என் மலர்
ஈரோடு
- விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தாளவாடி வட்டாரத்தில் இக்கலூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.
ஈரோடு:
வேளாண்மை எந்திர மயமாக்குதலின் உப இயக்கத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் நடப்பு நிதி யாண்டில் ஈரோடு மாவட்ட த்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சிறு, குறு பெண் விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவின ருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டில் 42 கிராம ஊராட்சியில் இத்திட்டம் செயல்படுத்த ப்பட உள்ளது. அதன்படி அம்மாபேட்டை வட்டா ரத்தில் சிங்கம்பேட்டை, ஓடப்பாளையம், பூதப்பாடி, படவல்கால்வாய், அந்தியூர் வட்டாரத்தில், கெட்டி சமுத்திரம், மூங்கில்பட்டி, பவானி வட்டாரத்தில் பருவாச்சி, வைரமங்கலம், ஆலத்தூர், பவானி சாகர் வட்டாரத்தில் மாதம் பாளையம், நொச்சிகுட்டை, புங்கார்.
கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் நாகதேவம் பாளையம், பெருந்தலையூர், குள்ளம்பாளையம், பாரியூர், நம்பியூர் வட்டாரத்தில் பொலவபாளையம், கடத்தூர், தாழ்குனி, சத்திய மங்கலம் வட்டாரத்தில் குமாராபாளையம், இக்கரை நகமம், புதுப்பீர்கடவூர். டி.என்.பாளையம் வட்டா ரத்தில் கொங்கர்பாளையம், புள்ளப்ப நாயக்கன் பாளை யம், தாளவாடி வட்டாரத்தில் இக்கலூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்படுத்த ப்படுகிறது.
ஈரோடு வட்டாரத்தில் பிச்சாண்டாம்பாளையம், சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், குப்பிச்சிபாளையம், முகாசிபுலவன்பாளையம், குட்டப்பாளையம், கொடு முடி வட்டாரத்தில் அஞ்சூர், நஞ்சை கொளாநல்லி. மொ டக்குறிச்சி வட்டாரத்தில் குலவிளக்கு, குளூர், விள க்கேத்தி, பெருந்துரை வட்டாரத்தில் சிங்காநல்லூர், கருக்குபாளையம், பாப்ப ம்பாளையம், பெரிய வில்லாமலை, பொலவ நாயக்கன்பாளையம், பெரிய வீரசங்கிலி ஆகிய கிராம ஊராட்சிகள் தேர்வாகி உள்ளது.
இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மானி யத்தில் பவர்டில்லர் அல்லது களைஎடுக்கும் கருவி பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல விப ரங்களுக்கு உதவி செயற் பொறியாளர், வேளா ண்மை ப்பொறியியல்துறை, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப ங்களை உடனடியாக அலு வலகத்தில் பதிவு செய்து பயனடையலாம் என கலெ க்டர் ராஜகோபால் சுங்கார கேட்டு க்கொண்டுள்ளார்.
- ரோட்டில் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது.
- போலீசார் டிரைவர் கார்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
ஈரோடு திண்டல் வள்ளி புரத்தான் பாளையத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி வேனில் வழக்கம் போல் இன்று காலை பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தது. ேவனை ஈரோடு கருங்க ல்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி ஓட்டி வந்துள்ளார். இந்த வேனில் உதவியாளர் சசிகலா மற்றும் 14 மாணவர்கள் இருந்தனர்.
தொடர்ந்து பள்ளி வேன் பவானி- அந்தியூர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தது. வேன் அந்தியூர் பிரிவு பகுதியில் வரும் போது எதிர்பாராத விதமாக திடீரென ரோட்டில் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. இதையடுத்து வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் அலறினர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பவானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதை யடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனில் இருந்த மாணவ, மாணவிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
இந்த விபத்தில் பவானி, வர்ண புரம் 5-வது வீதியை சேர்ந்த மாணவி அனுஸ்ரீ (13), பவானி பழனிபுரம் பகுதி யை சேர்ந்த மாணவி தக்க்ஷாநிதி (11), வாய்க்கால் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகவா (4) ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து பவானி போலீசார் டிரைவர் கார்த்தி யிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றுக் கொண்டு வந்த பள்ளி வேன் ரோட்டின் பக்கவாட்டுச் சுவரில் மோதி கவிந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பவானி பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அ.தி.மு.க. மீனவர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
- முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் அ.தி.மு.க. மீனவர் அணி சார்பில் மீனவர் அணி ஒன்றிய செயலாளர் விசுவ நாதன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
மீனவர்கள் மற்றும் மீனவ சங்கத்தின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் மீன்பிடி பொது ஏல அறிவிப்பை கொண்டு வந்த தி.மு.க. அரசின் அறிவிப்பை நிறுத்தி வைப்பதற்கும், சட்டத்தின் மூலமாக மீன்பிடிக்கும் உரிமை மீனவர்கள் சங்கங்களுக்கே உரிமை உண்டு என்ற நிரந்தரமான நல்ல தீர்ப்பை பெறு வதற்கும் உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பா ளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
மீனவர்களின் நலன் காக்கும் வகையில் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் இயக்கம் அ.தி.மு.க.. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் இன்று மனம் மாறி இருக்கிறார்கள். ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என்று மக்கள் நினைத்து கொண்டு இருக்கும் நேரம் இந்த நேரம்.
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையில் 40 இடமும் வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தல் வரும்போது தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக எடப்பாடியார் தலைமையில் சட்டமன்றம் உருவாகும். இது எவராலும் மாற்றிகாட்ட முடியாது என்பதை மக்களே மாற்றி காட்டுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கி ன்றேன்.
தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டு ள்ளது. இன்னும் சில மது கடைகள் மூட வேண்டும் என்பது மக்களின் கோரி க்கை. எந்த பகுதியில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்துகின்றா ர்களோ அந்த இடங்களில் மூடினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பர்கூர் உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக் கல்வித்து றையை பொறுத்தவரை ஆதி திராவிட நலத்துறை பழங்குடி பள்ளி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி அனைத்தும் ஒன்றாக இணைக்கப்ப ட்டுள்ளது.
அனைத்திற்கும் ஆசிரியர்கள் தேவை என்ற முறையில் அதை பூர்த்தி செய்வதாக சட்டமன்றத்தில் உரையாற்றும்போது கூறினார்கள். இன்று வரை ஆசிரியர்கள் நிரப்பப் படவில்லை. அவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் நிரப்பப் படவில்லை என்றாலும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக தற்காலிக ஆசிரியர் களை நியமிக்கலாம்.
அதற்கு விதிமுறை இருக்கின்றது.ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் படித்து விட்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏராள மானோர் உள்ளார்கள். அவர்களை கொண்டு எந்தெந்த பாடத்திற்கு தேவையான ஆசிரியர்களை நியமித்தால் மாணவர் களுக்கு சிறந்த கல்வியை தர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேவராஜ் வரவேற்றார். ஒன்றிய துணைச்செயலாளர் எஸ். ஜி.சண்முகானந்தம் வாழ்த்துரை வழங்கினார். கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மோகன் குமார் சிறப்புரை யாற்றினார்.
ஒன்றிய செயலாளர் நாராயணன், அந்தியூர் நகரச்செயலாளர் டி.எஸ். மீனாட்சி சுந்தரம், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.பி.பழனிச்சாமி, நகர பேரவை செயலாளர் பாலுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் டி.கே.வி.ஈஸ்வரன், மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் ராஜா சம்பத், அந்தியூர் தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ்,
மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அலையோசை அந்தோணி, அத்தாணி பேரூராட்சி கவுன்சிலர் வேலு மருதமுத்து, ரமேஷ், கனகராஜ், 1-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன், ஒன்றிய பேரவை செயலாளர் ஓட்டல் கிருஷ்ணன், சவுந்தர், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராமச்சந்திரன், துணைச்செயலாளர் எம்.எஸ்.சந்திரன்,
சிறுபான்மை பிரிவு ஜான்சன், பிரம்மதேசம் நடராஜ், மீனவர் அணி நிர்வாகிகள் ராமர், மணி, மூர்த்தி, ராஜா, துரைசாமி, மணிகண்டன், சரவணன், பிரகாஷ், கார்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர இளைஞரணி செயலாளர் பார்மோகன் நன்றி கூறினார்.
- லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
- போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ரைஸ் மில் அருகே ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு வெள்ளை சீட்டில் எண்கள் எழுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆப்பக்கூடலை சேர்ந்த மணி (49), சித்தோட்டை சேர்ந்த தனசண்முகமணி (45), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (45), குமார் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276- ரத்து செய்ய வேண்டும்.
- காஞ்சிகோயில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் நடந்தது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் மூலமாக கீழ் பவானி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பெரிய பாசனமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது.
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாக பிரிந்து எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இப்பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276- ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பாசன விவசாய பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் காஞ்சிகோயில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் நடந்தது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாய்க்கால் சீரமைப்பு ஒப்பந்ததாரர்கள் எந்திரங்களை கொண்டு வாய்க்கால் கரையில் உள்ள மண்ணை அகற்றி உள்ளனர்.
இதைப்பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். கீழ்பவானி வாய்க்கால் கரையை பலப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கருங்கரடுவில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்குள்ள வாய்க்காலுக்குள் இறங்கி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பெருந்துறை தாசில்தார் பூபதி, பெருந்துறை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உள்பட பல்வேறு அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் நல்ல நிலையில் இருந்த கால்வாயில் கரையை உடைத்த பகுதியை மீண்டும் அதை மண்ணை கொண்டு பலப்படுத்த வேண்டும் அமைக்க கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனினும் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த காத்திருப்பு போராட்டம் இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
- போதை பொருட்கள் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், தனிப்பிரிவு போலீஸ் சதாசிவம் மற்றும் போலீசார் இணைந்து நள்ளிரவு 1 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 3 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட கஞ்சா ஒரு கிலோ, பான் மசாலா ஹான்ஸ் 30 கிலோ, விமல் பாக்கு 33 கிலோ, கூல் லிப் 12 என மொத்தம் 97 கிலோ போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்கு கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும்.
இதனையடுத்து போலீசார் அவர்கள் குறித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி, கே.எம்.எஸ். ஹவுஸ் வீடியோ சேர்ந்த அபூபக்கர் (50), புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினம், வடக்கு தெருவை சேர்ந்த முகமது இட்ரோஸ் (27), மணல் மேல்குடி, வடக்கு தெருவை சேர்ந்த ஷேக் அப்துல்லா அகமது (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் பிரிவு வி.என்.எஸ் நகர் பகுதியில் தங்கியிருந்து போதை பொருட்களை வாங்கி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 97 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருட்கள் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (30). இவரது மனைவி ராஜேஸ்வரி (25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான ராஜேஸ்வரிக்கு கடந்த 21-ந்தேதி அதிகாலையில் வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. ராஜேஸ்வரிக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குழந்தை பிறந்த பின் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி, கடந்த 24-ந்தேதி சிகிச்சை முடிந்து குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது குழந்தையின் மூக்கிலும், வாயிலும் தாய்ப்பால் வெளியே வந்து மூச்சுவிட சிரமப்பட்டுள்ளது. இதையடுத்து சோலாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவரின் பரிந்துரையின்படி குழந்தைகள் நல மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெருந்துறை, கருங்கல்பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- அவர்களிடமிருந்து 78 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி பெருந்துறை, கருங்கல்பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிலர் அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, பெருந்துறை கருமாண்டிசெல்லி பாளையத்தைச் சேர்ந்த சரவணன் (37), ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (31), சத்தியமங்கலம் கரட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (26), பவானி தொட்டி பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி (44) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 78 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
- லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அறிவிக்கப்பட்டது
- எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்
ஈரோடு
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரி, கிரஷர் மற்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் சுப்பிரமணி கூறியதாவது:- எங்களது சங்கத்தின் மா நில நிர்வாக குழுக் கூட்டத்தின் முடிவின்படி, எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
ஈரோடு மாவட்டத்தில் 16 கல்குவாரிகள், 1,500 லாரிகள் உள்ளன.இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எனவே, எங்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து இத்தொழிலையும், அதை நம்பியுள்ளோரையும் பாதுக்காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு காரை வாய்க்கால் செல்லும் வழியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கி கிடந்தார்.
- இதுகுறித்து ஈரோடு டவுன் வி.ஏ.ஓ. சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில், டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு காரை வாய்க்கால் செல்லும் வழியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கி கிடந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? போன்ற விவரங்கள் தெரியவில்லை.இதுகுறித்து ஈரோடு டவுன் வி.ஏ.ஓ. சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில், டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.எஸ். ரோடு, வி.ஐ.பி. நகரைச் சேர்ந்தவர் ரஞ்சிதம் (51). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவர்களது மகன் சக்தி வேல் (31). ஈரோட்டில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவ னம் ஒன்றில் பீஸ் செக்கிங் வேலை பார்த்து வருகிறார்.
சக்திவேல் தனக்கு திருமணமாகவில்லை என விரக்தியில் இருந்து வந்ததா கத் தெரிகிறது. இந்த நிலை யில் சம்பவத்தன்று அதிகாலையில் விஷம் குடித்த சக்திவேல் அலறியுள்ளார்.
தாய் ரஞ்சிதம் அவர் படுத்திருந்த அறைக்கு சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலை யில் சக்திவேல் கிடந்து ள்ளார். உடனடியாக சக்தி வேலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
- ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை
- அணைக்கு வினாடிக்கு 182 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
ஈரோடு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வரு கிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.32 அடி யாக சரிந்து உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1138 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று மேலும் நீர் வரத்து குறைந்து அணைக்கு வினாடிக்கு 182 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி நீர் தொடர்ந்து திறக்க ப்பட்டு வருகிறது.






