கள் 7 கட்டு காப்பு மையத்தில் வைத்து சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இன்று காலை மாணவ- மாணவிகள் சீக்கிரமாக எழுந்து தேர்வுக்கு தயாராகும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளிக்கு சென்று சிறிது நேரம் மீண்டும் படித்தனர். இதனை அடுத்து ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு தேர்வு எழுத சென்றனர்.

    தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 10 நிமிடங்கள் வினா தாளை படிப்பதற்கும் அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.

    தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 1500 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இது தவிர 150 பேர் கொண்ட 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    அவர்கள் தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஸ்கிரைப் 250 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சாரம், போக்குவரத்து வசதிகள் போன்றவை செய்யப்பட்டிருந்தது.

    விடைத்தாள்களை பாதுகாப்பாக வைப்பதற்காக மாவட்டத்தில் 4 பாதுகாப்பு மையம் அமைக்கப்ப–ட்டுள்ளது. விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    இதைத் தொடர்ந்து பிளஸ்-1 பொதுத் தேர்வு நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்தத் தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 946 மாணவ- மாணவிகளும், 496 தனி தேர்வர்களும் என மொத்தம் 22,442 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர்.

    பள்ளி மாணவ- மாணவிகளுக்காக 105 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்காக மூன்று தேர்வு மையங்கள் என மொத்தம் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது.

    • மக்காச்சோளத்தில் நோய் கட்டுப்படுத்தும் முறைகளை எளிய முறையில் எடுத்துரைத்தனர். மேம்படுத்துவது பற்றியும் விளக்கினர்.
    • மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு பற்றியும் அதைக் கட்டுப்படு த்தும் முறையைப் பற்றியும் செய்முறையாக விவசாயி களுக்கு விளக்கினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ள கூகலூர் கிராமத்தில் வேளாண்துறை சார்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு பற்றியும் அதைக் கட்டுப்படுத்தும் முறையைப் பற்றியும் செய்முறையாக விவசாயிகளுக்கு விளக்கினர்.

    கூகலூர் கிராமத்தில் உள்ள விவசாயி சவுந்தர நாயகி என்பவரது விவசாய தோட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் மற்றும் கோபி வட்டார வேளாண் அலுவலர் முன்னிலையில் படைப்புழு கட்டுப்படுத்தும் வழிமுறையை செய்முறை யாக விவரித்தும் காண்பித்தனர்.

    மேலும் மக்காச்சோளத்தில் நோய் கட்டுப்படுத்தும் முறைகளை எளிய முறையில் எடுத்துரைத்தனர். மேம்படுத்துவது பற்றியும் விளக்கினர்.

    • எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இடை தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.
    • எங்கள் பகுதியில் இடைத்தேர்த லுக்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

    ஈரோடு திருநகர் காலனி ஜெயகோபால் வீதியைச் சேர்ந்த மது பிரியர்கள், கலெக்டரிடம் கொடுத்தி ருந்த கோரிக்கை மனுவில் கூறியிருந்ததாவது:-

    நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஜெய கோபால் வீதியில் வசித்து வருகிறோம். இங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை தனியார் வசம் இருக்கும் போதில் இருந்து செயல்பட்டு வந்தது.

    இங்கு சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர். நாங்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறோம்.

    இந்த நிலையில் எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இடை தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.

    இதனால் நாங்கள் மது வாங்குவதற்காக 5 கிலோ மீட்டர் வரை வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. அப்படி செல்லும்போது சில நேரங்களில் விபத்து க்கள் ஏற்படுகிறது.

    மேலும் போலீசார் வாகன பரிசோதனை செய்யும் போது பல வழக்குகளை எங்கள் மீது பதிவு செய்து பல ஆயிரம் ரூபாய்களை அபராதமாக விதிக்கின்றனர்.

    இதனால் அன்றாட கூலி வேலை செய்யும் நாங்கள் மிகவும் பாதிப்படை க்கிறோம். எனவே எங்கள் பகுதியில் இடைத்தேர்த லுக்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

    • புதிய ஆயக்காட்டு பாசனப் பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணை 33 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும்.

    மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் பொழியும் மழை நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் பாசனத் திற்காகவும், வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் தண்ணீராகவும் பயன்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் பாசனத்திற்காக புதிய ஆயக்காட்டு பாசனப் பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் நேரடியாக 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெருகின்றன. இதனைத் தொடர்ந்து இன்று வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • . இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 890 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் .

    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தங்கள் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பெருந்துறை ரோடு, சஞ்சய் நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த அசோக் (48) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடமிருந்து 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 890 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் . இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சூரம்பட்டி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சென்னிமலை ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதேப்பகுதியை சேர்ந்த முஸ்தபா (58) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எண்களை வெள்ளை தாளில் எழுதி நிச்சயம் பரிசு விழும் என்று கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அவர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
    • மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கி செல்கின்றனர்.

    ஈரோடு;

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் உச்சம் அதிக அளவில் உள்ளது. வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இரவு நேரங்களில் வீடுகளில் வெயில் தாக்கம் அதிக அளவில் தெரிகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், கரும்பு பால், தர்பூசணி ஆகியவற்றை அதிகம் விரும்பி பருகி வருகின்றனர்.

    இதனால் வீடுகளில் பெரும்பாலா னவர்கள் பிரிட்ஜில் தண்ணீர் வைத்து பருகி வருகின்றனர்.

    அதேபோன்று மண்பானையி லும் தண்ணீர் வைத்து குடிக்க தொடங்கி யுள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

    இது குறித்து மண்பானை விற்பனை செய்வோர் கூறியதாவது:-

    தரமான மண்பானை செய்வதற்காக மண் எடுப்பதில் கட்டுப்பாடு, விதிமுறை அதிகம் உள்ளதால் தயாரிப்பு குறைந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

    சாதாரண மண் பானை 350 ரூபாய், பைப் இணைக்கப்பட்ட மண்பானை ரூ. 450-க்கும் விற்பனை ஆகிறது. உடலுக்கு நல்லது என்ற நோக்கத்தில் வீடு, கடைகள் அலுவலக ங்களு க்காக வாங்கி செல்கின்றனர்.

    மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கி செல்கின்றனர். இதனால் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • நேற்று மதியம் ஓட்டல் வேலையை முடித்துவிட்டு சம்பூர்ணா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீஸ் விசாரணை யில் மர்ம நபர்கள் போலீசார் என்று பொய் சொல்லி மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு அகில்மேடு வீதியைச் சேர்ந்தவர் அர்த்தனாரி. அதே பகுதியில் ஓட்டல் வைத்து உள்ளார். இவரது மனைவி சம்பூர்ணா (60). கணவருடன் ஓட்டலை கவனித்து வந்தார்.

    நேற்று மதியம் ஓட்டல் வேலையை முடித்துவிட்டு சம்பூர்ணா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் சம்பூரணத்திடம் வந்து தங்களை போலீசார் என்று அறிமுகம் படுத்திக்கொண்டு இங்கு வழிப்பறி அதிகமாக நடப்ப தால் கழுத்தில் நகைகளை போட்டு செல்ல வேண்டாம் கழற்றி கொடுங்கள்.

    பாதுகாப்பாக நாங்கள் காகிதத்தில் மடித்து கொடுக்கிறோம். வீட்டிற்கு சென்றதும் கழுத்தில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

    இதனை உண்மை என்று நம்பிய சம்பூர்ணா தான் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்து ள்ளார்.

    அதைப் பெற்றுக் கொண்ட அவர்கள் காகிதத்தில் பொட்டலமாக மடித்து அவரிடம் திருப்பிக் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்டு சம்பூர்ணாவும் வீட்டிற்கு சென்று விட்டார்.

    வீட்டுக்கு சென்று பொட்டலத்தைப் பிரித்து பார்த்த போது தான் அதில் கல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். போலீஸ் விசாரணை யில் மர்ம நபர்கள் போலீசார் என்று பொய் சொல்லி மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தப் பகுதியில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையை தீவிரப்ப டுத்தியுள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறும் போது, பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். போலீசார் எப்போதும் இதுபோன்று பெண்களிடம் சென்று நகைகளை கழற்றி கொடுங்கள் .

    காகிதத்தில் பொட்டலமாக மடித்து வைத்து தருகிறோம் என்று கூற மாட்டார்கள். இவ்வாறாக யாராவது போலீஸ் என்று கூறி வந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    அவர்களை நம்பி நகைகளை கொடுக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • எடப்பாடி கே.பழனிசாமியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
    • முழு பாதுகாப்பு கொடுத்து இருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து இருக்காது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவருக்கு முழு பாதுகாப்பு கொடுத்து இருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து இருக்காது.

    பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு இருப்பது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெருந்துறையில் பல்வேறு பகுதியில் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.
    • தனசேகர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெருந்துறையில் பல்வேறு பகுதியில் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது கஞ்சா விற்றதாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளியை சேர்ந்த சக்திவேல்(29), ராமு என்பவரது மகன் தினேஷ்குமார்(23), பெருந்துறை குள்ளம்பாளையத்தை சேர்ந்த தனசேகர்(31) ஆகிய 3 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    இதில் தனசேகர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பெருந்துறை போலீசார் கூறினர். கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் தேடி யானைகள், சிறுத்தை, மான் என வன விலங்குகள் அடிக்கடி வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
    • விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து செல்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வனப்பகுதிகள் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பர்கூர் மலைப்பகுதி, சென்னிமலை மலை என பல்வேறு இடங்களில் வனப்பகுதிகள் காணப்படுகிறது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மட்டும் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் ஏராளமான யானைகள், புலிகள், சிறுத்தை, மான் கூட்டம் மற்றும் ஏராளமான பறவை இனங்கள் வசித்து வருகின்றன. அதோடு இல்லாமல் மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்களும் அதிக அளவில் உள்ளன.

    திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் இருமார்க்கமாக வந்து செல்கின்றன. வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் ஏராளமான குளம், குட்டைகள் உள்ளன.

    மழை காலங்களில் பொழியும் மழையால் இந்த குளம், குட்டைகள் நிரம்பி காணப்பட்டது. மேலும் வனப்பகுதிகளும் பசுமையாக மாறியது. இதனால் வனவிலங்குகள் குளம், குட்டைகளில் தண்ணீர் குடித்து அடர்ந்த வனப்பகுதியிலேயே சுற்றி வந்தது. ஆனால் ஒரு சில யானைகள் கரும்புக்காக அடிக்கடி சாலையில் உலாவிக் கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் மழை இல்லாமல் வனப்பகுதி முழுவதும் வெயில் காரணமாக பசுமை இழந்து காணப்படுகிறது. மரம், செடி, கொடிகளில் இலைகள் உதிர்ந்து சருகுகளாக மாறிவிட்டது. மேலும் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளும் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டது. கோடை காலம் தொடங்கும் முன்பே வனப்பகுதிகளில் வறட்சியின் தாண்டவம் அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக அடிக்கடி வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினமும் 10 முதல் 15 ஏக்கர் வரை வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எரிந்து சேதமாகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளும் இடம் பெயர்ந்து வருகிறது.

    வனவிலங்குகள் குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து வருகிறது. மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கும் செல்ல தொடங்கி விட்டது. தெங்குமரகடா அருகில் உள்ள மாயாற்றுக்கு அதிக அளவில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க செல்ல தொடங்கிவிட்டது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் மாயாற்று பகுதியில் அதிக அளவில் உள்ளது.

    பண்ணாரி பகுதியில் இரவு நேரங்களில் யானை, மான் கூட்டங்கள் தண்ணீர் தேடி ரோட்டில் சுற்றி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வனப்பகுதிகளை ஒட்டி உள்ள பவானிசாகர் நீர்தேக்க பகுதி மற்றும் வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம் நீர் தேக்க பகுதிகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து விட்டு கும்மாளமிட்டு செல்கிறது.

    இதே போல் அந்தியூர் அடுத்த பர்கூர் மற்றும் சென்னிமலை பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து ரம்மியாக காட்சி அளித்தது.

    இந்த நிலையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது.

    இதனால் தண்ணீர் தேடி யானைகள், சிறுத்தை, மான் என வன விலங்குகள் அடிக்கடி வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் வனப்பகுதி ரோட்டில் வரும் வாகன ஓட்டிகளை யானைகள் விரட்டுவது வாடிக்கையாகி விட்டது.

    மேலும் வனப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் காரண மாக மரம், செடி, கொடிகள் காய்ந்து கருகும் நிலையில் உள்ளது. இதனால் சென்னிமலை உள்பட ஒரு சில வனப்பகுதிகளில் தீ பற்றி எரியும் சம்பவங்களும் நடக்கிறது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட வனத்துறையினர் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த வனப்பகுதிகளில் யானைகள் உள்பட பல்வேறு விலங்குகள் இருந்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் வனப்பகுதிகள் வறட்சியாக காணப்படுகிறது. மேலும் குளம், குட்டைகள் வறண்டு வரும் நிலை உள்ளது. இதனால் விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து செல்கிறது. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மேலும் ரோட்டில் உலா வரும் விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது.

    இதேபோல் வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து வருவதால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் பீடி, சிகரெட்டுகளை புகைத்து விட்டு நெருப்புடன் அப்படியே வீசி செல்ல கூடாது. இதனால் பெரும் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேளாண் கண்காட்சியில் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.
    • கண்காட்சியில் விவசாயிகளுக்கும் துண்டு பிரசுரங்கள் அடங்கிய மஞ்சபைகள் வழங்கப்பட்டன.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்த மரபுசார் பன்முகத்தன்மை குறித்த 2-வது கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் புஞ்சை துறையம்பாளையத்தில் உள்ள ஜே.கே.கே.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் மரபியல் பன்முகத்தன்மை குறித்த விஞ்ஞானிகளின் தொழி ல்நுட்ப உரை, விவசாயிகள் விஞ்ஞானி களிடையே கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் பாரம்பரிய ரகங்கள் சாகுபடி செய்யும் உழவர்க ளின் சாகுபடி அனுபவங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

    உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்த வேளாண் கண்காட்சி யில் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்காகவும், விற்பனை க்காகவும் வைக்கப்பட்டி ருந்தது.

    சிறப்பு விருந்தினர்களாக டி.என்.பாளையம் ஒன்றியக்குழுத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் வாணிப்புத்தூர் பேரூராட்சி த்தலைவர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.

    கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து விவசாயி களுக்கும் பாரம்பரிய பயிர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் அடங்கிய மஞ்சபைகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) (பொ) பாமாமணி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தலைமை உரை நிகழ்த்தினார்.

    ஜே.கே.கே.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரி முத ல்வர் கல்யாணசு ந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.

    பவானி சாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய பேராசி ரியர்கள் மற்றும் கே.வி.கே. மைராடா வேளா ண்மை அறிவியல் நிலைய விஞ்ஞா னிகள் தொழில்நுட்ப உரையாற்றி னர்.

    விழாவில் வேளாண்மை மற்றும் சகோதரத்துறை அலுவலர்கள் மற்றும் கூகா விதைகள், கழனி, உழவகம், பாசம், தேன்கூடுவள ஆதார மையம் போன்ற தன்னார்வ மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் கருத்துரை யாற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொ ண்டனர். கண்காட்சியில் பாரம்பரிய பயிர் ரகங்களும், பாரம்பரிய விதைகளும், பாரம்பரிய உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

    இந்நிகழ்வின் போது கல்லூரி வளாகத்தில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ரங்கோலி கோலப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    முடிவில் டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ×