search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in sales"

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
    • மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கி செல்கின்றனர்.

    ஈரோடு;

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் உச்சம் அதிக அளவில் உள்ளது. வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இரவு நேரங்களில் வீடுகளில் வெயில் தாக்கம் அதிக அளவில் தெரிகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், கரும்பு பால், தர்பூசணி ஆகியவற்றை அதிகம் விரும்பி பருகி வருகின்றனர்.

    இதனால் வீடுகளில் பெரும்பாலா னவர்கள் பிரிட்ஜில் தண்ணீர் வைத்து பருகி வருகின்றனர்.

    அதேபோன்று மண்பானையி லும் தண்ணீர் வைத்து குடிக்க தொடங்கி யுள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

    இது குறித்து மண்பானை விற்பனை செய்வோர் கூறியதாவது:-

    தரமான மண்பானை செய்வதற்காக மண் எடுப்பதில் கட்டுப்பாடு, விதிமுறை அதிகம் உள்ளதால் தயாரிப்பு குறைந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

    சாதாரண மண் பானை 350 ரூபாய், பைப் இணைக்கப்பட்ட மண்பானை ரூ. 450-க்கும் விற்பனை ஆகிறது. உடலுக்கு நல்லது என்ற நோக்கத்தில் வீடு, கடைகள் அலுவலக ங்களு க்காக வாங்கி செல்கின்றனர்.

    மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கி செல்கின்றனர். இதனால் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×