என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த 9 மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சரவணனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
    • தேன்மொழி அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஜீவா நகரைச் சேர்ந்தவர் சரவணன் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி (43). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 9 மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சரவணனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ப்பட்டு பிளேட் வைக்கப்ப ட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டின் அருகில் உள்ள காலியிடத்தில் கிடக்கும் மரத்துண்டுகள், குப்பை களை தீ வைத்து அகற்றிட வேண்டும் என தன் மனைவி யிடம் சரவணன் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் மனைவி தேன்மொழி வெளியில் சென்றிருந்தார். அப்போது அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர் போன் மூலமாக தேன்மொழியைத் தொடர்பு கொண்டு உங்கள் வீடு தீப்பற்றி எரிவதாக கூறி யுள்ளார்.

    இதையடுத்து, தேன்மொழி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது தன் வீட்டின் அருகில் இருந்த மரங்கள், செடி, கொடிகள், குப்பைகள் தீயில் எரிந்து கொண்டி ருந்துள்ளன.

    அதன் அருகில் சரவணன் உடலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து தேன்மொழி அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பழனிச்சாமி சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பவானி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்

    பவானி

    பவானி அருகில் உள்ள கருவாச்சி அம்மன் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (62). விவசாய கூலி தொழிலாளி ஆவார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பவானி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது பவானி சக்தி மெயின் ரோட்டில் வந்தபோது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் பழனிச்சாமி தூக்கி வீசப்ப ட்டு பலத்த காயமடைந்தார். காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

    இறந்த பழனிச்சாமி உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனு ப்பப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து பவானி, ஜம்பை, பாரதி நகர் பகுதி யில் வசிக்கும் ஆனந்தகுமார் (35) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரது 2 முழங்கால்க ளிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (63). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரது 2 முழங்கால்க ளிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு மணி தனது வீட்டினுள் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெருந்துறையில் வசித்து வரும் அவரது மகள் நந்தினிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 அணை நீர் தேக்கமே தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திடம் உள்ளது.
    • நீதிமன்ற தீர்ப்பின்படி பவானிசாகர் அணையின் மீன்பிடிப்பு உரிமையினை எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்க த்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பவானிசாகர் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறியிரு ப்பதாவது:-

    நாங்கள் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் மீனவர்கள். நாங்கள் எப்(பிஎல்) 10 பவானிசாகர் மீனவர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 322 உறுப்பினர்களும், பி.எப். 4 சிறுமுகை மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் 527 உறுப்பினர்கள் உள்ளோம்.

    மேலும் இணை உறுப்பின ர்களாக 586 உறுப்பினர்களும் என மொத்தம் 1435 நபர்கள் இரு சங்கங்களிலும் உறுப்பி னராக உள்ளோம். 622 சங்க உறுப்பினர்கள் அரசால் நியமனம் செய்யப்பட்ட பங்கு மீனவர்கள்.

    நேர்காணம் 622 பங்கு மீனவர்கள் தான் பவானி சாகர் அணையில் மீன் பிடித்து வருகிறோம். மேலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன்பிடிப்பு சம்பந்தப்பட்ட தொழில்க ளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கள் மீன் பிடிப்புக்கு பரிசல், வலை மற்றும் இதர பொருட்களையும் எங்கள் சொந்த செலவில் செய்து வருகிறோம்.

    எங்கள் மீன் பிடிப்பு தொழிலுக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமோ, குத்த கைதாரர்களோ எந்த உதவி யும் செய்வதில்லை.

    இதனால்தான் எங்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி கடந்த வருடம் நவம்பர் மாதம் 21-ந் தேதி மற்றும் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி ஆகிய நாட்களில் 7 அம்ச கோரிக்கை வலி யுறுத்தி கடிதம் அளித்தோம்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் எவ்வித கோரி க்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்று கூறி விட்டார்கள்.

    எனவே பவானி சாகர் அணையின் மீன்பிடிப்பு குத்தகை உரிமையினை இரு கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்கும் பட்சத்தில் பங்கு மீனவர்களின் 7 அம்ச கோரிக்கைகளை இரு கூட்டுறவு சங்கமும் வழங்கும் என்று கூறி யிருந்தோம்.

    அதற்கும் எந்தவித பதி லும் சொல்லவில்லை. இதனை அடுத்து நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்து அரசாணை எண் 332-ன் படி சில நிபந்தனைகளுடன் கூட்டுறவு சங்கத்திற்கே மீன்பிடிப்பு உரிமையினை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    தமிழ்நாட்டில் 56 அணை நீர் தேக்க மீன்பிடிப்பு, மீன் துறை வசம் உள்ளது. அதில் பெரும்பாலான நீர் தேக்க ங்கள் மீனவர் கூட்டுறவு சங்கமே நடத்துகிறது. உதாரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மிகப்பெரிய நீர் சேர்க்கும் ஆகும். அதையே மீனவர் கூட்டுறவு சங்கமே நடத்து கிறது. இவ்வாறு இருக்க மொத்தம் 8 அணை நீர் தேக்கமே தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திடம் உள்ளது.

    இந்நிலையில் தனியா ருக்கு மீன்பிடிக்க குத்தகை க்கு விடப்படுவதால் பங்கு மீன வர்களான நாங்கள் பெரிதும் பாதிக்கப்படு கிறோம்.

    எனவே பவானி சாகர் அணையின் மீன்பிடி ப்பினை நீதிமன்ற தீர்ப்பு ப்படி எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்கத்துடன் வழங்க வேண்டும். அல்லது பழைய முறைப்படி மீன் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

    எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி பவானிசாகர் அணையின் மீன்பிடிப்பு உரிமையினை எங்கள் இரு மீனவர் கூட்டுறவு சங்க த்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓராண்டு க்கு செலுத்த வேண்டிய மீன் பிடிப்பு குத்தகை தொகை, 5 ஆண்டுகள் செலுத்த வேண்டிய ராயல்டி தொகை, மீனவர் நல வாரியத்துக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகை, முன்வைப்பு தொகை ஆகியவற்றை எங்கள் இரு சங்கத்திடமும் பெற்றுக் கொண்டும் இதுவரை இடைக்காலமாக மீன் துறையோ அல்லது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமோ மீன்பிடிப்பினை நடத்தி எங்கள் பங்கு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும்
    • தூய்மைப் பணியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    ஈரோடு

    ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக இன்று நடை பெறவுள்ள டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

    480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஐ ஏப்ரல் முதல் வழங்க வேண்டும்.

    மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., உள்ளிட்ட தொழி ற்சங்க ங்கள் சார்பில் கடந்த 23-ந் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டு னர்கள் உள்ளிட்டோர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி நோய் வரவும் அபாயம் ஏற்பட்டு ள்ளது.

    ஒவ்வொரு நாளும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். தூய்மை பணியா ளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 4 -வது நாளாக நீடித்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சி அலு வலக வளாகத்தில் இன்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மற்றும் தோழமைச் சங்கங்க ளின் நிர்வாகிகள் முன்னி லை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    இதுகுறித்து, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி கூறுகையில், "தூய்மைப் பணியாளர்கள் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.எங்களது தொடர் போராட்டத்தின் விளைவாக தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதன் முடிவைப் பொறுத்து பணியாளர்களின் அடுத்த கட்டப் போராட்டம் முடிவு செய்யப்படும்" என்றார்.

    • கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டு பணிகள் தொடங்க ப்படும் என அறிவிக்க ப்பட்டது.
    • காஞ்சிகோவில் கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்தவிதமான உடைப்பும், பழுதும் ஏற்படாமல் மண் கரையாக உள்ள இடத்தில் இரவு நேர த்தில் பணிகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணை மற்றும் கீழ் பவானி, தட ப்பள்ளி- அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டு பணிகள் தொடங்க ப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகி ன்றனர்.

    மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்கில், பணி களை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யது.

    இதனை தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொட ர்பான அரசணை எண் 276-யை ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டு மான பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகள் வலியுறுத்தி பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற உண்ணாவிரத போரா ட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் விவ சாயிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் பேச்சு வார்த்தை நடை பெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் விவசாயிகள் கீழ்பவானி கால்வாயில் பழு தடைந்த பழைய கட்டு மானத்தை மட்டுமே சீரமைக்க வேண்டும்.

    மண் கரையாக வே இருக்க வேண்டும். அரசணை 276-யை ரத்து செய்வது தொடர்பாக சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். பணிகள் தொடங்கபட்ட இடத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளின் கருத்தை கேட்டு பணிகள் மேற்கொள் வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பட்ட தை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மூலம் அரசாணையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கையை பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்த தை தொடர்ந்து விவ சாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்தவிதமான உடைப்பும், பழுதும் ஏற்படாமல் மண் கரையாக உள்ள இடத்தில் இரவு நேர த்தில் பணிகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் விவசாயிகள் அந்த பகுதியில் இன்று திரண்ட னர். தொடர்ந்து இதனை கண்டித்து கால்வாயில் இறங்கிய அப்பகுதி பாசன விவசாய பொது மக்கள் 200-க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலவியது.

    • ஆந்திர மாநிலத்தின் ராஜ முந்திரி, கடப்பா உள்ளிட்ட வட்டாரங்களில் குண்டு ரக நாவல் அதிக அளவில் பயிரிடப்ப ட்டுள்ளது
    • சென்னிமலை கடை வீதிகளில் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

    சென்னிமலை

    ஆந்திர மாநிலத்தின் ராஜ முந்திரி, கடப்பா உள்ளிட்ட வட்டாரங்களில் குண்டு ரக நாவல் அதிக அளவில் பயிரிடப்ப ட்டுள்ளது.தற்போது ஆந்திர மாநிலத்தில் குண்டு ரக நாவல் பழம் 'சீசன்' தொட ங்கியுள்ளதால் சென்னி மலை கடை வீதிகளில் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பழ வியாபாரி கார்த்தி என்பவர் கூறியதாவது:–-

    குண்டு ரக நாவல் பழம், நாட்டு ரகத்தை விட அள வில் பெரிதாக இருக்கும். இப்பழம் கிலோ 200 ரூபாய்க்கும், நமது தமிழ கத்தில் பல்வேறு மாவட்ட த்தில் விளையும் நாட்டு நாவல் கிலோ 160 ரூபா ய்க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்தார்
    • ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக அந்தியூர் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

    அந்தியூர்

    தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்படுகிறது.அதற்காக கடந்த ஆண்டு டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்தார்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக அந்தியூர் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் மாவட்டத்தில் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சிறந்த பெருமை கிடைத்து ள்ளது. அந்தியூர் போலீஸ் நிலைய த்தில் வழக்கு பதிவு செய்வது முதல் குற்றவாளி களை பிடிப்பது காவல் நிலையத்தை தூய்மையாக வைத்திருப்பது,

    பெண் கைதிகள் குழந்தைகளுடன் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த குழந்தைகள் விளை யாடு வதற்கு போதிய விளையாட்டு பொம்மைகள் காவல் நிலையத்தின் மேல்மாடியில் தனியறையில் வைத்திருப்பது, காவல் நிலையம் முன் பூங்காக்கள் வைத்து பராமரித்து இரு ப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை திறன்பட செய்திருப்பதன் அடிப்ப டையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை பெறுவதற்காக அந்தியூர் போலீஸ் நிலை யத்தில் இருந்து.நிலைய பொறுப்பு அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சென்னை செல்ல உள்ளார். அவருக்கு டி.ஜி.பி. சைலேந்தி ரபாபு விருது வழங்க உள்ளார்.

    • தொழிலாளி விகாஷ் மார்க்கி எதிர்பா ராத விதமாக கீழே விழுந்த போது அவர் மீது மண் சரிந்து விழுந்து முற்றிலும் அவரை மூடியுள்ளது
    • முகத்தாடை, வலது மார்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் வடமாநில கட்டிட தொழிலாளி விகாஷ் மார்க்கிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது

    டி.என்.பாளையம்

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் நால்ரோடு அருகேயுள்ள காளியூர் காலனி பகுதியில் தரைப்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.இதில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

    அப்போது பாலத்தின் பக்கவாடுகளில் இரும்பு தகரம் பொருத்தும் பணி நடைபெற்று போது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழி லாளி விகாஷ் மார்க்கி (19) பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்பொழுது எதிர்பா ராத விதமாக விகாஷ் மார்க்கி தவறி கீழே விழுந்த போது அவர் மீது மண் சரிந்து விழுந்து முற்றிலும் அவரை மூடியுள்ளது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த சத்திய மங்கலம் தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடம் போரா ட்டத்திற்கு பிறகு விகாஷ் மார்க்கியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். சிறு காயங்களுடன் மீட்க ப்பட்ட விகாஷ் மார்க்கியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக விகாஷ் மார்க்கியை கோபியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

    முகத்தாடை, வலது மார்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் வடமாநில கட்டிட தொழிலாளி விகாஷ் மார்க்கிக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.இச்சம்பவத்தில் துரித மாக செயல்பட்டு வடமாநில கட்டிட தொழி லாளியை உயிருடன் மீட்டு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த சத்தியமங்கலம் தீயணைப்பு துறை வீரர்க ளை மக்கள் வெகு வாக பாராட்டினர்.

    • சாமிநாதன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
    • ஜோகித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு எல்லப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி(52). இவர் ஈரோடு ஆவினில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வேலுச்சாமி(52). ஜே.சி.பி. சொந்தமாக வைத்து தொழில் செய்து வருகிறார். இவர்களது மகன் ஜோகித்(24). உக்ரைன் நாட்டில் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) படித்து வருகிறார்.

    இந்நிலையில் தனலட்சுமி, வேலுச்சாமி, ஜோகித் ஆகியோர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த சாமிநாதன் மகன் கவியரசு, அவரது நண்பர் நவீன் வர்ஷன் ஆகியோரை உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.14.96 லட்சத்தை பெற்றனர். ஆனால் ஜோகித் இருவருக்கும் மருத்துவம் சீட் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.

    இதுகுறித்து சாமிநாதன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், தனலட்சுமி, வேலுச்சாமி, ஜோகித் மீது கூட்டு சதி, மோசடி, ஏமாற்றுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 22-ந் தேதி தனலட்சுமி, வேலுச்சாமியை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    ஜோகித்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் தலைறைவான இவர்களது மகன் ஜோகித்தின் பாஸ்போர்ட்டினை முடக்கம் செய்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்தாலும், இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் மருத்துவராக பயிற்சி பெற முடியும். ஜோகித் செல்போன் எண் இந்தியாவில் பயன்படுத்தும் எண்ணாக தான் உள்ளது. ஆனால் கைதான அவரது பெற்றோர் ஜோகித் உக்ரைனில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜோகித் வேறு நாட்டிற்கு புலம் பெயராமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டினை முடக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • டாஸ்மாக் கடைகளில் தரப்படும் மது பாட்டில்கள் சில இடங்களில் பிரச்சினையாக உள்ளது.
    • ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    முதலமைச்சர் ஒவ்வொரு மாதமும் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து வருகிறார். இதுவரை என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது, இனிமேல் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் அடிப்படையில் நாங்களும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.

    மதுக்கடையில் தவறுகள் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிப்பது சாதாரணமான விசயம் தான். அவர்கள் அப்படி கூறாமல் இருந்தால் தான் அதிசயம். சில இடத்தில் தவறு நடந்துள்ளதை அனைத்து இடங்களிலும் நடந்துள்ளதாக சித்தரிக்கின்றனர்.

    இதுகுறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மது விற்பனை நேரம் குறைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை, குறைய வேண்டும் என நினைக்கிறோம்.

    மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அபராதம், பணிமாறுதல் செய்யப்படுகிறது. மேலும் அதிக புகார் வந்தால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். முதலில் மதுக்கடை பணியாளர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு வருகிறோம். அவர்கள் கூறும் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிகாரிகளுடனும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன். ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். மது விற்பனை அதிகரிப்பது எங்கள் நோக்கமல்ல. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டும் என்பது நோக்கமாகும். மதுக்கடையில் செயல்படும் பார் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கு முடிந்ததும் பார் டெண்டர் வைக்கப்படும் தற்போது லைசன்ஸ் பெற்ற பார்கள் மட்டுமே நடக்கின்றன.

    டாஸ்மாக் கடைகளில் தரப்படும் மது பாட்டில்கள் சில இடங்களில் பிரச்சினையாக உள்ளது. அவைகளைப் பெற்றுக் கொண்டு ரூபாய் பத்து வழங்க தீர்ப்பு உள்ளது. மேலும் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது 500 மது கடைகளை மூடி உள்ளோம். பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த கடைகள் மூடப்பட்டன. இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதமே முடிவெடுக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.
    • அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.

    அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×