search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "21 thousand 948 students"

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
    • தேர்வு அறைகளில் கண்காணிக்க 150 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கி வரும் ஏப்ரல் 5-ந் தேதி முடிவடைகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 221 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 948 மாணவ, மாணவிகள் 105 மையங்களில் எழுதுகின்றனர். இதேபோல் தனித்தேர்வ ர்கள் 496 பேர் பொதுத்தேர்வு எழுதுவதற்கு 3 தனி மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன.

    முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. தேர்வு வினாத்தாள்கள் 7 கட்டுப்பாடு மையத்தில் வைத்து சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு டன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இன்று காலை மாணவ-மாணவிகள் சீக்கிரமாக எழுந்து தேர்வுக்கு தயாராகும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்க ளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளிக்கு சென்று சிறிது நேரம் மீண்டும் படித்தனர்.

    இதனையடுத்து ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு தேர்வு எழுத சென்றனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.

    முதல் 10 நிமிடங்கள் வினா தாளை படிப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனைத்தொ டர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.

    தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 105 முதன்மை கண்காணிப்பாளர்கள், 110 துறை அலுவலர்கள், 1,447 அறை கண்காணிப் பாளர்கள், 150 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த குழுவினர் தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஸ்கிரைப் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டி ருந்தனர்.

    தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சாரம், போக்குவரத்து வசதிகள் போன்றவை செய்யப்பட்டிருந்தது. விடைத்தாள்களை பாது காப்பாக வைப்பதற்காக மாவட்டத்தில் 4 பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் சி.சி.டி.வி. கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    ×