என் மலர்
ஈரோடு
- முன்னாள் முதல்-அமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.
- தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசும் போட்டியிட்டனர்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்திருந்தது. அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். நடந்து முடிந்த தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10,156 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி திருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
முன்னாள் முதல்-அமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.
குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்காக லேப்டாப், சைக்கிள் திட்டங்களை கொண்டு வந்தார். தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்கள் பெண்களிடம் அமோக வரவேற்பு பெற்றன. ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற முதல் அ.தி.மு.க திட்டங்களை நிறுத்தி வருகிறது.
தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் 42 ஆயிரம் சிறுபான்மை ஓட்டுக்களை நாம் இழந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.
அவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதே தி.மு.க.வினர் தான் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பா.ஜனதாவுடன் 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தனர் என்பதை மறந்து விடக்கூடாது. அ.தி.மு.க. என்றும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவே இருந்து வரும் கட்சியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
- அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கோபி:
சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது.
இந்த விழாவில் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமி ன்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதையொட்டி சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், பவானி உள்பட மாவட்டத்தின் பல பகுதி களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதையொட்டி பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நட வடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வரு வாய்துறை, போலீஸ், வன த்துறை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, சுகா தாரத்துறை, போக்கு வரத்துதுறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்ட னர்.
இதில் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி, கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, வாகப் போக்குவரத்தை திருப்பி விடுவது, கூட்ட த்தைக் கட்டுப்படுத்துவது, குண்டம் இறங்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்பு கள் குறித்து விவாதிக்க ப்பட்டது.
இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. ஐமன் ஜமால், தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தன் பலத்த காயமடைந்தார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள மகாசிபுதூர் ராமச்சந்திர புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (21). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை- அந்தியூர் ரோட்டில் தோப்பு காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கோவிந்தன் மோட்டார் கைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தன் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே கோவிந்தன் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கழிவு மண் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
- இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை:
பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு வீணாகும் கழிவு மண்ணை ஒரு டிப்பர் லாரியில் ஏற்றி தனியாருக்கு சொந்தமான கிரசருக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது ஈங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூர் வழியாக கழிவு மண் ஏற்றி சென்ற லாரி சென்ற போது புலவனூரை சேர்ந்த பொதுமக்கள் கருக்கங்காடு என்ற இடத்தில் அந்த லாரியை சிறை பிடித்தனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் முத்துராஜ், ஈங்கூர் கிராம நிர்வாக அலுவலர் ரதிபிரியா, சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், ஈங்கூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது பொதுமக்கள் அவர்களிடம் கூறுகையில்,
தொழிற்சாலை கழிவுகளை லாரியில் கொண்டு சென்று கொட்டுவதால் புலவனூர் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் லாரியில் கொண்டு சென்று கழிவுகளை கொட்ட கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறை பிடிக்கப்பட்ட லாரியை போலீசார் சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
- காட்டு யானைகள் குட்டியுடன் நின்ற வாகனங்களை வழிமறித்து நின்றன.
- யானைகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலையில் அங்கும் இங்கும் அலைமோதுகின்றன.
சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனை சாவடி அருகே அதிகாலையில் காட்டு யானைகள் குட்டியுடன் கூட்டம் கூட்டமாக நடமாடியதோடு, சாலையில் நின்ற வாகனங்களை வழிமறித்து நின்றன.
இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தினர். யானைகள் நடமாடத்தை தங்களது செல்போனில் சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் சாலையோர வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
காட்டு யானைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்த வேண்டாம் எனவும்,
சாயோரம் நிற்கும் யானைகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
- ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
- தேர்வு அறைகளில் கண்காணிக்க 150 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கி வரும் ஏப்ரல் 5-ந் தேதி முடிவடைகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 221 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 948 மாணவ, மாணவிகள் 105 மையங்களில் எழுதுகின்றனர். இதேபோல் தனித்தேர்வ ர்கள் 496 பேர் பொதுத்தேர்வு எழுதுவதற்கு 3 தனி மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன.
முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. தேர்வு வினாத்தாள்கள் 7 கட்டுப்பாடு மையத்தில் வைத்து சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு டன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இன்று காலை மாணவ-மாணவிகள் சீக்கிரமாக எழுந்து தேர்வுக்கு தயாராகும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்க ளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளிக்கு சென்று சிறிது நேரம் மீண்டும் படித்தனர்.
இதனையடுத்து ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு தேர்வு எழுத சென்றனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.
முதல் 10 நிமிடங்கள் வினா தாளை படிப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனைத்தொ டர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.
தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 105 முதன்மை கண்காணிப்பாளர்கள், 110 துறை அலுவலர்கள், 1,447 அறை கண்காணிப் பாளர்கள், 150 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த குழுவினர் தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஸ்கிரைப் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டி ருந்தனர்.
தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சாரம், போக்குவரத்து வசதிகள் போன்றவை செய்யப்பட்டிருந்தது. விடைத்தாள்களை பாது காப்பாக வைப்பதற்காக மாவட்டத்தில் 4 பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் சி.சி.டி.வி. கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.96 அடியாக குறைந்து உள்ளது.
- அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.96 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 418 கன அடியாக குறைந்தது.
கீழ்பவானி வாய்க்கா லுக்கு வினாடிக்கு 2,300 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 300 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
- நாயை கொன்று படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- இதனையடுத்து தினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே செருப்பின் மீது நாய் அசிங்கம் செய்ததால் நாயை கொன்று அதன் படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முகநூல் பக்கத்தில் கடந்த 9-ந் தேதி இறந்து கிடந்த நாயின் புகைப்படம் ஒன்றை ஒருவர் பதிவிட்டு அதில் "தான் வாங்கி வெச்ச புது செருப்புல அடிக்கடி அசிங்கம் செய்து வந்ததால் போட்டு தள்ளிட்டேன்" என பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த ஈரோடு பழையபாளையம், சுத்தானந்தன் நகரில் வசிக்கும் விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட நபர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட நபர் தேனி மாவட்டம், பெரியகுளம், மங்களம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 25) என்றும்,
இவர் தற்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தங்கியிருந்து கட்டுமான பணிகளுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த தினேசை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில் சென்னிமலை அருகே ஈங்கூர் நால்ரோடு பகுதியில் தினேஷ் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
பின்னர் உடனடியாக விரைந்து சென்று அவரை கைது செய்தனர். இதனையடுத்து தினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
- 50 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து விட்டது.
- தீயணைப்பு வீரர்கள் கயிற்றை பயன்படுத்தி மயிலை உயிருடன் மீட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே பசுவபட்டி ஊத்துக்காடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான சுமார் 50 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து விட்டது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிற்றை பயன்படுத்தி கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்த மயிலை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அந்த மயிலை வனத்துறை அலுவலர் சத்தியமூர்த்தியிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.
- மர்ம விலங்கு தோட்டத்திற்குள் புகுந்தவுடன் அதனை கண்டு மாடுகள் அலறின.
- வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த பேரோடு கிராமம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது. தோட்டத்தில் 8 செம்மறி ஆடுகள், மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம விலங்கு சக்திவேல் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த 8 செம்மறி ஆடுகளை கடித்து குதறியது. இதில் அந்த 8 செம்மறி ஆடுகளும் பரிதாபமாக இறந்தன.
மர்ம விலங்கு தோட்டத்திற்குள் புகுந்தவுடன் அதனை கண்டு மாடுகள் அலறின. மாடுகள் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அப்போது 8 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர். இறந்த ஆடுகள் அனைத்தும் குடல்கள் வெளியே சரிந்த நிலையில் இருந்தன.
இதனால் அந்த மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என அச்சம் அடைந்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கும், சித்தோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்த பகுதியில் பதிவாகியிருந்த மர்ம விலங்கின் கால் தடயங்களை சேகரித்து சென்றனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் நள்ளிரவில் தோட்டத்துக்குள் சிறுத்தை போன்ற உருவத்தில் ஒரு விலங்கு பதுங்கி பதுங்கி வருவது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த விலங்கு சரியாக தெரியவில்லை.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீரேற்று நிலையங்களில் ராட்சத மின் மோட்டார்களை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
- கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராய ன்பாளையத்தில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீரை ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. அளவிற்கு குழாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நீரேற்று திட்டம் தான் அத்திக்கடவு- அவிநாசி திட்டம்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 1756 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் 106 கிமீ தொலைவிற்கு குழாய் அமைத்து 3 மாவட்டங்களில் உள்ள 1045 குளம் குட்டைகளை நிரப்பும் வகையில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திட்டத்திற்காக 6 இடங்களில் நீரேற்று நிலையங்களும. அமைக்கப்பட்டன. பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீரேற்று நிலையங்களில் ராட்சத மின் மோட்டார்களை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கி அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.
- காரின் இடுபாடுகளில் சிக்கி பின் பகுதியில் அமர்ந்திருந்த அபிராமி மற்றும் கனிமொழி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்த னர்.
- தர்மலிங்கம், பானு மதி, வெற்றி மாறன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடை ந்தனர். காரை ஓட்டி வந்த புகழேந்தி காயமின்றி தப்பி னார்.
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரண மான காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த விக்ரம் சுதாகர் (45) என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள பெரிய சேமூர் பாரதி நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருடைய மனைவி அபி ராமி (வயது 34). அதே பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவரின் மனைவி கனிமொழி (28). இவரும், அபிராமியும் உறவினர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் அபிராமி, கனிமொழி அவர்களது உறவினர்கள் பானுமதி (40). அவரின் கணவர் தர்மலிங் கம் (50). அவருடைய மகன் வெற்றிமாறன் (8) ஆகியோர் ஒரு காரில் பெருந்துறை அருகே ஆயிகவுண்டன் பாளையத்தில் உள்ள உற வினர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
தர்ம லிங்கத்தின் மற்றொரு மகன் புகழேந்தி (26) என்பவர் காரை ஓட்டினார்.
இவர்கள் வந்த கார் பெருந்துறை தேசிய நெடுஞ் சாலைக்கு வந்ததும் அங்கு இருந்து குன்னத்தூர் ரோடு பிரிவில் செல்லாமல் வழி தவறி நெடுஞ்சாலை யிலேயே விஜயமங்கலம் நோக்கி நேராக சென்று கொண்டு இருந்தனர்.
ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக புகழேந்தி ஓட்டி வந்த கார் மீது மோதியது.
இதில் புகழேந்தி ஓட்டி வந்த காரின் பின் பகுதி நொறுங்கியது. இதில் காரின் இடுபாடுகளில் சிக்கி பின் பகுதியில் அமர்ந்திருந்த அபிராமி மற்றும் கனிமொழி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்த னர்.
இதில் தர்மலிங்கம், பானு மதி, வெற்றி மாறன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடை ந்தனர். காரை ஓட்டி வந்த புகழேந்தி காயமின்றி தப்பினார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து படுகாயம் அடைந்த 3 பேரை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதி க்கப்பட்டனர்.
தொடர்ந்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரண மான காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த விக்ரம் சுதாகர் (45) என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






