search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soil was seized"

    • கழிவு மண் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு வீணாகும் கழிவு மண்ணை ஒரு டிப்பர் லாரியில் ஏற்றி தனியாருக்கு சொந்தமான கிரசருக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது ஈங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூர் வழியாக கழிவு மண் ஏற்றி சென்ற லாரி சென்ற போது புலவனூரை சேர்ந்த பொதுமக்கள் கருக்கங்காடு என்ற இடத்தில் அந்த லாரியை சிறை பிடித்தனர்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் முத்துராஜ், ஈங்கூர் கிராம நிர்வாக அலுவலர் ரதிபிரியா, சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், ஈங்கூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பொதுமக்கள் அவர்களிடம் கூறுகையில்,

    தொழிற்சாலை கழிவுகளை லாரியில் கொண்டு சென்று கொட்டுவதால் புலவனூர் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் லாரியில் கொண்டு சென்று கழிவுகளை கொட்ட கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறை பிடிக்கப்பட்ட லாரியை போலீசார் சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

    ×