சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர்.
சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
Published on

சென்னிமலை:

சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா காலை 10 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து உற்சவர் நடராஜ பெருமானு க்கும், தாயார் சிவகாமி அம்மையாருக்கும் தேன், பால், தயிர் உள்பட 16 திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன் பின்பு அலங்கார பூஜை நடந்தது.

பூஜைகளை சென்னி மலை முருகன் கோவில் ஸ்தானீகம் ராஜசேகர் சிவாச்சாரியார் தலைமை யில் ரவி குருக்கள், செல்வ ரத்தின குருக்கள், பிரபு குருக்கள், மாணிக்கம் குரு க்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த ஆனி திருமஞ்சன அபிேஷக விழாவில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர். கட்டளை தாரர்கள் சார்பாக பக்தர்க ளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com